கேள்வி
வேதாகமத்தில் மேடைகளின் முக்கியத்துவம் என்ன?
பதில்
மேடைகள் குறித்து மிக எளிமையாக கூறவேண்டுமானால், உயரமான இடங்களில் அல்லது பள்ளத்தாக்கு போன்ற தாழ்வான நிலத்தில் மேடுகள் எழுப்பப்பட்ட பலிபீடங்களில் வழிபடும் வழிபாட்டுத் தலங்களாகும். மேடைகள் முதலில் சிலை வழிபாட்டுக்காக எழுப்பப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டன (எண்ணாகமம் 33:52; லேவியராகமம் 26:30) குறிப்பாக மோவாபியர்களிடையே இவைக் காணப்பட்டது (ஏசாயா 16:12). இந்த கோயில் சன்னிதிகள் பெரும்பாலும் பலிபீடம் மற்றும் பல்வேறு வடிவங்களில் கல் தூண் அல்லது மரக் கம்பம் போன்ற புனிதப் பொருளை உள்ளடக்கி, வழிபாட்டுப் பொருளுடன் (விலங்குகள், விண்மீன்கள், பெண் தெய்வங்கள் மற்றும் நல்லவளம்தரும் தெய்வங்கள்) அடையாளம் காணப்படுகின்றன.
இஸ்ரவேலர்கள், என்றென்றும் தேவனிடமிருந்து விலகி, மோளேகு வழிபாட்டைப் பின்பற்றி, பாகாலுக்கு மேடைகளைக் கட்டினார்கள் (எரேமியா 32:35). சாலமோன் எருசலேமில் தேவனுடைய ஆலயத்தைக் கட்டிய போதிலும், பின்னர் அவன் எருசலேமுக்கு வெளியே தனது அந்நிய தேசத்து மனைவிகளுக்காக சிலை வழிபாட்டுக்குரிய மேடைகளை நிறுவி அவர்களுடன் சேர்ந்து வணங்கினான், இதனால் அவனுக்கு ராஜ்யத்தை இழக்க நேரிட்டது (1 ராஜாக்கள் 11:11). ஆலயம் கட்டப்படுவதற்கு முன்பும் மக்கள் புறமத உயர்ந்த மேடைகளில் பலியிட்டுக் கொண்டிருந்தனர், சாலமோனும் அவர்களுடன் சேர்ந்துகொண்டான். கிபியோனில் ஆண்டவர் அவனுக்கு சொப்பனத்தில் தோன்றிய பிறகு, ராஜா எருசலேமுக்குத் திரும்பிப் பலி செலுத்தினான்; இருப்பினும், அவன் இரண்டு வழிபாட்டுத் தலங்களுக்கிடையில் அலைந்து கொண்டே இருந்தான்.
எல்லா உயர்ந்த மேடைகளும் சிலை வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவில்லை. அவை இஸ்ரவேலரின் வழிபாட்டில் முக்கிய பங்கு வகித்தன, மேலும் ஆபிராம் ஆதியாகமம் 12:6-8 இல் சீகேம் மற்றும் எபிரோனில் கர்த்தருக்குப் பலிபீடங்களைக் கட்டிய பின்னர் "மேடை" என்று அழைக்கப்படும் வழிபாட்டுத் தளத்தின் ஆரம்பகால வேதாகமக் குறிப்பு காணப்படுகிறது. ஆபிரகாம் மோரியாவின் பகுதியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அங்கே தன் மகனைப் பலியிடத் தயாராக இருந்தான் (ஆதியாகமம் 22:1-2). பின்னாட்களில் எருசலேம் தேவாலயம் கட்டப்பட்டது அதே உயரமான இடம் என இந்த தளம் பாரம்பரியமாக நம்பப்படுகிறது. யாக்கோபு பெத்தேலில் கர்த்தருக்கு ஒரு கல் தூணை அமைத்தான் (ஆதியாகமம் 28:18-19), மோசே சீனாய் மலையில் தேவனை சந்தித்தான் (யாத்திராகமம் 19:1-3).
யோர்தானைக் கடந்த பிறகு யோசுவா கல் தூண்களை அமைத்தான் (யோசுவா 4:20) மேலும் இஸ்ரவேலர்கள் யோர்தானிலிருந்து "மேலேறி" உயர்ந்த நிலத்திற்கு வந்ததால் இதை ஒரு உயர்ந்த வழிபாட்டுத் தலமாகக் கருதினான். சாமுவேல் தீர்க்கதரிசி (1 சாமுவேல் 7:16) மேடைகளை தவறாமல் பார்வையிட்டான். கானானியரின் சிலை வழிபாட்டின் தளங்களாக மேடைகள் (நியாயாதிபதிகள் 3:19) எலியாவின் காலம் வரையிலும் நீண்டகாலம் இருந்தன (1 இராஜாக்கள் 18:16-40). தேவனால் பலிக்கு அதிகாரம் அளிக்கப்பட்ட ஒரே ஒரு உயர்ந்த இடம் மட்டுமே இருந்தது, அதுதான் எருசலேமில் உள்ள தேவாலயம் (2 நாளாகமம் 3:1). மற்ற எல்லா மேடைகளையும் அழிக்கும்படி தேவன் கட்டளையிட்டார். 2 ராஜாக்கள் 22-23 இல் யோசியா ராஜா அவைகளை அழித்தான்.
English
வேதாகமத்தில் மேடைகளின் முக்கியத்துவம் என்ன?