கேள்வி
குளோசோலாலியா என்றால் என்ன?
பதில்
குளோசோலாலியா, சில சமயங்களில் "பரவசநிலை உச்சரிப்புக்கள்" என்று குறிப்பிடப்படுகிறது, இது ஒருவர் பரவச நிலையில் இருக்கும்போது புரிந்துகொள்ள முடியாத, மொழி போன்ற ஒலிகளை உச்சரிப்பதாகும். குளோசோலாலியா சில சமயங்களில் ஜெனோகுளோசியாவுடன் தவறாக புரிந்துகொள்ளப் படுகிறது, இது வேதாகம "அந்நியப்பாஷை வரம்" ஆகும். இருப்பினும், குளோசோலாலியா என்பது இல்லாத மொழியில் தொணதொணப்பாய் பேசிக்கொண்டிருக்கும் போது, ஜெனோகுளோசியா என்பது பேசுகிறவர் தாம் கற்றுக்கொள்ளாத ஒரு மொழியில் சரளமாக பேசும் திறன் ஆகும்.
கூடுதலாக, ஜெனோகுளோசியா என்பது ஒரு உள்ளார்ந்த அல்லது இயல்பாக இருக்கும் ஒரு திறன் அல்ல, மறுபுறம் ஆய்வுகள் குளோசோலாலியா ஒரு கற்றறிந்து பேசப்படும் காரியம் என்று காட்டுகின்றன. லூத்தரன் மருத்துவ மையத்தால் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், எளிய வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் குளோசோலாலியா எளிதில் கற்றுக்கொள்ளப்படுகிறது என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, பரவச நிலை போன்ற மயக்கநிலை அல்லது நடத்தைகளின் அறிகுறிகள் இல்லாத நிலையில் மாணவர்கள் "அந்நியபாஷைகளில் பேசுவதை" வெளிப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டது. அறுபது மாணவர்களுடன் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில், ஒரு நிமிட குளோசோலாலியா மாதிரியைக் கேட்ட பிறகு, 20 சதவிகிதத்தினர் அதைத் துல்லியமாகப் பின்பற்ற முடிந்தது. சில பயிற்சிக்குப் பிறகு, 70 சதவீதம் பேர் அதில் வெற்றி கண்டனர்.
உலகின் ஒவ்வொரு பகுதியிலும், குளோசோலாலியாவைக் காணலாம். உலகெங்கிலும் உள்ள பிற சமயத்தின் மதங்கள் அந்நியபாஷைகளில் வேசுவதிலே வெறி கொண்டுள்ளன. சூடானில் உள்ள ஷாமான்கள் சமய வழிபாட்டு முறை, ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையின் ஷாங்கோ வழிபாட்டு முறை, எத்தியோப்பியாவின் ஜோர் வழிபாட்டு முறை, ஹைட்டியில் உள்ள வூடூ வழிபாடு மற்றும் தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் அபோரின்கள் இதில் அடங்குவர். புனிதமான மனிதர்களால் ஆழமான மாய நுண்ணறிவு என்று கருதப்படும் தொணதொணப்பு அல்லது முணுமுணுப்பாய் பேசுவது ஒரு பழங்கால நடைமுறையாக இருந்து வந்தது.
குளோசோலாலியாவுக்கு அடிப்படையில் இரண்டு அம்சங்கள் உள்ளன. முதலாவதாக மொழி போன்ற ஒலிகளில் பேசுவது அல்லது முணுமுணுப்பது. நடைமுறையில் எல்லோரும் இதைச் செய்ய முடியும்; குழந்தைகள் கூட அவர்கள் மொழியைக் கற்றுக்கொண்டு பேசுவதற்கு அல்லது புரிந்துகொள்ள முடியாததாக இருந்தாலும் முன்பே உண்மையான ஒத்ததாய் மொழியைப் பேச முடியும். இதில் அசாதாரணமானது எதுவுமில்லை. குளோசோலாலியாவின் மற்றொரு அம்சம் பரவசம் அல்லது தரிசனம் கண்டு தன்னை மறந்தது போன்ற உற்சாகத்தின் உச்சக்கட்டம். மொழி போன்ற ஒலிகளை எழுப்புவது, இது வேண்டுமென்றே செய்வது மிகவும் கடினம் என்றாலும் இதில் அசாதாரணமான எதுவும் இல்லை.
சில கிறிஸ்தவர்கள், குறிப்பாக பெந்தேகோஸ்தே இயக்கத்திற்குள், புதிய ஏற்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ளதைப் போன்று குளோசோலாலியாவுக்கு ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட விளக்கம் இருப்பதாக நம்புகிறார்கள். யோவேல் (அப். 2:17) முன்னறிவித்த பெந்தெகொஸ்தே நாளில் (அப். 2) பரிசுத்த ஆவியானவர் தங்கள் மீது ஊற்றப்படுவதை வெளிப்படுத்துவதே அந்நியபாஷைகளில் பேசும் வரத்தின் முக்கிய நோக்கம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
குளோசோலாலியா பயிற்சியை ஒரு அளவு அல்லது மற்றொரு நிலைக்கு ஆதரிக்கும் கிறிஸ்தவ சபைகளில், அதன் செயல்பாடுகளுக்கு ஒரே மாதிரியான உடன்பாடு இல்லை. உதாரணமாக, இது உண்மையில் பரிசுத்த ஆவியானவரின் வரம் தான் என்று சிலர் உறுதியாக நம்புகின்றனர், மற்றவர்கள் அதன் முக்கியத்துவத்தை குறைக்கிறார்கள், பவுல் "அந்நியபாஷையில் பேசும்" வரமானது பரிசுத்த ஆவியானவர் அருளும் மற்ற வரங்களைப் போலவே அவ்வளவு முக்கியதத்துவம் வாய்ந்தது அல்ல என்று கூறினார் (1 கொரிந்தியர் 13 ஐப் பார்க்கவும்). மேலும், சபையைப் பிரிப்பதைத் தவிர்க்க விரும்புவோர் அதைப் பற்றி பேசாமல் அல்லது அதை ஒரு எளிய உளவியல் அனுபவமாக நிராகரிக்கிறார்கள். குளோசோலாலியாவை சாத்தானின் ஏமாற்றமாக கருதுபவர்களும் உள்ளனர்.
உலகெங்கிலும் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியான மொழிகள் கேட்கப்படுகின்றன மற்றும் புரிந்துகொள்ளப்படுகின்றன, ஆனால் இருக்கும் மொழிகள் "தன்னிலை மறந்து பேசப்படும் பரவசமான சொற்கள்" அல்லது "அந்நியபாஷை" என்று பேசும்போது அதனைக் கேட்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது. நாம் கேட்பது மிகைப்படுத்தல், கூற்றுகள், குழப்பம் மற்றும் சத்தம் ஆகும். முதல் சபையில், "நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?" (அப் 2:8 NIV) என்று நாம் வெறுமனே அறிவிக்க முடியாது.
எளிமையாகச் சொல்வதானால், குளோசோலாலியாவின் பழக்கம் வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுலுள்ள அந்நியப்பாஷை வரம் அல்ல. அந்நியபாஷைகளில் பேசுவதற்கான வரத்தின் முக்கிய நோக்கம் விசுவாசிக்காதவர்களுக்கும் கிறிஸ்துவின் நற்செய்தியான கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பரப்புவதற்கும் ஒரு அடையாளமாக இருக்க வேண்டும் என்பதை பவுல் தெளிவுபடுத்தினார் (1 கொரிந்தியர் 14:19, 22).
English
குளோசோலாலியா என்றால் என்ன?