settings icon
share icon
கேள்வி

ஓரிண சேர்க்கை/ஒரே பாலின திருமணத்தை பற்றி வேதம் என்ன சொல்லுகிறது?

பதில்


வேதாகமம் ஓரினச்சேர்க்கையைப் பற்றி குறிப்பிடும்போது, ஓரினச்சேர்க்கையின் திருமணத்தைப் பற்றி வெளிப்டையாக ஒன்றும் குறிப்பிடவில்லை. எனினும், ஓரினச்சேர்க்கை அசுத்தம் என்றும் இயற்கைக்கு மாறான பாவம் என்றும் வேதாகமம் மிகத்தெளிவாக கண்டிக்கிறது. பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது என்று லேவியராகமம் 18:22 கூறப்பட்டுள்ளது. ஓரினச்சேர்க்கையின் விருப்பங்களும் கிரியைகளும் வெட்கதிற்குறியவைகள் என்றும், இயற்கைக்கு மாறானதென்றும், இச்சைக்குறியதென்றும், அநாகரிகமானதென்றும் (ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பிக்கிற செயல்) ரோமர் 1:26-27-ல் சொல்லப்பட்டிருக்கிறது. ஓரினச்சேர்க்கையாளர்கள் அநியாயக்காரர் என்றும் அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்றும் 1 கொரிந்தியர் 6:9 கூறுகிறது. ஓரினச்சேர்க்கையின் விருப்பங்களையும் கிரியைகளையும் வேதாகமம் கண்டிக்கிறதினால், ஓரினச்சேர்க்கையின் திருமணம் என்பதும் தேவ சித்தம் அல்லவென்றும் அது பாவம் என்பதும் தெளிவாகிறது.

வேதம் திருமணம் என்று கூறும்போதெல்லாம் அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உண்டாகும் ஒரு ஐக்கியத்தை பற்றி தான் சொல்லுகிறது. ஆதியாகமம் 2:24ல் முதல்முறையாக திருமணம் என்று சொல்லப்படும்போது, அது ஒரு ஆண் தன் பெற்றோரை விட்டு பிரிந்து மனைவியோடே இசைந்திருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளது. திருமணத்தைப் பற்றி கூறியிருக்கும் வேதப்பகுதிகள் யாவும் உதாரணமாக 1 கொரிந்தியர் 7:2-16 மற்றும் எபேசியர் 5:23-33 போன்றவை, திருமணம் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கு இடையே நடைபெறுவதாகத்தான் கூறுகின்றன. வேதாகமத்தின்படி, திருமணம் என்பது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்னுக்கு இடையே ஏற்படுகிற வாழ்நாள் ஐக்கியம் ஆகும், மற்றும் அதன் நோக்கம் ஒரு குடும்பத்தைக் கட்டுகிறதற்கும் அந்த குடும்பத்தி்ற்க்கு ஒரு ஸ்திரமான சூழ்நிலையை உண்டாக்குவதற்குமே ஆகும்.

திருமணத்தைக் குறித்த புரிந்துகொள்ளுதலை விளக்குவதற்கு வேதாகமம் மட்டும் பயன்படுத்தப்படவில்லை. திருமணத்தைக்குறித்த வேதாகம கண்ணோட்டம் உலக சரித்திரத்திலுள்ள எல்லா மனித நாகரீகங்களிலும் உள்ள புரிந்துகொள்ளுதல் என்பது தெளிவாகிறது. ஓரினச்சேர்க்கை திருமணத்தை சரித்திரமும் எதிர்க்கிறது. ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் நிறைவு உண்டாக்குகிற நிலையில் அமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நவீன மனோதத்துவ சாஸ்திரம் சொல்லுகிறது. ஒரு குடும்பத்தில், ஒரு ஆண் மற்றும் பெண் இருவருக்கும் உள்ள நல்ல உறவும் அவரவர் தங்கள் பாலின பங்கை சரியாக செய்வதினாலும், பிள்ளைகளை வளர்க்க நல்ல சூழ்நிலையை உண்டாக்க முடியும் என்று மனோதத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள். மனோதத்துவ சாஸ்திரம் ஓரினச்சேர்க்கைக்கு எதிராக கூறுகிறது. இயற்கையின்படி/சரீரப்பிரகாரமாகப் பார்க்கும்போது, பாலியல் உறவில் ஆண் மற்றும் பெண் “இணையும்படி” அமைக்கப்பட்டிருக்கிறார்கள். இயற்கையாக பாலியல் உறவின் நோக்கம் பிள்ளைகளை பெற்றெடுப்பதாக இருப்பதால், ஆண் மற்றும் பெண் சேர்வதின் மூலம் மட்டுமே இந்த நோக்கம் நிறைவேற்றபடும். ஆக இயற்கையின் நியதியும் ஓரினச்சேர்க்கைக்கு எதிராக கூறுகிறது.

இப்படியாக, வேதாகமம், சரித்திரம், மனோதத்துவம், மற்றும் இயற்கை என இவைகளெல்லாம் திருமணம் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இணையும் ஐக்கியத்தில்தான் இருக்கிறது என்று விவாதிக்கிறபோது – ஏன் ஓரினச்சேர்க்கை திருமணத்தைக் குறித்து இன்று அநேக விவாதங்கள் நடைபெறுகின்றன? மிக மரியாதையோடு எதிர்த்தாலும்கூட, ஏன் ஓரினச்சேர்க்கை திருமணத்தை எதிர்ப்பவர்கள், அவர்களை வெறுப்புடையவர்கள், இணைந்துபோகாதவர்கள் என்றெல்லாம் ஏன் அழைக்கிறார்கள்? எண்ணற்ற ஜனங்கள், பல்வேறு மதத்திற்குட்பட்டவர்கள் மற்றும் பொது ஜனங்கள், ஓரினச்சேர்க்கை தம்பதியினர் ஒரு தனி உரிமை ஐக்கியத்தின் மூலம் இணைந்து, திருமணமானவர்களைப் போல எல்லா சலுகைகளையும் அனுபவிக்கலாம் என்று சொல்லியும், ஓரினச்சேர்க்கை இயக்கம் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்காக ஏன் மிகவும் தீவிரமாக போராடுகிறார்கள்?

இதற்கு பதில் என்னவென்றால், ஓரினச்சேர்க்கை என்பது பாவம் என்றும் இயற்கைக்கு மீறின செயல் என்றும் எல்லாருக்கும் தெரியும் என்று வேதாகமம் சொல்லுகிறது. இந்த உள்ளறிவை முற்றும் அழிக்க வேண்டுமானால் ஓரினச்சேர்க்கையை சகஜமான ஒன்றாக மாற்றி அதை எதிர்க்கும் எல்லோரையும் தாக்கவேண்டுவது அவசியமாகும், அதனால் தான் அவர்கள் இப்படிச்செய்கிறார்கள். ஓரினச்சேர்க்கைத் திருமணத்தையும் மற்றும் பாரம்பரிய இரு-பாலினர் திருமணத்தையும் ஒரே சமமாகவைப்பது தான் ஓரினச்சேர்க்கையை சகஜமான ஒன்றாக மாற்ற சிறந்த வழி என்று அவர்கள் எண்ணுகிறார்கள். ரோமர் 1:18-32 இதை தெளிவாக விளக்குகிறது. சத்தியத்தை தேவன் எளிதாக மாற்றினதினால், சத்தியம் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. இந்த சத்தியமானது புறக்கணிக்கப்பட்டு அதன் இடத்தில் பொய் வைக்கப்பட்டு இருக்கிறது. பிறகு இந்த பொய்யானது அதிகமாக ஊக்குவிக்கப்பட்டு, சத்தியம் அடக்கிவைக்கப்பட்டும் தாக்கப்பட்டும் வருகிறது.

ஓரினச்சேர்க்கைப் போராட்டங்களில் அவர்களை எதிர்க்கிறவர்கள் மேல் இவர்களுக்கு இருக்கும் கடுங்கோபத்தையும் வெறுப்பையும் பார்க்கும்போது அவர்கள் போராடுகின்ற காரியத்தை யாராலும் ஏற்றுக்கொண்டு அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது தெளிவாகிறது. ஒரு பலவீனமான நிலையை மேற்கொள்வதற்கு சத்தம் உயர்த்தப்படவேண்டும் என்பது விவாத புத்தகத்தின் ஒரு பழைமையான சூத்திரமாகும். நவீன ஓரினச்சேர்க்கையின் உரிமை நியமங்களின் விவரத்தை ரோமர் 1:31-ல் பார்க்கிறோம்: அவர்கள் “உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்”.

ஓரினச்சேர்க்கை திருமணத்தை நடத்திக்கொள்ள உத்தரவு கொடுப்பதென்பது, ஓரினச்சேர்க்கை என்கிற வாழ்க்கை முறையானது சரி என்று ஏற்றுக்கொள்வதாகிவிடும், அப்படிக்கூடாது வேதாகமம் ஓரினச்சேர்க்கை என்பது தவறு என்றும் அது பாவம் என்றும் தெளிவாக சொல்லுகிறது. ஓரினச்சேர்க்கை திருமணத்தின் கருத்தை கிறிஸ்தவர்கள் உறுதியாக எதிர்க்கவேண்டும். வேதாகமத்தையல்லாமல் ஓரினச்சேர்க்கையை எதிர்க்கும் வேறு பல வலிமையான மற்றும் தத்துவரீதியான விவாதங்களும் இருக்கின்றன. திருமணம் என்பது ஒரு ஆண் பெண் இணையும் உறவு என்று அறிந்துகொள்ள ஒருவர் சுவிசேஷ கிறிஸ்தவனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

வேதாகமத்தின்படி, திருமணம் என்பது ஒரு மனிதன் மற்றும் மனுஷியின் இடையே தேவன் திருநிலைப்படுத்தப்பட்ட ஒரு ஐக்கியமாகும் (ஆதியாகமம் 2:21-24; மத்தேயு 19:4-6). ஓரினச்சேர்க்கை / ஒரே பாலின திருமணம் என்பது தேவன் உண்டாக்கிய திருமணம் என்று நெறிப்படுத்தப்பட்ட பிரமாணங்களுக்கு எதிரான விபரீதமான ஒரு வக்கிரமான செயலாகும். கிறிஸ்தவர்களான நாம், பாவத்தைப் பொறுத்துக்கொள்ளவோ அல்லது அதை பொருட்படுத்தாமல் இருக்கவோ கூடாது. மாறாக, கிறிஸ்துவின் மூலமாக எல்லோரும் அதாவது ஓரினச்சேர்க்கைக்காரர்களும் கூட, பெறகூடிய பாவ மன்னிப்பையும் தேவ அன்பையும் குறித்து நாம் அவர்களுக்கு சொல்ல வேண்டும். நாம் அன்போடே சத்தியத்தைச் சொல்ல வேண்டும் (எபேசியர் 4:15) மற்றும் “சாந்தத்தோடும் வணக்கத்தோடும்” சத்தியத்திற்காக நாம் போராட வேண்டும் (1 பேதுரு 3:15). கிறிஸ்தவர்களான நாம் சத்தியத்திற்காக நிற்கும்போது நமக்கு எதிர்ப்புகள், அவமானங்கள், மற்றும் உபத்திரவங்கள் வரகூடும். அப்பொழுது இயேசு சொன்ன இந்த வார்த்தைகளை நினைவில் கொண்டுவர வேண்டும்: “உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது” (யோவான்15:18-19).

English



முகப்பு பக்கம்

ஓரிண சேர்க்கை/ஒரே பாலின திருமணத்தை பற்றி வேதம் என்ன சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries