கேள்வி
கிறிஸ்துவின் அன்பு என்றால் என்ன?
பதில்
"கிறிஸ்துவுக்கான அன்பு" என்பதற்கு மாறாக "கிறிஸ்துவின் அன்பு" என்ற சொற்றொடர், அவர் மனிதகுலத்தின் மீது வைத்திருக்கும் அன்பைக் குறிக்கிறதாய் இருக்கிறது. நம்முடைய நலனில் அவர் கொண்டிருக்கும் விருப்பத்தின் சிறப்பானச் செய்கையாக இருக்கிறது, குறிப்பாக நம்முடைய மிகப் பெரிய தேவையைப் பூர்த்தி செய்வதில் அவருடைய விருப்பம் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
கிறிஸ்து இயேசு, சுபாவத்தில் தேவனாக இருந்தும், ஆரம்ப காலத்திலிருந்தே பிதாவாகிய தேவன் (யோவான் 1:1) மற்றும் பரிசுத்த ஆவியோடு இருந்தபோதிலும், அவர் ஒரு மனிதனாக மாறுவதற்காக அவருடைய சிங்காசனத்தை (யோவான் 1:1-14) முழு விருப்பத்துடன் விட்டுவிட்டார். நம்முடைய பாவத்திற்கான தண்டனையை நாம் அடைந்து, அதனால் அக்கினிக்கடலில் நித்தியம் முழுவதும் நாம் அந்த பாவத்திற்கான விலைக்கிரையத்தை செலுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் (வெளிப்படுத்துதல் 20:11-15) யாவற்றையும் அவர் செலுத்தி விட்டார். மனிதகுலத்தின் பாவத்திற்கான விலைக்கிரையம் நமது பாவமில்லாத இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவினால் செலுத்தப்பட்டதால், நீதியும் பரிசுத்தமுமுள்ள தேவன் கிறிஸ்து இயேசுவின் விலைக்கிரையத்தை நம்முடையதாக ஏற்றுக்கொள்ளும்போது நம் பாவங்களை மன்னிக்க முடியும் (ரோமர் 3:21-26). இவ்வாறு, கிறிஸ்துவின் அன்பு பரலோகத்தில் தனது வாசஸ்தலத்தை விட்டு வெளியேறியதில் காட்டப்பட்டது, அங்கு அவர் தகுதியுள்ளவராக வணங்கப்பட்டு கனப்படுத்தப்பட்டார், அங்கிருந்து அவர் பூமிக்கு வந்தபோது பரியாசம் பண்ணப்பட்டு, காட்டிக்கொடுக்கப்பட்டு, அடிக்கப்பட்டு, நம்முடைய பாவத்திற்காக சிலுவையில் அறையப்பட்டார், பின்பு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். நம்முடைய பாவத்திலிருந்து இரட்சிக்கும் ஒரு இரட்சகரின் தேவையையும் பாவத்தின் தண்டனையை போக்குதலையும் அவர் கருத்தில் கொண்டு, அதை அவருடைய சொந்த ஆறுதலையும் ஜீவனையும் விட முக்கியமானதாகக் கருதினார் (பிலிப்பியர் 2:3-8).
சில சமயங்களில் மக்கள் தங்கள் உயிரைக் கொடுக்கத் தகுதியானவர்களுக்கு கொடுப்பார்கள் அதாவது நண்பர்கள், உறவினர்கள், மற்ற "நல்ல" மக்கள் போன்றோருக்காக கொடுப்பார்கள். ஆனால் கிறிஸ்துவின் அன்பு அதற்கும் அப்பாற்பட்டது. கிறிஸ்துவின் அன்பு மிகவும் தகுதியற்றவர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. தன்னை அடித்து சித்திரவதை செய்தவர்கள், அவரை வெறுப்பவர்கள், அவருக்கு எதிராக கலகம் செய்தவர்கள், அவரைப் பற்றி எதுவும் கவலைப்படாதவர்கள், அவருடைய அன்பிற்கு தகுதியற்றவர்கள் போன்றவர்களை அவர் விரும்பினார் (ரோமர் 5:6-8). குறைந்தபட்சம் தகுதியுள்ளவர்களுக்காவும் அவரால் முடிந்த மாபெரும் அன்பை அவர் கொடுத்தார்! எனவே, பலி என்பது தெய்வீக அன்பின் சாராம்சமாகும், இது அகப்பே அன்பு என்று அழைக்கப்படுகிறது. இது தேவன்-போன்ற அன்பு, மனிதனைப்-போன்ற அன்பு அல்ல (மத்தேயு 5:43-48).
சிலுவையில் அவர் நம்மீது காட்டிய இந்த அன்பு ஒரு ஆரம்பம் மட்டுந்தான். நம்முடைய இரட்சகராக நாம் அவர் மீது நம்பிக்கை வைக்கும்போது, அவர் நம்மை தேவனுடைய பிள்ளைகளாக ஆக்குகிறார், பிதாவாகிய தேவனுக்கு அவருடன் இணை வாரிசுகள் ஆகிறோம்! அவர் தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலம் நமக்குள் வாசம் செய்ய வருகிறார், அவர் நம்மை ஒருபோதும் விட்டு விலகமாட்டார் அல்லது நம்மை கைவிட மாட்டார் என்று உறுதியளித்தார் (எபிரெயர் 13:5-6). இவ்வாறு, நம்முடைய வாழ்க்கைக்கு ஒரு அன்பான துணை நமக்கு இருக்கிறது. நாம் எதைச் சந்தித்தாலும், அவர் இருக்கிறார், அவருடைய அன்பு நமக்கு எப்போதும் கிடைக்கும் (ரோமர் 8:35). ஆனால் அவர் பரலோகத்தில் ஒரு நற்குணமிக்க ராஜாவாக சரியாக ஆளுகை செய்கிறார், அவருக்கு நமது வாழ்க்கையிலும் அவருக்குத் தகுதியான ஸ்தானத்தை வழங்க வேண்டும், அதாவது நம்முடைய எஜமானனாக வெறும் தோழனாக அல்ல. அப்போதுதான் அவர் விரும்பியபடி வாழ்க்கையை அனுபவித்து அவருடைய அன்பின் முழுமையில் நாம் வாழ்வோம் (யோவான் 10:10).
English
கிறிஸ்துவின் அன்பு என்றால் என்ன?