கேள்வி
நான்காவது நாள் வரை சூரியன் சிருஷ்டிக்கப்படவில்லை என்றால், சிருஷ்டிப்பின் முதல் நாளில் வெளிச்சம் எப்படி இருக்கும்?
பதில்
நான்காவது நாள் வரை சூரியன் சிருஷ்டிக்கப்படாத நிலையில் சிருஷ்டிப்பின் முதல் நாளில் எப்படி வெளிச்சம் இருக்கும் என்கிற கேள்வி பொதுவானது. ஆதியாகமம் 1:3-5 அறிவிக்கிறது, "தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று." சில வசனங்களுக்குப் பிறகு நமக்குத் தெரிவிக்கப்படுகிறது என்னவெனில், "பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று" (ஆதியாகமம் 1:14-19). இது எப்படி சாத்தியமாகும்? சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் நான்காவது நாள் வரை உருவாக்கப்படவில்லை என்றால், முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில் வெளிச்சம், காலை மற்றும் மாலை எப்படி இருக்கும்?
எல்லையற்ற மற்றும் சர்வ வல்லமையுள்ள தேவனை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறினால் மட்டுமே இது ஒரு பிரச்சனை. தேவனுக்கு வெளிச்சம் கொடுப்பதற்கு சூரியன், சந்திரன், மற்றும் நட்சத்திரங்கள் தேவையில்லை. தேவனே ஒளியாயிருக்கிறார்! 1 யோவான் 1:5 அறிவிக்கிறது, "தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது." புதிய வானம் புதிய பூமியிலும் இருப்பதைப் போலவே, சிருஷ்டிப்பின் முதல் மூன்று நாட்களுக்கு தேவனே வெளிச்சமாக இருந்தார், “அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்” (வெளிப்படுத்துதல் 22:5). அவர் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை உருவாக்கும் வரை, தேவன் "பகலில்" அற்புதமாக வெளிச்சத்தைக் கொடுத்தார், மேலும் "இரவில்" அதைச் செய்திருக்கலாம் (ஆதியாகமம் 1:14).
இயேசு சொன்னார், “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்” (யோவான் 8:12). பகல் மற்றும் இரவின் ஒளியை விட மிக முக்கியமானது, அவரை நம்பும் அனைவருக்கும் நித்திய ஜீவனை வழங்கும் ஒளி. அவரை நம்பாதவர்கள் "அழுகையும் பற்கடிப்பும் உள்ள காரிருளுக்குள்" (மத்தேயு 8:12) அழிந்து போவார்கள்.
English
நான்காவது நாள் வரை சூரியன் சிருஷ்டிக்கப்படவில்லை என்றால், சிருஷ்டிப்பின் முதல் நாளில் வெளிச்சம் எப்படி இருக்கும்?