கேள்வி
நாம் பாவியை நேசித்து ஆனால் பாவத்தை வெறுக்க வேண்டுமா?
பதில்
பல கிறிஸ்தவர்கள் “பாவியை நேசிக்கவும், பாவத்தை வெறுக்கவும்” என்கிற என்கிற காது புளித்த சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், இது அபூரண மனிதர்களாகிய நமக்கு ஒரு அறிவுரை என்பதை நாம் உணர வேண்டும். அன்பு கூறுவதையும் வெறுப்பதையும் பொறுத்தவரை நமக்கும் தேவனுக்கும் உள்ள வேறுபாடு மிகப் பெரியது ஆகும். கிறிஸ்தவர்களாக இருந்தாலும், நம்முடைய மனிதகுலத்தில் நாம் அபூரணர்களாக இருக்கிறோம், மேலும் முழுமையாக நம்மால் நேசிக்க முடியாது, அதுபோலவே நாம் முழுமையாக வெறுக்கவும் முடியாது (வேறுவிதமாகக் கூறினால், தீமை இல்லாமல்). ஆனால் தேவன் இந்த இரண்டையும் சரியாகச் செய்ய முடியும், ஏனென்றால் அவர் தேவன். எந்த பாவ நோக்கமும் இல்லாமல் தேவனால் வெறுக்க முடியும். ஆகையால், அவர் பாவத்தையும் பாவியையும் ஒரு முழுமையான புனித வழியில் வெறுக்க முடியும், மேலும் அந்த பாவியின் மனந்திரும்புதலின் மற்றும் விசுவாசத்தின் தருணத்தில் அன்பாக மன்னிக்க தயாராகவும் இருக்க முடியும் (மல்கியா 1:3; வெளிப்படுத்துதல் 2:6; 2 பேதுரு 3:9).
தேவன் அன்பாயிருக்கிறார் என்று வேதாகமம் தெளிவாகக் கற்பிக்கிறது. முதல் யோவான் 4:8-9 கூறுகிறது, “அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.” மர்மமான ஆனால் உண்மையானது என்னவென்றால், தேவன் ஒரே நேரத்தில் ஒரு நபரை முழுமையாக நேசிக்கவும் வெறுக்கவும் முடியும். இதன் பொருள், அவர் சிருஷ்டித்த ஒரு சிருஷ்டிகராக அவர்களை நேசிக்க முடியும் மற்றும் மீட்க முடியும், அதே போல் அவர்களது நம்பிக்கையின்மை மற்றும் பாவமான வாழ்க்கை முறைக்காக அவர்களை தேவனால் வெறுக்கவும் முடியும். அபூரண மனிதர்களாகிய நாம் இதைச் செய்ய முடியாது; ஆகவே, "பாவியை நேசிக்கவும், பாவத்தை வெறுக்கவும்" நம்மை நினைவூட்ட வேண்டுவது அவசியமாக இருக்கிறது.
அது எவ்வாறு சரியாக வேலை செய்கிறது? பாவத்தை அதில் பங்கேற்க மறுப்பதன் மூலமும், அதைக் காணும்போது அதைக் கண்டிப்பதன் மூலமும் நாம் வெறுக்கிறோம். பாவத்தை வெறுக்க வேண்டும், மன்னிக்கவோ அல்லது லேசாக எடுத்துக் கொள்ளவோ கூடாது. இயேசு கிறிஸ்துவின் மூலமாகக் கிடைக்கும் மன்னிப்புக்கு சாட்சியாக இருப்பதன் மூலம் பாவிகளை நேசிக்கிறோம். அன்பின் ஒரு உண்மையான செயல், ஒருவருடன் மரியாதை மற்றும் தயவுடன் நடந்துகொள்வது, அவருடைய வாழ்க்கை முறை மற்றும் / அல்லது தேர்வுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் / அவள் அறிந்திருந்தாலும் நீங்கள் அவர்களை நேசித்து அவர்கள் செய்வதை வெறுக்கமுடியும். ஒரு நபர் பாவத்தில் சிக்கி இருக்க அனுமதிப்பது அன்பல்ல. ஒரு நபர் அவன் / அவள் பாவத்தில் இருப்பதாக சொல்வது வெறுக்கத்தக்கதும் அல்ல. உண்மையில், சரியான எதிர்நிலைகள் உண்மைதான். அன்பில் சத்தியத்தைப் பேசுவதன் மூலம் பாவியை நேசிக்கிறோம். பாவத்தை மன்னிக்கவோ, புறக்கணிக்கவோ அல்லது மன்னிக்க மறுப்பதன் மூலம் நாம் வெறுக்கிறோம்.
English
நாம் பாவியை நேசித்து ஆனால் பாவத்தை வெறுக்க வேண்டுமா?