settings icon
share icon
கேள்வி

தேவனை மெய்யாக அறிவதற்கான திறவுகோல் என்ன?

பதில்


நாம் அனைவரும் அறியப்பட வேண்டும் மற்றும் மற்றவர்களை அறிய வேண்டும் என்கிற ஒரு வலுவான ஆசை இருக்கிறது. மிக முக்கியமாக, எல்லா மக்களும் தேவனை நம்புகிறவர்கள் என்று கூறாவிட்டாலும், தங்கள் சிருஷ்டிகரை அறிய விரும்புகிறார்கள். இன்று நாம் விளம்பரம் மூலம் அநேக வாக்குகளை வாரி வீசுகிறோம், அது மேலும் தெரிந்துகொள்ளவும், ஆழமான அறிவுப்பசியைத் திருப்திபடுத்தவும், அதிகமாக இருக்கவும் பல வழிகளை உறுதியளிக்கிறது. இருப்பினும், தேவனை அறிகிறதினால் வரும் திருப்தியை விட உலகத்திலிருந்து வரும் வெற்று வாக்குறுதிகள் ஒருபோதும் திருப்தி அளிக்காது. இயேசு கூறினார், "ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்" (யோவான் 17:3).

எனவே, "தேவனை மெய்யாக அறிவதற்கான திறவுகோல் என்ன?" முதலாவதாக, மனிதனின் பாவத்தினால் மனிதன் தேவனை மெய்யாக அறிய இயலாது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நாம் அனைவரும் பாவிகளாக இருக்கிறோம் (ரோமர் 3) மற்றும் தேவனுடன் தொடர்புகொள்வதற்குத் தேவையான பரிசுத்தத்தின் தரத்தை நாம் மிகவும் இழந்திருக்கிறோம் என்பதை வேதம் நமக்கு வெளிப்படுத்துகிறது. நம் பாவத்தின் விளைவு மரணம் (ரோமர் 6:23) என்றும், சிலுவையில் இயேசுவின் தியாகப்பலியின் வாக்குறுதியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நாம் தேவன் இல்லாமல் நித்தியமாக அழிவோம் என்றும் சொல்லப்படுகிறது. எனவே, தேவனை மெய்யாக அறிய, நாம் முதலில் அவரை நம் வாழ்வில் பெற வேண்டும். "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" (யோவான் 1:12). இயேசுவேதான் பரலோகம் மற்றும் தேவனுடைய தனிப்பட்ட அறிவுக்கான வழி என்பதை தெளிவுபடுத்துகிறார்: "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" (யோவான் 14:6).

மேலே குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்வதையும் பெறுவதையும் தவிர இந்தப் பயணத்தைத் தொடங்க வேண்டிய அவசியமில்லை. இயேசு தன்னையே சிலுவையில் பலியாக தந்ததன் மூலம் நமக்கு ஜீவா சுவாசத்தை சுவாசிக்க தந்தார், அதனால் நம் பாவங்கள் தேவனை அறிவதை தடுக்காது. இந்த உண்மையை நாம் பெற்றவுடன், நாம் தனிப்பட்ட முறையில் தேவனை அறியும் பயணத்தைத் தொடங்கலாம். இந்தப் பயணத்தின் முக்கிய பொருட்களில் ஒன்று, வேதாகமம் தேவனுடைய வார்த்தை மற்றும் அவரைப் பற்றிய வெளிப்பாடு, அவருடைய வாக்குறுதிகள், அவருடைய விருப்பம். வேதாகமம் அடிப்படையில் தேவனிடமிருந்து நமக்கு எழுதப்பட்ட ஒரு அன்பான காதல் கடிதம், அவரை நெருக்கமாக அறிய நம்மை உருவாக்கியது. இந்த காரணத்திற்காகவே நமக்கு வெளிப்படுத்தப்பட்ட அவருடைய வார்த்தையில் நம்மை மூழ்கடிப்பதை விட, நம் சிருஷ்டிகரைப் பற்றி அறிய சிறந்த வழி எது? மேலும் இந்த பயணத்தை முழு பயணத்திலும் தொடர்வது முக்கியம். அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார், "கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது (2 தீமோத்தேயு 3:14-16).

இறுதியாக, மெய்யாகவே தேவனை அறிவது, நாம் வேதத்தில் படிப்பதைக் கடைப்பிடிப்பதற்கான நமது உறுதிப்பாட்டை உள்ளடக்கியது. எல்லாவற்றிற்கும் மேலாக, தேவன் தன்னைத் தொடர்ந்து உலகுக்கு வெளிப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்காக நாம் நற்கிரியைகளைச் செய்ய சிருஷ்டிக்கப்பட்டோம் (எபேசியர் 2:10). தேவனை அறிவதற்குத் தேவையான நம்பிக்கையை வாழ்வதற்கான பொறுப்பை நாம் சுமக்கிறோம். இந்த பூமியில் நாம் உப்பு மற்றும் வெளிச்சமாக இருக்கிறோம் (மத்தேயு 5:13-14), தேவனுடைய சுவையை உலகுக்கு கொண்டு வரவும், இருளுக்கு நடுவில் ஒளிரும் ஒளியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் தேவனுடைய வார்த்தையைப் படித்து புரிந்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமல்லாமல், அதை கீழ்ப்படிதலுடன் பொருத்தி விசுவாசமாக இருக்க வேண்டும் (எபிரெயர் 12). இயேசுவே நம் அனைவரிடமும் தேவனை நேசிப்பதற்கும், நம்மைப் போலவே நம் பிறன் வீட்டாரையும் நேசிப்பதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார் (மத்தேயு 22). இந்த கட்டளையை அவருடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்ட அவருடைய சத்தியத்தைப் படித்து கைக்கொள்ளும் அர்ப்பணிப்பு இல்லாமல் இருக்க இயலாது.

இவைகள்தான் தேவனை மெய்யாக அறிவதற்கான திறவுகோல்கள். நிச்சயமாக, நம் வாழ்வில் ஜெபம், பக்தி, ஐக்கியம் மற்றும் ஆராதனை போன்ற அர்ப்பணிப்புகள் அடங்கும். ஆனால் அவை யாவும் இயேசுவையும் அவருடைய வாக்குறுதிகளையும் நம் வாழ்வில் ஏற்றுக்கொள்வதற்கான ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கும் தேவனை நாமாக நமது சொந்த முயற்சியில் உண்மையில் அறிய முடியாது என்பதை மட்டுமே ஈந்து உதவ முடியும். அப்போது நம் வாழ்க்கை தேவனால் நிரப்பப்படலாம், மேலும் நாம் அவரை நெருக்கமாகவும் தனிப்பட்ட முறையிலும் அறிந்து கொள்ளவும் முடியும்.

English



முகப்பு பக்கம்

தேவனை மெய்யாக அறிவதற்கான திறவுகோல் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries