கேள்வி
உபபரநிலை ஒற்றுமை என்றால் என்ன? இயேசு எப்படி ஒரே நேரத்தில் தேவனாகவும் மனிதனாகவும் இருநிலையில் இருக்க முடியும்?
பதில்
உபபரநிலை ஒற்றுமை என்பது எவ்வாறு தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மனித தன்மையை எடுத்துக்கொண்டு, அதே வேளையில் தேவனாகவும் இருந்தார் என்பதை விவரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இயேசு எப்பொழுதும் தேவனாகவே இருந்தார் (யோவான் 8:58; 10:30), ஆனால் இப்பூமியில் அவதரித்தபோது, இயேசு மனிதனானார் (யோவான் 1:14). தெய்வீகத் தன்மையுடன் கூடுதலாக மனித தன்மையையும் கொண்டிருக்கும் இயேசு, தேவ-மனிதன் ஆவார். இயேசு கிறிஸ்து, ஒரேஒரு நபர், முழுமையான தேவன் மற்றும் முழுமையான மனிதன், இதுதான் உபபரநிலை ஒற்றுமை ஆகும்.
இயேசுவின் இரண்டு தன்மைகளும் அதாவது தேவன் மற்றும் மனிதத் தன்மைகள் பிரிக்க முடியாதவையாகும். இயேசு எப்போதும் சதாகாலமும் தேவ-மனிதனாக, முழுமையான நிலையில் தேவன் மற்றும் முழுமையான நிலையில் மனிதனாக, ஒரு தனிநபரில் இரண்டு தனித்துவமான தன்மைகள் ஆகும். இயேசுவின் மனுஷீகமும் தெய்வீகமும் ஒன்றுக்கொன்று கலக்கவில்லை, ஆனால் இரண்டும் தனிப்பட்ட அடையாளத்தை இழக்காமல் ஒற்றுமையாக இருக்கின்றன. இயேசு சில நேரங்களில் மனித தன்மையின் வரம்புகளுடன் செயல்படுகிறார் (யோவான் 4:6; 19:28) மற்ற சமயங்களில் அவருடைய தெய்வீக வல்லமையின் வரம்புக்குள் இருக்கிறார் (யோவான் 11:43; மத்தேயு 14:18-21). இவ்விரண்டிலும், இயேசுவின் செயல்கள் அவருடைய ஒரே ஆள்தன்மையுள்ள நபரிடமிருந்து வருகின்றன. இயேசுவுக்கு இரண்டு தன்மைகள் இருக்கின்றன, ஆனால் ஒரே ஒரு ஆள்தன்மை.
உபபரநிலை ஒற்றுமையின் உபதேசம் என்பது ஒரே சமயத்தில் இயேசு எப்படி தேவனாகவும் மனிதனாகவும் இருக்க முடியும் என்பதை விளக்குவதற்கான ஒரு முயற்சியாகும். எனினும், முடிவான நிலையில் நாம் முழுமையாக அதனை புரிந்து கொள்ள முடியாத ஒரு உபதேசமாகும். தேவன் எவ்வாறு முழுமையாக செயல்படுகிறார் என்பதை நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள இயலாது. வரையறுக்கப்பட்ட மனதைக் கொண்டுள்ள மனிதர்களாகிய நாம் ஒரு எல்லையற்ற தேவனை முழுமையாக புரிந்துகொள்ள எதிர்பார்க்கக்கூடாது. இயேசு பரிசுத்த ஆவியானவர் மூலம் பிறந்த தேவனுடைய குமாரன் ஆவார் (லூக்கா 1:35). அதற்காக இயேசு கருவுற்றதற்கு முன்பாக இருக்கவில்லை என்கிற அர்த்தமல்ல. இயேசு எப்பொழுதும் இருந்தார் (யோவான் 8:58, 10:30). இயேசு கருவானபோது, தேவனாக இருப்பதோடு சேர்ந்து மனிதனானார் (யோவான் 1:1, 14).
இயேசு தேவனாகவும் மனிதனாகவும் இருக்கிறார். இயேசு எப்போதும் தேவன், ஆனால் அவர் மரியாளில் கருத்தரிக்கப்படும் வரை அவர் ஒரு மனிதனாக இல்லை. நம்முடைய போராட்டங்களில் நம்மோடு அடையாளம் காணும்படியாக இயேசு மனிதனானார் (எபிரெயர் 2:17) மேலும் முக்கியமாக, நம்முடைய பாவங்களுக்காக தண்டிக்கப்படுவதற்காக அவர் சிலுவையில் மரித்தார் (பிலிப்பியர் 2:5-11). சுருக்கமாக கூறினால், உபபரநிலை ஒற்றுமை என்பது இயேசு முழுமையான நிலையில் தேவனாகவும் முழுமையான நிலையில் மனிதனாகவும் மற்றும், இரண்டு தன்மைகளிலும் எந்த கலவையோ அல்லது இயற்கையாக நீர்த்துப்போகவோ இல்லை, அவர் ஒரே ஆள்தன்மையில் என்றென்றுமாய் ஐக்கியப்பட்டவர் ஆவார்.
English
உபபரநிலை ஒற்றுமை என்றால் என்ன? இயேசு எப்படி ஒரே நேரத்தில் தேவனாகவும் மனிதனாகவும் இருநிலையில் இருக்க முடியும்?