settings icon
share icon
கேள்வி

மத்தியஸ்த ஜெபம் என்றால் என்ன?

பதில்


மிகவும் எளிமையான நிலையில், மத்தியஸ்த ஜெபம் என்பது மற்றவர்கள் சார்பாக ஜெபிப்பதாகும். பழைய ஏற்பாட்டில், ஆபிரகாம், மோசே, தாவீது, சாமுவேல், எசேக்கியா, எலியா, எரேமியா, எசேக்கியேல் மற்றும் தானியேல் ஆகியோரின் ஜெபத்தில் மத்தியஸ்த பரிந்துரையின் பங்கு அதிகமாக இருந்தது. கிறிஸ்து புதிய ஏற்பாட்டில் இறுதி மத்தியஸ்தராக சித்தரிக்கப்படுகிறார், இதன் காரணமாக, எல்லா கிறிஸ்தவ ஜெபங்களும் கிறிஸ்துவின் மூலமாகவும், கிறிஸ்துவினாலும் தேவனிடத்தில் ஏறெடுக்கப்படுவதால் அது பரிந்துரையாகிறது. இயேசு சிலுவையில் மரித்தபோது நமக்கும் தேவனுக்கும் இடையிலான இடைவெளியை அடைத்தார்/மூடினார். இயேசுவின் மத்தியஸ்தத்தின் காரணமாக, நாம் இப்போது மற்ற கிறிஸ்தவர்களின் சார்பாகவோ அல்லது இழந்துபோனவர்களுக்காகவோ ஜெபத்தில் பரிந்துரைக்க முடியும், அவருடைய வேண்டுகோளுக்கு ஏற்ப அவர்களின் கோரிக்கைகளை வழங்கும்படி தேவனிடம் கேட்டுக்கொள்கிறோம். “தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே” (1 தீமோத்தேயு 2:5, 6). “ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே” (ரோமர் 8:34).

மத்தியஸ்த ஜெபத்தின் ஒரு அற்புதமான மாதிரி தானியேல் 9-ல் காணப்படுகிறது. இது உண்மையான பரிந்துரை ஜெபத்தின் அனைத்து கூறுகளையும் கொண்டுள்ளது. இது வார்த்தையின் பிரதிபலிப்பாகும் (வசனம் 2); ஆர்வம் (வசனம் 3) மற்றும் சுய மறுப்பு (வசனம் 4) ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும்; தேவன் மக்களுடன் தன்னலமற்ற முறையில் அடையாளம் காணப்பட்டது (வசனம் 5); பாவ அறிக்கையால் பலப்படுத்தப்பட்டது (வசனங்கள் 5-15); கடவுளின் தன்மையைப் பொறுத்தது (வசனங்கள் 4, 7, 9, 15); அதன் குறிக்கோளாக தேவனின் மகிமை உள்ளது (வசனங்கள் 16-19). தானியேலைப் போலவே, கிறிஸ்தவர்களும் மற்றவர்கள் சார்பாக மனமுடைந்து மனந்திரும்பும் மனப்பான்மையில் தேவனிடம் வர வேண்டும், அவர்களுடைய தகுதியற்ற தன்மையை உணர்ந்து சுய மறுப்பு உணர்வுடன் நெருங்கி வரவேண்டும். "தேவனே, இதை உங்களிடமிருந்து கோருவதற்கு எனக்கு உரிமை உண்டு, ஏனென்றால் நான் உங்கள் சிறப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியஸ்த பரிந்துரையாளர்களில் ஒருவன்" என்று தானியேல் சொல்லவில்லை. மாறாக, "நான் ஒரு பாவி" என்று அவர் கூறுகிறார், இதன் விளைவாக, "உம்மிடத்திலிருந்து எதையும் கோருவதற்கு எனக்கு உரிமை இல்லை." அது நமக்கு நன்மை பயக்காது, அது நமக்கு என்ன செலவாகும் என்பதைப் பொருட்படுத்தாமல். உண்மையான பரிந்துரை ஜெபம் தேவனின் மகிமையை நாடுகிறது, நம்முடையதை அல்ல.

பின்வருபவை, நாம் யாருக்காக மத்தியஸ்த ஜெபங்களைச் செய்ய வேண்டுமோ அவர்களுடைய ஒரு பகுதி பட்டியல் மட்டுமே: அனைத்து அதிகாரத்திலுள்ளவர்களுக்கு (1 தீமோத்தேயு 2:2); ஊழியக்காரர்களுக்கு (பிலிப்பியர் 1:19); திருச்சபைக்கு (சங்கீதம் 122: 6); சிநேகிதர்களுக்கு (யோபு 42:8); சக தேசத்து ஜனங்களுக்கு (ரோமர் 10:1); வியாதியஸ்தர்களுக்கு (யாக்கோபு 5:14); எதிரிகளுக்கு (எரேமியா 29:7); நம்மைத் துன்புறுத்துபவர்களுக்கு (மத்தேயு 5:44); நம்மை கைவிட்டவர்களுக்கு (2 தீமோத்தேயு 4:16); எல்லா மனிதர்களுக்காகவும் (1 தீமோத்தேயு 2:1) ஜெபிக்கவேண்டும்.

சமகால கிறிஸ்தவத்தில் ஒரு தவறான யோசனை உள்ளது, மத்தியஸ்த ஜெபங்களை ஏறெடுப்பவர்கள் " மிக மேன்மையான கிறிஸ்தவர்களின்" ஒரு சிறப்பு வர்க்கம், ஒரு குறிப்பிட்ட மத்தியஸ்த ஊழியத்திற்காக அவர்களை தேவன் அழைத்தார் என்பதாகும். எல்லா கிறிஸ்தவர்களும் மத்தியஸ்தர்களாக அழைக்கப்படுகிறார்கள் என்பதில் வேதாகமம் தெளிவாக உள்ளது. எல்லா கிறிஸ்தவர்களும் தங்கள் இருதயங்களில் பரிசுத்த ஆவியானவரைப் பெற்று இருக்கிறார்கள், தேவனுடைய சித்தத்தின்படி அவர் நமக்காக பரிந்து பேசுவது போல (ரோமர் 8:26-27), நாம் ஒருவருக்கொருவர் பரிந்து பேச வேண்டும். இது ஒரு பிரத்யேக கிறிஸ்தவ உயரடுக்கிற்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சலுகை அல்ல; இது உண்மையில் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட கட்டளை, மற்றவர்களுக்காக பரிந்துரை செய்யாதது பாவம் ஆகும். “நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்” (1 சாமுவேல் 12:23).

நிச்சயமாக பேதுருவும் பவுலும் மற்றவர்ககளை அவர்ளுக்காக வேண்டுதல் செய்யும்படி கேட்டபோது, பரிந்துரையை சிறப்பு அழைப்பாளர்களிடம் தங்கள் கோரிக்கையை கூறி மட்டுப்படுத்தவில்லை. “அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்” (அப்போஸ்தலர் 12:5). முழு திருச்சபையும் அவருக்காக ஜெபம் செய்தது என்பதைக் கவனியுங்கள். எபேசியர் 6:16-18-ல், பவுல் எபேசு பட்டணத்திலுள்ள சபை விசுவாசிகளை-அவர்கள் அனைவரையும்-கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படைகள் குறித்து அறிவுறுத்துகிறார், அதில் எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்” என்று கூறுவதில் பரிந்துரைகளும் அடங்கும். தெளிவாக, அனைத்து விசுவாசிகளுக்கும் தங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் மத்தியஸ்த பரிந்துரை ஜெபம் என்பது ஒரு பகுதியாகும்.

மேலும், ரோமர் 15:30-ல் உள்ள ரோமிலுள்ள சபை விசுவாசிகளிடமிருந்து பவுல் தனது சார்பாக ஜெபத்தை நாடினார். கொலோசெயர் 4:2-3-ல் அவருக்காக பரிந்துரை செய்ய கொலோசியர்களை அவர் வலியுறுத்தினார். பரிந்துரை செய்வதற்கான எந்தவொரு வேதாகம கோரிக்கையிலும் எங்கும் ஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே பரிந்துரை செய்ய முடியும் என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. மாறாக, அவர்களுக்காக பரிந்து பேச மற்றவர்களை நாடுபவர்கள், அவர்கள் பெறக்கூடிய எல்லா உதவிகளையும் பயன்படுத்தலாம்! சில கிறிஸ்தவர்களை மட்டுமே பரிந்துரை செய்வது பாக்கியம் என்ற எண்ணம் வேதாகம அடிப்படையில் இல்லாமல் உள்ளது. துக்ககரமான விஷயம் என்னவெனில், இந்த பாக்கியமுள்ள யோசனை பெரும்பாலும் பெருமைக்கும் மேன்மையின் உணர்வுக்கும் வழிவகுக்கிறது.

எல்லா கிறிஸ்தவர்களையும் மத்தியஸ்தர்களாக தேவன் அழைக்கிறார். ஒவ்வொரு விசுவாசியும் பரிந்துரை ஜெபத்தில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பது தேவனின் விருப்பம் ஆகும். நம்முடைய ஜெபங்கள் மற்றும் வேண்டுகோள்களுடன் சர்வவல்லமையுள்ள தேவனின் சிம்மாசனத்தின் முன் தைரியமாக வர முடிந்ததில் நமக்கு எவ்வளவு அற்புதமான மற்றும் உயர்ந்த பாக்கியம்!

English



முகப்பு பக்கம்

மத்தியஸ்த ஜெபம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries