கேள்வி
தேவன் நேர்மையானவரா?
பதில்
அதிர்ஷ்டவசமாக நம்மைப் பொறுத்தவரை, தேவன் நேர்மையானவர் அல்ல. நேர்மை என்பது ஒவ்வொருவரும் அவருக்குரிய தகுதியைப் பெறுகிறார் என்று அர்த்தம். பலரின் மனதில், நேர்மை என்பது எல்லோரும் ஒன்றுபோலவே சமமாக நடத்தப்படுகிறது ஆகும். தேவன் முற்றிலும் நேர்மையானவராக இருந்தால், நாம் அனைவரும் நம்முடைய பாவத்திற்காக நம்முடைய நித்தியத்தை நரகத்தில் தான் செலவிடுவோம், அதுதான் நமக்கு தகுதியானது. நாம் அனைவரும் தேவனுக்கு எதிராக பாவம் செய்தோம் (ரோமர் 3:23) எனவே நித்திய மரணத்திற்கு தகுதியானவர்கள் (ரோமர் 6:23). நாம் தகுதியானதைப் பெற்றோமானால், நாம் அக்கினி கடலில் முடிவடைவோம் (வெளிப்படுத்துதல் 20:14-15). ஆனால் தேவன் நேர்மையானவர் அல்ல; அதற்கு பதிலாக, அவர் இரக்கமுள்ளவராகவும் நல்லவராகவும் இருக்கிறார், எனவே அவர் இயேசு கிறிஸ்துவை நம் இடத்தில் சிலுவையில் மரிக்கும்படி அனுப்பினார், நமக்குத் தகுதியான நாம் அடையவேண்டிய தண்டனையை அவர் எடுத்துக் கொண்டார் (2 கொரிந்தியர் 5:21). நாம் செய்ய வேண்டியது எல்லாம் அவரை நம்பி விசுவாசிப்பதுதான், அப்படி நம்புவதால் நாம் இரட்சிக்கப்படுவோம், மன்னிக்கப்படுவோம், மேலும் பரலோகத்தில் நித்திய வீட்டையும் பெறுவோம் (யோவான் 3:16).
இருப்பினும், தேவனின் அன்பான கிருபை இருந்தபோதிலும், யாரும் அவரை தன்னிச்சையாக நம்ப மாட்டார்கள் (ரோமர் 3:10-18). நாம் நம்புவதற்கு தேவன் நம்மை அவரிடமாக இழுத்துக்கொள்ள வேண்டும் (யோவான் 6:44). தேவன் அனைவரையும் ஈர்க்கவில்லை, ஆனால் அவர் சர்வ ஆளுமையினால் தேர்ந்தெடுத்த சில நபர்களை மட்டுமே தம்மிடமாக இழுத்துக் கொள்ளுகிறார் (ரோமர் 8:29-30; எபேசியர் 1:5, 11). இது நம் பார்வையில் "நேர்மையானது" அல்ல, ஏனென்றால் தேவன் எல்லா மக்களையும் சமமாக நடத்துவதில்லை என்று தோன்றுகிறது. இருப்பினும், தேவன் யாரையும் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. மீண்டும், எல்லோரும் நரகத்தில் நித்தியத்தை செலவிடுவது தான் முற்றிலும் நியாயமானது. சிலரை மட்டும் தேவன் இரட்சிப்பது அவர்கள் தங்களுக்குத் தகுதியில்லாதைப் பெறுவதால், இரட்சிக்கப்படாமல் இருப்பவர்களுக்கு அது நேர்மையானது இல்லை.
தேவன் தேர்ந்தெடுத்தவர்கள் தேவனுடைய அன்பையும் கிருபையையும் பெறுகிறார்கள். ஆனால், தேவன் நம் இதயங்களை ஈர்க்கும்போது, நம் மனதைத் திறக்கும்போது, சிருஷ்டிப்பின் வெளிப்பாட்டிற்கு நாம் அனைவரும் பதிலளிக்க வாய்ப்பு உள்ளது (சங்கீதம் 19:1-3), அதே போல் தேவன் நமக்குள் வைத்த மனசாட்சியும் (ரோமர் 2:15) மற்றும் தேவனிடம் திரும்பவும் வழி வகுக்கிறது. அப்படி தேவனிடத்திற்கு திரும்பாதவர்கள் அவரை நிராகரித்ததால் அவர்களுக்குத் தகுதியானதைப் பெறுவார்கள். அவரை நிராகரிப்பவர்கள் நியாயமான தண்டனையைப் பெறுகிறார்கள் (யோவான் 3:18, 36). நம்புபவர்கள் தங்களுக்குத் தகுந்ததை விட மிக அதிகமாக, மிகச் சிறப்பாகப் பெறுகிறார்கள். இருப்பினும், யாரும் அவருக்கு தகுதியானதை விட அதிகமாக தண்டிக்கப்படுவதில்லை. தேவன் நேர்மையானவரா? இல்லை. அதிர்ஷ்டவசமாக, தேவன் நேர்மையானவர் என்பதைவிட மிகவும் மேலானவர்! தேவன் இரக்கமுள்ளவர், கிருபையுள்ளவர், மற்றும் மன்னிப்பவர் - ஆனால் பரிசுத்தமானவர், நியாயமானவர், மற்றும் நீதியுள்ளவர்.
English
தேவன் நேர்மையானவரா?