settings icon
share icon
கேள்வி

1 தீமோத்தேயு 3:2-ல் ‘ஒரே மனைவியை உடைய புருஷனும்' என்பதன் அர்த்தம் என்ன?

பதில்


1 தீமோத்தேயு 3:2-ல் கூறப்பட்டுள்ள ஒரே மனைவியை உடைய புருஷனும் என்னும் சொற்றொடருக்கு குறைந்தபட்சமாக மூன்று சாத்தியமான விளக்கங்கள் உள்ளன. 1) பல திருமணங்கள் செய்த நபர் ஒரு மூப்பராக, ஒரு உதவிக்காரராக அல்லது ஒரு போதகர் என்று இருப்பதற்கு தகுதியற்றவர் ஆகிறார். இந்த சொற்றொடரின் ஆங்கில மொழிபெயர்ப்பில் மிகவும் இலக்கிய விளக்கம் இதுவாகும், ஆனால் பவுல் எழுதும் நேரத்தில் பலதாரமணம் மிகவும் அரிதானதாக கருதுபவையாக இருப்பதாக தெரிகிறது. 2) கிரேக்க மொழியில் "ஒரு பெண்-மனிதன்" என மொழிபெயர்க்கப்படலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு பிஷப் அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு முற்றிலும் விசுவாசமாக இருக்க வேண்டும். கிரேக்கத்தில் உள்ள அசல் உரை இங்கே திருமண நிலைப்பாட்டில் கவனம் செலுத்துவதில்லை ஆனால் தார்மீக தூய்மையைக் குறித்து கூறுகிறது என்பதை இந்த விளக்கம் ஒப்புக்கொள்கிறது. 3) ஒரு மூப்பர் / உதவிக்காரர் / போதகராக இருப்பதற்காக ஒரு மனிதன் ஒரு முறை மட்டுமே திருமணம் செய்து கொள்ளலாம், மனைவியை இழந்தவர் மறுமணம் செய்துகொள்ளும் செயலைத் தவிர வேறு திருமணம் செய்து கொள்ள முடியாது என்று அறிவிக்கலாம்; வேறுவிதமாக கூறினால், ஒரு போதகர் ஒரு விவாகரத்து ஆனவராக இருக்க முடியாது.

விளக்கங்கள் 2 மற்றும் 3 இன்று மிக அதிகமாக உள்ளன. விளக்கம் 2 வலுவானதாக இருக்கிறது, முக்கியமாக விதிவிலக்கான சூழ்நிலைகளில் வேதாகமம் விவாகரத்தை அனுமதிக்கிறது (மத்தேயு 19:9; 1 கொரிந்தியர் 7:12-16). விவாகரத்து மற்றும் மறுமணம் போன்றவற்றில் ஒரு நபரை வேறுபடுத்திப் பார்ப்பது முக்கியம். கிறிஸ்தவனாவதற்குப் பிறகு விவாகரத்து செய்து மறுமணம் செய்துகொண்டது மற்றும் ஒரு கிறிஸ்தவனாவதற்கு முன்பு அவர் விவாகரத்து செய்து மறுமணம் செய்துகொண்டதை வேறுபடுத்திக் காணவேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவருடைய இரட்சகராக அறிந்துகொள்ளுவதற்கு முன்பாக மற்ற தகுதிவாய்ந்த மனிதர் திருச்சபை தலைமையிலிருந்து விலக்கப்படக்கூடாது. 1 தீமோத்தேயு 3:2 ஒரு விவாகரத்து அல்லது மறுமணம் செய்தவர் ஒரு மூப்பராக / உதவிக்காரராக / போதகராக பணியாற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறுவதில்லை என்றாலும், மற்ற விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு மூப்பர் / உதவிக்காரர் / போதகரின் முதல் தகுதி "குற்றஞ்சாட்டப்படாதவனாக" இருக்க வேண்டும் (1 தீமோத்தேயு 3:2). விவாகரத்து மற்றும் / அல்லது மறுமணம் வேதாகம அடிப்படையில் இல்லையென்றால், பிறகு அந்த நபர் சபை மற்றும் சமூகத்தில் அவரது சாட்சியத்தை சேதமடைய செய்துவிட்டார்; "குற்றஞ்சாட்டப்படாதவனாக" இருக்கும் தகுதி "ஒரு மனைவியை உடைய புருஷன்" தேவைக்கு மாறாக போதகரிடம் இருந்து விலக்கப்படும். ஒரு மூப்பர் / உதவிக்காரர் / போதகராக உள்ளவர் வாழ்வில் கிறிஸ்துவ மாதிரியையும் மற்றும் தேவபக்தியுள்ள தலைமையின் ஒரு முன்மாதிரியாக திருச்சபையையும் சமுதாயத்தையும் பார்க்க முடியும். கடந்த கால விவாகரத்து மற்றும் / அல்லது மறுமணவாழ்வு இந்த இலட்சியத்தில் இருந்து அகற்றப்பட்டால், அவர் மூப்பர் / உதவிக்காரர் / போதகர் நிலையில் பணியாற்றக்கூடாது. ஒருவன் ஒரு மூப்பர் / உதவிக்காரர் / போதகராக பணியாற்றுவதில் இருந்து தகுதியற்றவராக இருந்தாலும், அவர் கிறிஸ்துவின் சரீரத்தில் மதிப்புமிக்க உறுப்பினராக இருப்பதை நினைவில் கொள்வது முக்கியம். ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஆவிக்குரிய வரங்களை கொண்டுள்ளனர் (1 கொரிந்தியர் 12: 4-7) மற்றும் அந்த வரங்களை மற்ற விசுவாசிகள் கட்டப்படுவதற்காக பங்கேற்க அழைக்கப்படுகிறது (1 கொரிந்தியர் 12:7). மூப்பர் / உதவிக்காரர் / போதகராக இருந்து தகுதியற்றவர் ஒருவர் இன்னும் கற்பிக்கவும், பிரசங்கிக்கவும், சேவை செய்யவும், ஜெபிக்கவும், வழிபடவும், திருச்சபையில் ஒரு முக்கியமான பங்கை வகிக்கவும் முடியும்.

English



முகப்பு பக்கம்

1 தீமோத்தேயு 3:2-ல் ‘ஒரே மனைவியை உடைய புருஷனும்' என்பதன் அர்த்தம் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries