கேள்வி
தேவன் ஏன் எரிச்சலுள்ள தேவனாக இருக்கிறார்?
பதில்
"எரிச்சல்" என்கிற வார்த்தை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை புரிந்துகொள்வது முக்கியமாகும். தேவன் விவரிப்பதற்காக யாத்திராகமம் 20:5-ல் பயன்படுத்தப்பட்டுள்ள அதன் பயன்பாடு பொறாமையின் பாவத்தை விவரிக்க எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதிலிருந்து (கலாத்தியர் 5:20) வேறுபடுகிறதாய் இருக்கிறது. நாம் "எரிச்சல்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது, நமக்கு இல்லாத ஒன்றைக் கொண்டிருப்பவர்மேல் நாம் பொறாமைப்படுகிறோம் என்கிறதாய் அர்த்தப்படுகிறது. ஒரு நபர் வேறொரு நபர்மேல் எரிச்சல் அல்லது பொறாமைப்படலாம், ஏனெனில் அவருக்கு நல்ல கார் அல்லது வீடு (உடைமைகள்) உள்ளது. அல்லது ஒரு நபர் மற்ற நபருடைய திறன் (தடகளத்திறன் போன்ற திறன்) அல்லது திறமை காரணமாக அந்த நபர்மேல் பொறாமை அல்லது எரிச்சலுடன் இருக்கலாம். மற்றொரு உதாரணம் ஒருவர் மற்றொருவர் (ஆண்/பெண்) அழகைக் கண்டு அவர்மேல் எரிச்சல் அல்லது பொறாமைப்படலாம்.
யாத்திராகமம் 20:5-ல், யாரோ ஒருவர் ஏதோவொன்றை விரும்புகிறார் அல்லது தேவைப்படுகிறார் என்பதற்காக தேவன் எரிச்சலோ அல்லது பொறாமையோ கொள்ளுகிறதில்லை. யாத்திராகமம் 20:4-5 கூறுகிறது, “மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.” தேவனுக்கு சொந்தமானதை அல்லது அவருக்கு கொடுக்கவேண்டியதை பிறனுக்கு ஒருவர் கொடுக்கும் தேவன் எரிச்சலுள்ள தேவனாகிறார் என்பதைக் கவனியுங்கள்.
இந்த வசனங்களில், ஜனங்கள் தங்களுக்கு சிலைகளை உருவாக்கி, தேவனுக்கு சொந்தமான ஆராதனையை அவருக்குக் கொடுக்காமல், விக்கிரகங்களை வணங்கி நமஸ்கரித்து வழிபடுவதைப் பற்றித் தேவன் இங்கே பேசுகிறார். தேவன் வழிபாடு மற்றும் ஆராதனைக்கு சொந்தமானவர், தமக்குச் சொந்தமான இந்த இறைவணக்கத்தை அவர் ஒருபோதும் யாருக்கும் விட்டுக்கொடுப்பதில்லை. தேவன் ஒருவரைத் தவிர வேறு எதையும் வணங்குவதற்கோ அல்லது சேவை செய்வதற்கோ (தேவன் இதைக் கட்டளையில் சுட்டிக்காட்டுகிறது போல) அவர் அனுமதிக்கிறதில்லை, அப்படிச்செய்தல் ஒரு பாவமாக கருதப்படுகிறது. நம்மிடத்தில் இல்லாதது வேறொரருவரிடத்தில் இருப்பதைக்கண்டு, நாம் அதனை விரும்பும்போது அல்லது நாம் எரிச்சல் அல்லது பொறாமை கொள்ளும்போது அது ஒரு பாவச்செயலாக மாறுகிறது. தேவன் எரிச்சலுள்ளவர் என்கிறபோது அது "எரிச்சல்" என்கிற வார்த்தை வேறுபட்ட பயன்பாட்டை கொண்டதாக இருக்கிறது. அவர் பொறாமை அல்லது எரிச்சல் கொள்ளுகிற காரியம் என்ன? இறைவணக்கம் மற்றும் ஆராதனை, இது அவருக்கு மட்டுமே சொந்தமானது, மற்றும் இது அவருக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.
ஒருவேளை நடைமுறையான ஒரு உதாரணம் இந்த வேறுபாட்டை புரிந்துகொள்ள நமக்கு உதவிச்செய்யும். ஒரு கணவன் தன் மனைவியுடன் சுற்றித்திரியும் மற்றொரு மனிதரைப் பார்த்தால், அவன்மேல் எரிச்சல்கொள்வது சரியானதுதான், ஏனெனில் அவனுடைய மனைவியிடம் அவனுக்கு மட்டுமே சுற்றித்திரிய உரிமை உண்டு. இந்த வகை எரிச்சல் அல்லது பொறாமை பாவம் அல்ல. மாறாக, அது முற்றிலும் பொருத்தமானதாக இருக்கிறது. தேவன் உன்னுடையது என்று அறிவிக்கிற ஒரு காரியத்தில் நீங்கள் எரிச்சல் படுவது அல்லது பொறாமைப்படுவது நல்லது மற்றும் சரியானது ஆகும். உங்களுடையதல்லாத ஒரு காரியத்திற்காக விருப்பமாக இருக்கும் போது வருகிற எரிச்சல் அல்லது பொறாமை ஒரு பாவம் ஆகும். ஆராதனை, துதி, கனம் மற்றும் வழிபாடு தேவனுக்கு மட்டுமே உரியது, அவர் மட்டுமே அவைகளுக்கு உண்மையிலேயே தகுதியுடையவர். எனவே, ஆராதனை, துதி, கனம் மற்றும் வழிபாடு ஆகியவற்றை விக்கிரகங்களுக்குக் கொடுக்கும்போது தேவன் எரிச்சல்/கோபப்படுகிறார். அப்போஸ்தலனாகிய பவுல் 2 கொரிந்தியர் 11:2-ல் பொறாமை விவரித்துள்ளார், “உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.”
English
தேவன் ஏன் எரிச்சலுள்ள தேவனாக இருக்கிறார்?