கேள்வி
கைகளை வைத்தல் - வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்
"கைகளை வைத்தல்" என்பது வேதாகம நடவடிக்கை; இருப்பினும், ஒரு குறிப்பிட்ட ஆவிக்குரிய ஊழியத்திற்கு சரீரப்பிரகாரமாக கைகளை வைக்க வேண்டும் என்று வேதாகமத்தில் கட்டளை எதுவும் இல்லை. தாம் குணமாக்கியவர்களில் அநேகர் மீது இயேசு மெய்யாகவே தம் கைகளை வைத்தார்; இருப்பினும், அவர் ஜனங்கள் மீது கைகளை வைக்காமல் குணப்படுத்தினார். உண்மையில், அவர் குணப்படுத்தியவர்களின் அருகில் அவர் எங்கும் இல்லாத நேரங்களும் இருந்தன. மத்தேயு 8:8, நூற்றுக்கு அதிபதியின் வீட்டிற்கு அருகில் செல்லாமல், நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரனை இயேசு குணப்படுத்துவதை விவரிக்கிறது.
பின்வருபவை கருத்தில் கொள்ள வேண்டிய இரண்டு நிகழ்வுகள்: ஒரு சந்தர்ப்பத்தில் பரிசுத்த ஆவியானவர் ஒரு அப்போஸ்தலன் கைகளை வைக்கும் செயலின் மூலம் அந்நிய பாஷைகளில் பேசும் வரத்தை அளிக்கிறார், மற்றொரு சந்தர்ப்பத்தில் அவர் கைகளை வைக்காமல், ஆனால் வெறுமனே அப்போஸ்தலரின் மூலம் பிரசங்கம் செய்யப்படுகிறதை கேட்டுக்கொண்டிருந்தபோதே நிகழ்கிறது.
"அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். அதைக் கேட்டபோது அவர்கள்: கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தாவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்" (அப்போஸ்தலர் 19:4-6).
"இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும் தேவனைப் புகழுகிறதையும், பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்" (அப்போஸ்தலர் 10:44-46).
1 தீமோத்தேயு 5:22 இல், ஆவிக்குரியத் தலைமையின் பொறுப்பை (அது எப்படிச் செய்யப்பட்டாலும்) கவனமாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைப் போலவே கைகளை வைப்பதன் சரீரப்பிரகாரமான நடவடிக்கையை எச்சரிப்பதில் சிந்தனை அதிகம் இல்லை. இது "திடீரென்று" அல்லது சரியான பரிசீலனை இல்லாமல் செய்யப்படக்கூடாது: "ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள்."
சந்தேகத்திற்கு இடமின்றி, ஆரம்பகால திருச்சபையில் கைகளை வைத்தல், செய்தியை செய்தியை அளித்தவருடன் இணைக்கும் ஒரு வழிமுறையாக இருந்தது, அல்லது பரிசளித்தவருடன் ஆவிக்குரிய பரிசு. இது அவரை அங்கீகரிக்கும் ஒரு "அடையாளத்தை" வழங்கியது, அவர் மூலம் ஆவிக்குரிய பரிசின் சரீர வெளிப்பாடு வழங்கப்பட்டது. திருச்சபையின் ஊழியத்திற்கு மாந்திரிக வேதாகமச் சூத்திரங்கள் எதுவும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கைகளை வைப்பதில் எந்த சக்தியும் இல்லை. கைகளை வைப்பது தேவனுடைய வார்த்தைக்கு உடன்படும்போது மட்டுமே தேவனால் பயன்படுத்தப்படுகிறது.
English
கைகளை வைத்தல் - வேதாகமம் என்ன சொல்லுகிறது?