கேள்வி
பெருந்தீனி பாவமா? அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்
பெருந்தீனி என்னும் பாவம் கிறிஸ்தவர்கள் புறக்கணிக்க விரும்பும் பாவமாகத் தெரிகிறது. புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை பாவங்கள் என்று முத்திரை குத்துவதற்கு நாம் அடிக்கடி தீவிரமாக விரைந்தோடுகிறோம், ஆனால் சில காரணங்களால் பெருந்தீனி என்னும் பாவம் மட்டும் கிறிஸ்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது அல்லது குறைந்தபட்சம் பொறுத்துக் கொள்ளப்படுகிறது. உடல்நலம் மற்றும் அடிமையாதல் போன்ற புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்படும் பல வாதங்கள் அதிகப்படியான உணவு சாப்பிடும் காரியத்திற்கும் சமமாக பொருந்தும். பல விசுவாசிகள் ஒரு கிளாஸ் மது உட்கொள்வது அல்லது ஒரு சிகரெட் புகைப்பதைக் கூட கருத்தில் கொள்ள மாட்டார்கள், ஆனால் இரவு உணவு மேஜையில் தங்களைத் தாங்களே கூச்சலிடுவதைப் பற்றி எந்தவிதமான மனநிலையும் அவர்களுக்கு இல்லை. இது அப்படி இருக்கக்கூடாது!
நீதிமொழிகள் 23:20-21 நம்மை எச்சரிக்கிறது, “மதுபானப்பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் சேராதே. குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.” நீதிமொழிகள் 28:7 இப்படியாக அறிவிக்கிறது, “வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.” நீதிமொழிகள் 23:2, “நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை” என்று அறிவிக்கிறது.
உடல் பசி என்பது நம்மைக் கட்டுப்படுத்தும் நமது திறனின் ஒப்புமையாகும். நம் உணவுப் பழக்கத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாவிட்டால், மனதின் பழக்கவழக்கங்கள் (காமம், பேராசை, கோபம்) மற்றும் வதந்திகள் பரப்புதல் அல்லது மற்ற சச்சரவுகளிலிருந்து நம் வாயைத் காத்துக்கொள்ள முடியாத பிற பழக்கவழக்கங்களையும் நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றாகிவிடும். நம்முடைய பசியானது நம்மைக்கட்டுப்படுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது, ஆனால் அதற்கு மாறாக நம்முடைய பசியின் மீது நாம் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். (உபாகமம் 21:20; நீதிமொழிகள் 23:2; 2 பேதுரு 1:5-7; 2 தீமோத்தேயு 3:1-9; மற்றும் 2 கொரிந்தியர் 10:5 ஐக் காண்க.) அதிகப்படியான எதையும் “வேண்டாம்” என்று சொல்லும் திறன் – இச்சையடக்கம் (சுயகட்டுப்பாடு) – இது எல்லா விசுவாசிகளுக்கும் பொதுவான நிலையில் காணப்பட வேண்டிய ஆவியின் கனிகளில் ஒன்றாகும் (கலாத்தியர் 5:22).
ருசியான, சத்தான மற்றும் மகிழ்ச்சிகரமான உணவுகளால் பூமியை நிரப்பினதன் மூலம் தேவன் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். இந்த உணவுகளை அனுபவிப்பதன் மூலமும், அவற்றை சரியான அளவில் சாப்பிடுவதன் மூலமும் நாம் தேவனின் படைப்பை மதிக்க வேண்டும். நம் பசியானது நம்மைக் கட்டுப்படுத்த தேவன் அனுமதிப்பதை விட, நம் பசியை நாம் கட்டுப்படுத்தவே அவர் நம்மை அழைக்கிறார்.
English
பெருந்தீனி பாவமா? அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?