கேள்வி
தேவனை போல மற்றும் சாயலில் படைக்கப்பட்ட மனிதன் என்பதற்கு என்ன அர்த்தம் (ஆதியாகமம் 1:26,27)?
பதில்
சிருஷ்டிப்பின் கடைசி நாளில், தேவன் சொன்னார்," நமது சாயலாகவும், நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக"(ஆதியாகமம் 1:26).இவ்வாறு, அவர் அவரின் வேளையை தனிப்பட்ட தொடுதளால் முடித்தார்.தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி,ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்,மனுஷன் ஜீவாத்மாவானான் (ஆதியாகமம் 2: 7). அதன்படி, மனுஷன் தேவனின் எல்லா படைப்புகள் மத்தியில் தனித்தன்மையாக இருந்தன, இரண்டிலும் சரீரம் மற்றும் சரீரமற்ற ஆத்துமா / ஆவியாக வாய்ந்தது.
தேவனுடைய ரூபத்தின்படியும் மற்றும் சாயலின்படியும் இருப்பதற்கு அர்த்தம், எளிதாக சொன்னால் நாம் தேவனுடைய ரூபம் போலவே இருப்பதாகும்.தேவனுடைய ரூபத்தின்படி ஆதாம் மாம்சம் மற்றும் இரத்தம் உடைய அர்த்தத்தில் தேவனை போல இல்லை.வேதம் சொல்லுகிறது(யோவான் 4:24) "தேவன் ஆவியாயிருக்கிறார்" எனவே சரீரம் இல்லாமல் இருக்கிறார் என்று கூறுகிறது. ஆதாமின் சரீரம் தேவனுடைய ஜீவனுக்கு பிரதிபலிப்பாய் இருந்தது,ஆயினும் அது மரணத்தற்கு உட்படுத்த படாமல் மற்றும் முழூமையான ஆரோக்கியத்துடன் உருவாக்கப்பட்டு இருந்தது.
தேவனுடைய சாயல் என்பது மனுஷனுடைய சரீரமற்ற பகுதியை (ஆவு/ஆத்துமா)குறிக்கிறது. இது மனுஷனை விலங்கு உலகத்தில் இருந்து பிரித்து காட்டுகிறது,பூமியில் மேல் அவனுக்கு இருக்கிற நோக்கம் தேவ ஆலுகைக்காகவே நியமித்துள்ளது (ஆதியாகமம் 1:28), மற்றும் தம்மை உண்டாக்கினவரோடு இணைந்து செயல்பட உதவுகிறது. அது மனோ ரீதியிலும் ஒழுக்க மற்றும் சமூக ஒப்பிடபட்டு உள்ளது.
மனோரீதியாக, மனிதன் பகுத்தறிவு மற்றும் தெரிந்தெடுக்கும் ஆற்றல் உடையவனாய் இருக்கிறான். அதாவது மனிதனால் பகுத்தறியவும் தெரிந்துகொள்ளவும் முடியும். இது தேவனுடைய அறிவாற்றல் மற்றும் சுதந்திரத்தை பிரதிபலிக்கிறது. எப்பொழுதெல்லாம் ஒருவன் ஒரு எந்திரத்தை கண்டுபிடிக்கிறானோ, புத்தகத்தை எழுதுகிறானோ, இயற்கை காட்சியை வரைகிறானோ, இசையை ரசிக்கறானோ, கனிதத்தின் விடை கண்டுபிடிக்கிறானோ, வளர்ப்பு பிராணியை பெயரிடுகிறானோ, அவன்/அவள் தம்மை தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டதை அறிவிக்கின்றார்கள்.
நல்நடத்தையின்படி, மனிதன் தேவனுடைய நீதியிலும் மற்றும் பரிபூரண கபடமற்றதாய் படைக்கபட்டான். இது தேவனுடைய பரிசுத்தத்தை பிரதிபலிக்கிறது. தேவன் தாம் படைத்த எல்லாவற்றையும் (மனிதனையும் கூட) பார்த்து நல்லது என்றார் (ஆதியாகமம் 1:31). நமது மனசாட்சி அல்லது "நல்நடத்தயின் திசைகாட்டி" நமது உண்மையான நிலையின் அடையாளமாய் இருக்கிறது. எப்பொழுதெல்லாம் ஒருவன் சட்டத்தை எழுதுகிறானோ, தீமையினின்று விலகுகிறானோ, நல்நடத்தயை புகழ்கிறானோ, குற்ற உணர்வு அடைகிறானோ, அவன் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டதை அறிவிக்கின்றான்.
சமூக ரீதியில், மனிதன் உறவுக்கென்று படைக்கப்பட்டவன். இது தேவனுடைய திரித்துவத்தையும், அன்பையும் பிரதிபலிக்கிறது. ஏதேனில் மனிதனின் முதன்மையான உறவு தேவனிடம் இருந்தது (ஆதியாகமம் 3:8), மற்றும் தேவன் முதல் மனுஷியை படைத்தார், ஏனென்றால் "மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல" (ஆதியாகமம் 2:18) என்று அவர் கண்டார். எப்பொழுதெல்லாம் ஒருவன் திருமணம் செய்கிறானோ, நட்ப்பை வைக்கிறானோ, ஒரு பிள்ளையை அனைக்கிறானோ, சபையில் கலந்துகொள்கிறானோ, அவன் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டதை அறிவிக்கின்றான்.
தேவனின் சாயலில் ஆதாம் படைக்கபட்டதினால், அவன் எதையும் சுதந்திரமாய் தெரிந்துகொள்ள வல்லமை உண்டு. அவனுக்கு நீதியின் சுபாவம் கொடுத்திருந்தபொழுதிலும், ஆதாம் தன்னை படைத்தவரை எதிர்க்க தீய முடிவு எடுத்தான். அவன் அப்படி செய்ததினால் தன்னில் இருந்த தேவ சாயலை கெடுத்துக்கொண்டான்; பின்னும் தனது உருக்குலைந்த சாயல் தனது சந்ததிக்கும் வந்தது (ரோமர் 5:12). இன்று நாம் தேவனுடைய சாயல் உடையவர்களாய் இருக்கிறோம் (யாக்கோபு 3:9), ஆனாலும் பாவத்தின் வடுக்களையும் சுமக்கிறோம். மனோரீதியாகவும், நல்நடத்தையின்படியாகவும், சமூக ரீதியிலும், மற்றும் சரீரப்படியாகவும், பாவத்தின் விளைவுகளை அனுபவிக்கிறோம்.
நல்ல செய்தி என்னவென்றால், தேவன் ஒரு மனிதனை மீட்கும்போது அவன் இழந்த உன்மயான தேவ சாயலை திரும்பவும் கொடுக்கிறார்: “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” (எபேசியர் 4:24). இந்த மீட்பு தேவனின் கிருபை மூலமாக மற்றும் தேவனிடம் இருந்து பிரித்த பாவத்தில் இருந்து இரட்சிப்பவர் கிறிஸ்து என்று விசுவாசிப்பதின் மூலம் கிடைக்கின்றது (எபேசியர் 2:8-9). கிறிஸ்து மூலமாக, நாம் புது சிறுஷ்டியாக தேவனை போலவே மாறுகிறோம் (2 கொரிந்தியர் 5:17).
English
தேவனை போல மற்றும் சாயலில் படைக்கப்பட்ட மனிதன் என்பதற்கு என்ன அர்த்தம் (ஆதியாகமம் 1:26,27)?