கேள்வி
ஏதேன் தோட்டம் அமைந்துள்ள இடம் எங்கே?
பதில்
ஏதேன் தோட்டத்தின் இருப்பிடத்தைப் பற்றி வேதாகமம் நமக்குச் சொல்லும் ஒரே விஷயம் ஆதியாகமம் 2:10-14 இல் காணப்படுகிறது, “தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று. முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும். அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக் கல்லும் உண்டு. இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்.” பைசோன் மற்றும் கீகோன் நதிகளின் சரியான அடையாளங்கள் தெரியவில்லை, ஆனால் இதெக்கேல் மற்றும் ஐபிராத்து நதிகள் நன்கு அறியப்பட்டவை.
இன்று குறிப்பிடப்பட்டுள்ள இதெக்கேல் மற்றும் ஐபிராத்து அந்த பெயர்களில் அதே நதிகளாக இருக்குமானால், அது ஏதேன் தோட்டத்தை மத்திய கிழக்கில் எங்காவது கொண்டிருக்கும், அநேகமாக ஈராக்கில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இந்த கிரகம் மிகவும் பசுமையாக இருந்த மத்திய கிழக்குப் பகுதி - ஏதேன் தோட்டம் இருந்த இடம் என்பது வெறும் தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது. பெரும்பாலான விஞ்ஞானிகள் நம்புவது போல, எண்ணெய் என்பது முதன்மையாக அழுகிய தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பொருள் என்றால், இந்த பகுதியில்தான் எண்ணெய்யின் மிகப்பெரிய வைப்புகளை நாம் எதிர்பார்க்கலாம். தோட்டம் முழுமையின் உருவகமாக இருந்ததால், பூமியின் மிகச் சிறந்த மற்றும் செழிப்பான கரிமப் பொருட்களின் சிதைவு பூமியின் சிறந்த எண்ணெயின் பரந்த களஞ்சியங்களை உற்பத்தி செய்யும் என்பதற்கு இதுவே காரணம்.
பல நூற்றாண்டுகளாக ஏதேன் தோட்டத்தை மக்கள் தேடியும் பயனில்லை. ஏதேன் தோட்டத்தின் அசல் இடம் என்று மக்கள் கூறுகின்ற பல்வேறு இடங்கள் உள்ளன, ஆனால் நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. ஏதேன் தோட்டத்திற்கு என்ன ஆனது? வேதாகமம் குறிப்பாக சொல்லவில்லை. ஏதேன் தோட்டம் ஜலப்பிரளயத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அது பல நூற்றாண்டுகளாக மணல் படிவுகளுக்கு அடியில் புதைக்கப்பட்ட எண்ணெயாக சிதைந்து கிடக்கலாம்.
English
ஏதேன் தோட்டம் அமைந்துள்ள இடம் எங்கே?