கேள்வி
ஏன் பல்வேறு கிறிஸ்தவ வியாக்கியானங்கள் உள்ளன?
பதில்
"ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்" உள்ளதாக வேதவாக்கியம் கூறுகிறது (எபேசியர் 4: 5). இந்த பத்தியில் நாம் "ஒரே ஆவியானவரை” கொண்டிருப்பதால் நாம் கிறிஸ்துவின் சரீரத்தில் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும் என்கிற ஒற்றுமை இது வலியுறுத்துகிறது (வசனம் 4). 3-ம் வசனத்தில், மனத்தாழ்மை, சாந்தம், பொறுமை, அன்பு ஆகியவற்றிற்கு பவுல் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார் – அதாவது இவை அனைத்தும் ஒற்றுமையை பாதுகாக்க அவசியமானவை என்கிறார். 1 கொரிந்தியர் 2:10-13 வசனத்தின்படி, பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய மனதை அறிவார் (வசனம் 11), அதை அவர் வெளிப்படுத்துகிறார் (வசனம் 10), அவர் வசிக்கும் எவருக்கும் (வசனம் 13) அதை போதிக்கிறார். பரிசுத்த ஆவியின் இந்த செயல்பாடு ஒளியூட்டல் அல்லது வெளிச்சம் என்று அழைக்கப்படுகிறது.
பரிசுத்த ஆவியானவர் தரும் வெளிச்சத்தை ஜெபத்தோடு பெற்றுக்கொள்வது மூலம், பரிபூரண உலகில் ஒவ்வொரு விசுவாசியும் பைபிளை படிக்க வேண்டும் (2 தீமோத்தேயு 2:15). நமக்கு தெளிவாக தெரிந்திருக்கிறபடி ஒந்த உலகம் ஒரு பரிபூரணமான உலகம் அல்ல. பரிசுத்த ஆவியானவரை தங்களில் பெற்றிருக்கிற அனைவருமே உண்மையில் பரிசுத்த ஆவியானவருக்குச் செவிகொடுப்பதில்லை. அவரை துக்கப்படுத்துகிற கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் (எபேசியர் 4:30). எந்த ஒரு சிறந்த ஆசிரியராக இருந்தாலும் அவரைக் கேளுங்கள் - சிறந்த வகுப்பறை ஆசிரியர் பயிற்றுவிப்பதை எதிர்க்கும் மாணவர்களைப் போன்று, ஆசிரியரைப் பொருட்படுத்தாமல் போயிருக்கலாம். எனவே, வேதாகமத்தின் இத்தனை வித்தியாசமான விளக்கங்கள் இருப்பதற்கு காரணம், அதன் ஆசிரியராகிய பரிசுத்த ஆவியானவருக்கு செவிகொடுத்து அவர் கூறுவதை கேட்காமல் போவதுதான். வேதாகமத்தைக் கற்றுக்கொள்பவர்களில் விசுவாசிகளின் பரந்த வேறுபாடுகளுக்கு இருக்கும் வேறு சில காரணங்கள் பின்வருமாறு.
1. அவிசுவாசம். உண்மையில் கிறிஸ்தவர்களாக இருகிறார்கள் என்று கூறிக்கொள்பவர்களில் பலர் மறுபடியும் பிறக்கவில்லை. அவர்களுக்கு "கிறிஸ்தவர்" என்கிற சிட்டை அடையாளம் உண்டு, ஆனால் அவர்களது இருதயத்தில் உண்மையான மாற்றம் இல்லை. வேதாகமத்தை முழுமையாக நம்பாதவர்கள் பலர் இதனை போதிக்க துணிந்திருக்கிறார்கள். அவர்கள் தேவனுக்காகப் பேசுவதாகக் கூறிக்கொண்டு, இன்னும் அவிசுவாசத்தில் வாழ்கிறார்கள். வேதாகமத்தின் மிக தவறான விளக்கங்கள் அல்லது கள்ள உபதேசங்கள் இத்தகைய ஆதாரங்களிலிருந்து வந்தவைகள்தான்.
ஒரு அவிசுவாசியான நபர் வேதாகமத்தை வியாக்கியானம் செய்வதென்பது சாத்தியமில்லாத காரியமாகும். “ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்” (1 கொரிந்தியர் 2:14). இரட்சிக்கப்படாத ஒரு மனிதன் வேதாகமத்தின் சத்தியத்தை புரிந்து கொள்ள முடியாது. அவனுக்கு ஆவியானவர் புரிந்துகொள்வதற்கு அளிக்கும் வெளிச்சம் இல்லை. மேலும், ஒரு போதகர் அல்லது இறையியல் வல்லுநர் கூட ஒருவரையொருவர் இரட்சிப்பிற்கு உத்தரவாதம் அளிக்கமுடியாது.
அவிசுவாசத்தால் உருவாக்கப்பட்ட குழப்பத்தின் ஒரு உதாரணம் யோவான் 12:28-29-ல் காணப்படுகிறது. "பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும்" என்று இயேசு தன் பிதாவிடம் ஜெபிக்கிறார். பரலோகத்திலிருந்து கேட்கக்கூடிய குரல் மூலம் பிதா பதிலளிக்கிறார்; இருப்பினும், விளக்கத்தில் இருக்கும் வித்தியாசத்தை கவனிக்கவும்: "அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்." எல்லாரும் ஒரே விஷயத்தைத்தான் கேட்டார்கள் – பரலோகத்திலிருந்து ஒலித்த ஒரு தெளிவான அறிக்கை – எல்லோரும் அவர் கேட்க விரும்புவதை கேட்டார்கள்.
2. பயிற்சி இல்லாமை. வேதவாக்கியங்களை தவறாக வியாக்கியானம் பண்ணுபவர்களை அப்போஸ்தலனாகிய பேதுரு எச்சரிக்கிறார். அவர்கள் கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள் (2 பேதுரு 3:16) என்று கூறுகிறார். தீமோத்தேயு "வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் அவனை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு" (2 தீமோத்தேயு 2:15) என்று பவுல் கூறுகிறார். முறையான வேதாகம வியாக்கியானம் செய்வதற்கு எந்தஒரு குறுக்குவழியும் இல்லை; நாம் கட்டாயமாக படிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
3. தரமற்ற வியாக்கியானம். நல்ல வியாக்கியானத்தை (வேதாகம விளக்கவுரை சாஸ்திரம்) பயன்படுத்துவதற்கு முடியாமல் போன தோல்வி காரணமாகத்தான் அதிகப்படியான பிழை ஏற்பட்டுள்ளது. அதன் உடனடி சூழலில் இருந்து ஒரு வசனத்தை எடுத்துக் கொள்வது வசனத்தின் நோக்கத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும். அதிகாரம் மற்றும் புத்தகத்தின் பரந்த சூழலைப் புறக்கணித்துவிட்டு, அல்லது வரலாற்று / கலாச்சார சூழலைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டால் பிரச்சினைகள் ஏற்படலாம்.
4. தேவனுடைய முழு வார்த்தையையும் குறித்த அறியாமை. அப்பொல்லோ ஒரு சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான பிரசங்கி ஆவார், ஆனால் அவர் யோவானின் ஞானஸ்நானம் மட்டுமே அறிந்திருந்தார். அவர் இயேசுவை அறியாதவராகவும், அவர் அருளும் இரட்சிப்பினை அறியாதவராகவும் இருந்தார், ஆகவே அவருடைய செய்தி முழுமையடையவில்லை. ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாவும் அவனைச் சேர்த்துக்கொண்டு, “தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக்காண்பித்தார்கள்” (அப்போஸ்தலர் 18:24-28). அதன்பின் அப்பொல்லோ இயேசு கிறிஸ்துவைப் பிரசங்கித்தார். சில குழுக்களும் தனிநபர்களும் இன்று முழுமையடையாத செய்தியைக் கொண்டுள்ளனர், ஏனென்றால் மற்றவர்களிடமிருந்து விலக்குவதற்கு சில பகுதிகளை மட்டுமே அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். வேதாகமத்தோடு வேதாகமத்தை அவர்கள் ஒப்பிடமுடியாது தோற்றுப்போகிறார்கள்.
5. சுயநலம் மற்றும் பெருமை. மிகவும் வருந்தத்தக்க காரியம் என்னவெனில், பல வேதாகம விளக்கங்கள் தனிப்பட்ட நபரின் தனிப்பட்ட கருத்துகள் மற்றும் செல்லப்பிள்ளை கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவை. சிலர் வேதாகமத்தில் ஒரு "புதிய முன்னோக்கு" ஊக்குவிப்பதன் மூலம் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கான வாய்ப்பைக் காண்கின்றனர். (யூதாவின் நிருபத்தில் கொடுக்கப்பட்டுள்ள கள்ளப்போதகர்களின் விளக்கத்தைக் காண்க.)
6. முதிர்ச்சியடைவதில் தோல்வி. கிறிஸ்தவர்கள் முதிர்ச்சியடைய வகையில் முதிர்ச்சியடையாமல் இருக்கும்ம்போது, அவர்கள் தேவனுடைய வார்த்தையை கையாளுகிற விதம் பாதிப்புக்குள்ளாகிறது. “நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை” (1 கொரிந்தியர் 3:2-3). ஒரு முதிர்ச்சியில்லாத கிறிஸ்தவன் தேவனுடைய வார்த்தையின் "இறைச்சி"க்கு தயாராக இல்லை. கொரிந்து சபையில் பிரிவினைகளுக்கு காரணம் அவர்களுடைய மாம்சத்திற்குரிய வாழ்வாக இருந்தது (வசனம் 4).
7. பாரம்பரியத்தின் வலியுறுத்தல். சில திருச்சபைகள் வேதாகமத்தை நம்புவதாகக் கூறுகின்றன, ஆனால் அவற்றின் விளக்கம் எப்போதும் சபையினால் நிறுவப்பட்ட மரபுகளால் வடிகட்டப்படுகிறது. வேதாகமத்தின் போதனைகளும் மரபும் எதிரெதிரே நேராக வரும்போது பாரம்பரியத்திற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது பலமாய் தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தை புறக்கணித்து, சபைத்தலைமையின் மேலாதிக்கத்தை வழங்குகிறது.
அத்தியாவசியங்களில், வேதாகமம் மிகத் தெளிவாக இருக்கிறது. கிறிஸ்துவின் தெய்வீகம், பரலோகம் மற்றும் நரகத்தின் உண்மை, விசுவாசத்தின் மூலமாக கிருபையால் இரட்சிப்பு ஆகியவை பற்றி தெளிவற்ற அல்லது சந்தேகமானதொன்றும் இல்லை. இருப்பினும், சில முக்கிய விஷயங்களில், வேதாகமத்தின் போதனை குறைவாக இருக்கிறது, இது இயற்கையாக வெவ்வேறு விளக்கங்களுக்கு வழிவகுக்கிறது. உதாரணமாக, கர்த்தருடைய மேசையை எப்போது ஆசரிக்கவேண்டும் அல்லது எப்படிப்பட்ட இசைப் பாணியை பயன்படுத்தவேண்டும் என்று நேரடி வேதாகம கட்டளை நமக்கில்லை. யோக்கியமான, நேர்மையான கிறிஸ்தவர்கள் இந்த புற பிரச்சினைகள் பற்றி பத்திகளை சம்மதித்து பல்வேறு விளக்கங்கள் கொண்டிருக்க முடியும்.
முக்கியமான விஷயம் என்னவெனில், வேதவாக்கியம் எங்கே அதிகாரப்பூர்வமாக உள்ளதோ அங்கே நாமும் அதிகாரபூர்வமான நிலையில் இருக்கவேண்டும்; எங்கே இல்லையோ அங்கே நாமும் தவிர்க்க வேண்டும். ஆரம்பகால எருசலேம் சபையின் மாதிரியை பின்பற்ற சபைகள் முயற்சி செய்ய வேண்டும்: “அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்” (அப்போஸ்தலர் 2:42). அப்போஸ்தலர்களின் உபதேசத்தில் உறுதியாய் இருந்ததால் ஆரம்பகால சபைகளில் ஒற்றுமை இருந்தது. சபைக்குள் சிக்கியிருக்கும் மற்ற கோட்பாடுகள், தீமைகள், மற்றும் விநோதங்களைப் புறக்கணித்துவிட்டு அப்போஸ்தலருடைய உபதேசத்திற்கு நாம் திரும்பும்போது, மீண்டும் சபையில் ஒற்றுமை இருக்கும்.
English
ஏன் பல்வேறு கிறிஸ்தவ வியாக்கியானங்கள் உள்ளன?