settings icon
share icon
கேள்வி

நித்திய பாதுகாப்பு என்பது பாவம் செய்வதற்கு “உரிமை” கொடுக்கிற காரியமா?

பதில்


நித்திய பாதுகாப்பு என்ற உபதேசத்துக்கு சொல்லப்படுகிற பொதுவான பெரும் எதிர்ப்பு என்னவென்றால், மக்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பாவமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இரட்சிக்கப்பட்டவர்களாகவும் இருக்க முடியும் என்று அனுமதிக்கின்றது என்பது தான். இது மேலோட்டமாக பார்க்கும்போது உண்மையென்று தோன்றலாம். ஆனால் நிஜத்தில் அப்படி அல்ல. ஒரு மனிதன் உண்மையாகவே இயேசு கிறிஸ்துவினால் மீட்கப்பட்டு இருப்பானேயானால் அவன் மனதாரத் தொடர்ந்து பாவ வாழ்க்கையில் தொடர்ந்து வாழ மாட்டான். ஒரு கிறிஸ்தவன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கும், இரட்சிப்பை எப்படி பெற்றுக் கொள்வது என்பதற்கும் இடையே இருக்கும் வித்யாசத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

வேதாகமம் இரட்சிப்பு கிருபையினால் விசுவாசத்தை கொண்டு இயேசு கிறிஸ்துவின் மூலமாகவுமே வருகிறது என்று கூறுகிறது (யோவான் 3:16; எபேசியர் 2:8-9; யோவான் 14:6). ஒரு மனிதன் இயேசு கிறிஸ்துவில் உண்மையான விசுவாசம் வைக்கும்போது அவனோ அவளோ இரட்சிக்கப்படுகின்றனர். அதில் பாதுகாப்பாகவும் இருக்கின்றனர். இரட்சிப்பு விசுவாசம் மூலமாகப் பெறப்படவில்லையானால் அது கிரியை மூலம் காக்கப்படுகின்றதாகிவிடும். பவுல் அப்போஸ்தலன் கலாத்தியர் 3:3ல் “ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?” என்று கேள்வி எழுப்புகிறார். நாம் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப் பட்டிருப்போமானால், நம்முடைய இரட்சிப்பு பாதுகாக்கப்படுவது விசுவாசத்தினால்தான். நம்முடைய இரட்சிப்பை நாமே சம்பாதித்துவிட முடியாது. ஆகவே நம்முடைய இரட்சிப்பை நாமே சம்பாதிக்கவோ காத்துக்கொள்ளவோ முடியாது. தேவன் தான் நாம் இரட்சிப்பிலிருப்பதை பார்த்துக்கொள்கிறார் (யூதா 24). கர்த்தருடைய கரமே நம்மை இறுகப்பிடித்து அவருடைய கரத்தில் பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறது (யோவான் 10:28-29). தேவனுடைய அன்பைவிட்டு நம்மை எதுவும் பிரிக்காது (ரோமர் 8:38-39).

நித்திய பாதுகாப்பு இல்லை என்று நாம் நினைக்கும்போது, நம்முடைய இரட்சிப்பை நல்லொழுக்கத்தோடும் சுயமுற்சியிலும்தான் காத்துக் கொள்ள வேண்டும் என்று நம்புகிறோம் என்று அர்த்தம். இது கிருபையின் மூலம்தான் இரட்சிப்பு என்பதற்கு முற்றிலும் எதிரான கருத்தாகும். நாம் சுயமுயற்சியினால் அல்ல கிறிஸ்துவின் கிரியையினால்தான் இரட்சிக்கப்பட்டிருக்கின்றோம் (ரோமர் 4:3-8). நாம் இரட்சிப்பைக் காத்துக்கொள்ள தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து ஒரு பரிசுத்தமான வாழ்வு வாழ வேண்டும் என்று சொல்லுவது இயேசுவின் மரணம் நம்முடைய பாவத்தை போக்க போதுமான விலைக்கிரயம் இல்லையென்கிறோம் என்று அர்த்தம். இயேசுவின் மரணம் நம்முடைய எல்லாப் பாவத்தையும் போக்கவல்லது. அதாவது கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால, இரட்சிப்புக்கு-முன்பான மற்றும் இரட்சிப்புக்கு-பின்பான பாவங்களை போக்க போதுமானது. (ரோமர் 5:8; 1 கொரிந்தியர் 15:3; 2 கொரிந்தியர் 5:21).

இதன் அர்த்தம் கிறிஸ்தவர்கள் எப்படியும் வாழ்ந்துவிட்டு இரட்சிக்கப்பட்டிருக்கவும் முடியும் என்பதா? இந்த கேள்வி முற்றிலும் அனுமானமானது ஆகும். வேதாகமம் நமக்கு கூறுகிற காரியம் என்னவெனில், ஒரு உண்மையான கிறிஸ்தவன் ‘‘எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று வாழமாட்டான்’’ என்பதாகும். கிறிஸ்தவர்கள் புதிய கிருஷ்டிகள் (2 கொரிந்தியர் 5:17). கிறிஸ்தவர்கள் ஆவியின் கனியை வெளிப்படுத்துகிறார்கள் (கலாத்தியர் 5:22-23), மாம்சத்தின் கிரியை அல்ல (கலாத்தியர் 5:19-21). 1 யோவான் 3:6-9ல் ஒரு உண்மையான கிறிஸ்தவன் தொடர்ந்து பாவத்திலேயே வாழ்ந்துக் கொண்டிருக்க மாட்டான் என்று கூறுகிறது. கிருபை பாவத்தைச் செய்ய தூண்டுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு பவுல் அப்போஸ்தலன் ரோமர் 6:1-2 –ல் பதிலளிக்கிறார்: “ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே. பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?”

நித்திய பாதுகாப்பு என்பது பாவம் செய்ய உரிமை கொடுப்பது கிடையாது. மாறாக கிறிஸ்துவை நம்புபவர்களுக்கு தேவனுடைய அன்பு நிச்சயம் உண்டு என்கிறதான பாதுகாப்பு உள்ளது. தேவனுடைய அதிசயமான ஈவான இரட்சிப்பை அறிந்து புரிந்துக்கொள்ளும்போது பாவம் செய்ய உரிமை கொடுக்கவில்லையென்று நாம் புரிந்துக்கொள்ள வழிவகுக்கிறது. இயேசு கிறிஸ்து நமக்காக செலுத்தின விலைக்கிரயத்தை அறிந்த ஒருவன், எப்படி தொடர்ந்து பாவ வாழ்க்கை வாழமுடியும் (ரோமர் 6:15-23)? தேவனுடைய நிபந்தனையற்ற மற்றும் நிச்சயமான அன்பு விசுவாசிகளுக்கு இருக்கிறது என்று புரிந்துக்கொண்ட எவரும் அந்த அன்பை எடுத்து தேவனுடைய முகத்தில் எப்படி திருப்பி விட்டெரிய முடியும்? அப்படி செய்கிறவன் நித்திய பாதுகாப்பு பாவம் செய்ய உரிமை கொடுத்தது என்று காட்டுவதைவிட இயேசுகிறிஸ்துவின் மூலம் வரும் உண்மையான இரட்சிப்பை அனுபவப்பூர்வமாக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. ‘‘அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவம் செய்கிறதில்லை, பாவம் செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை’’ (I யோவான் 3:6).

English



முகப்பு பக்கம்

நித்திய பாதுகாப்பு என்பது பாவம் செய்வதற்கு “உரிமை” கொடுக்கிற காரியமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries