கேள்வி
ஒரு கிறிஸ்தவன் ஜாதகத்தைப் பார்க்க வேண்டுமா?
பதில்
ஒரு ஜாதகத்தின் நோக்கம் ஒரு நபருடைய தன்மையைப் பற்றிய நுண்ணறிவைப் பெறுவதும் அவரது எதிர்காலத்தை முன்னறிவிப்பதும் ஆகும். ஜோதிடத்தின் அடிப்படை நம்பிக்கை என்னவென்றால், கிரகங்களும் நட்சத்திரங்களும் நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதாகும். சிறப்பு அறிவு உள்ளவர்கள் - ஜோதிடர்கள் - ஒரு நபரின் வாழ்க்கையில் சம்பவிக்கும் நிகழ்வுகளை கணிக்க முடியும். பெரும்பாலான முக்கிய செய்தித்தாள்கள் ஜாதகக் கட்டுரையைக் கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது, மேலும் பல கிறிஸ்தவர்கள் தங்கள் ஜாதகங்களைப் படிப்பதும் இராசிபலன்களைப் படிப்பதும் இன்னும் வேதனை அளிக்கிறது.
ஜோசியம், சூனியம் மற்றும் மறைவான தந்திர கலைகளை வேதாகமம் வெளிப்படையாக தடை செய்கிறது (உபாகமம் 18:10-14). தேவனுடைய ஜனங்கள் தேவனுக்கு மட்டுமே செவிசாய்க்க வேண்டும் (உபாகமம் 18:15). வழிகாட்டுதல், தகவல் அல்லது வெளிப்பாட்டின் வேறு எந்த ஆதாரமும் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும். (அப்போஸ்தலர் 16:16-18-ஐயும் பார்க்கவும்.) விசுவாசத்தின் ஒரே சரியான மையமாக இயேசு கிறிஸ்துவை வேதாகமம் சுட்டிக்காட்டுகிறது (அப்போஸ்தலர் 4:12; எபிரெயர் 12:2). நம் நம்பிக்கை தேவன் மீது மட்டுமே உள்ளது, அவர் நம் பாதைகளை செவ்வையாக்கி வழிநடத்துவார் என்பதை நாம் அறிவோம் (நீதிமொழிகள் 3:5-6). தேவனைத் தவிர வேறே எதிலும் வைக்கும் நம்பிக்கை தவறானது.
ஜோதிடம், குறைந்தது இரண்டு வழிகளில் வேதாகமப் போதனையை எதிர்க்கிறது: இது தேவனைத் தவிர வேறு ஏதாவது நம்பிக்கையை ஆதரிக்கிறது, மேலும் இது ஒரு வகையான கணிப்பு. ஜாதகம் மூலம் நம் வாழ்வில் தேவனுடைய விருப்பத்தை தீர்மானிக்க முடியாது. கிறிஸ்தவர்களாகிய நாம், ஞானத்தையும் வழிகாட்டுதலையும் பெற வேதாகமத்தை வாசித்து தேவனிடம் ஜெபிக்க வேண்டும். ஒரு ஜாதகத்தை ஆலோசிப்பது தேவன் தேவனுடைய பிள்ளைகளுடன் தொடர்புகொள்வதற்கான வழிமுறைகளை மீறுவதாகும். ஜாதகம் கிறிஸ்தவர்களால் நிராகரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
English
ஒரு கிறிஸ்தவன் ஜாதகத்தைப் பார்க்க வேண்டுமா?