கேள்வி
கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிதல் சட்டங்கள் தேசம்?
பதில்
ரோமர் 13:1-7 வரையிலுள்ள வசனங்கள் சொல்லுகிறது, "எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள். மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும். உனக்கு நன்மை உண்டாகும்பொருட்டு, அவன் தேவவூழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவவூழியக்காரனாயிருக்கிறானே. ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும். இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவவூழியக்காரராயிருக்கிறார்களே. ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்."
தேவன் நமக்கு மேல் ஏற்படுத்திவைத்திருக்கும் அரசாங்கத்திற்கு நாம் கீழ்படிய வேண்டும் என்று இந்த வேதப்பகுதி தெளிவாக விளக்குகிறது. ஒழுங்கை ஏற்படுத்த, தீமையை தண்டிக்க, மற்றும் நீதியை நிலைநாட்ட தேவன் அரசாங்கத்தை உருவாக்கியிருக்கிறார் (ஆதியாகமம் 9:6; 1கொரிந்தியர் 14:33; ரோமர் 12:8). நாம் அரசாங்கத்திற்கு வரிசெலுத்துவதில், சட்டதிட்டங்களுக்கு கீழ்படிவதில் மற்றும் கனம் செலுத்துவதில் கீழ்படிதலுள்ளவர்களாக இருக்கவேண்டும். அப்படி நாம் செய்யாதது தேவனையே அவமதிக்கும் செயலாகும் ஏனென்றால் தேவனே அரசாங்கத்தை நமக்கு மேல் ஏற்படுத்தியிருக்கிறார். அப்போஸ்தலனாகிய பவுல் இதை எழுதும்போது நீரோவின் ஆட்சியில் ரோம அரசாங்கத்திற்கு கீழ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ரோம ராஜ்யத்தில் மிக கொடுரமான ஆட்சிக்காலமாக இருப்பினும் பவுல் அவருக்கு மேல் இருந்த ரோம அரசாங்கத்தின் ஆட்சியை அங்கிகரித்தார். எனவே நாம் எப்படி அரசாங்கத்தை எதிர்க்க முடியும்?
அடுத்த கேள்வி, அரசாங்கத்தினுடைய சட்டதிட்டங்ளை நாம் வேண்டுமென்றே கீழ்படியாமல் இருப்பதற்கு குறிப்பாக ஏதேனும் சமயம்/காரணங்கள் உண்டா? இதற்கான பதிலை அப்போஸ்தலர் 5:27-29ல் வாசிக்கிறோம், "அப்படி அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி: நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான். அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது."
தேசத்தினுடைய சட்டங்கள் தேவனுடைய பிரமாணங்களுக்கு முரண்பாடாக இல்லாத பட்சத்தில் நாம் தேசத்தினுடைய சட்டங்களுக்கு கீழ்படிய கடமைப்பட்டவர்கள் என்பது மேற்க்குறிப்பிட்ட வசனங்களிலிருந்து தெளிவாகிறது. தேசத்தினுடைய சட்டதிட்டங்கள் தேவனுடைய பிரமாணங்களுக்கு முரண்படுகிறபோது நாம் அதற்குக் கீழ்படிய வேண்டாம். ஆனால் தேவனுடைய பிரமாணங்களுக்கு கீழ்படியவேண்டும். எனினும் மேற்குறிப்பிட்ட சம்பவத்தின் படி நாம் நமக்கு மேல் இருக்கும் அரசாங்கத்தின் அதிகாரத்தை அங்கிகரிக்க வேண்டும். பேதுருவும் யோவானும் அரசாங்கத்தை எதிர்க்க வில்லை ஆனால் அவர்கள் கீழ்ப்படிதலின் பாடுகளுக்காக சந்தோஷப்பட்டதின் மூலம் இதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் (அப்போஸ்தலர் 5:40-42).
English
கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிதல் சட்டங்கள் தேசம்?