கேள்வி
தேவன் இல்லாமல் மனிதன் வாழ முடியுமா?
பதில்
பல நூற்றாண்டுகளாக நாத்திகர்கள் மற்றும் ஞானமார்க்கத்தார் கூறுவதற்கு மாறாக, தேவன் இல்லாமல் மனிதன் வாழ முடியாது. தேவனை ஒப்புக் கொள்ளாமல் மனிதனுக்கு இந்த பூமியில் ஒரு இருப்பு இருக்க முடியும், ஆனால் தேவனின் உண்மை இல்லாமல் இருக்கமுடியாது.
சிருஷ்டிகராக, தேவன் மனித வாழ்க்கையை உருவாக்கினார். தேவனை இல்லாமல் மனிதன் இருக்க முடியும் என்று சொல்வது, ஒரு கடிகாரம் ஒரு கடிகாரத் தயாரிப்பாளர் இல்லாமல் இருக்க முடியும் அல்லது ஒரு கதைசொல்லுகிறவர் இல்லாமல் ஒரு கதை இருக்க முடியும் என்பதுபோலாகும். நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்ட தேவனுக்கு கடமைப்பட்டிருக்கிறோம் (ஆதியாகமம் 1:27). தேவனின் இருப்பை நாம் ஒப்புக்கொள்கிறோமோ இல்லையோ, நம்முடைய இருப்பு தேவனில் அவரை சார்ந்தே இருக்கிறது.
பாதுகாக்கிறவராக, தேவன் தொடர்ந்து ஜீவனுக்கு தேவையானதை வழங்குகிறார் (சங்கீதம் 104:10-32). அவர் ஜீவனாக இருக்கிறார் (யோவான் 14:6), எல்லாப் படைப்புகளும் கிறிஸ்துவின் சக்தியால் ஒன்றிணைக்கப்படுகின்றன (கொலோசெயர் 1:17). தேவனை நிராகரிப்பவர்கள் கூட அவரிடமிருந்து தங்களின் வாழ்வாதாரத்தைப் பெறுகிறார்கள்: “அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்” (மத்தேயு 5:45). தேவன் இல்லாமல் மனிதன் வாழ முடியும் என்று கூறுவது, சூரியகாந்தி தொடர்ந்து ஒளி இல்லாமல் அல்லது ரோஜா தண்ணீர் இல்லாமல் வாழ முடியும் என்று நினைப்பதாகும்.
இரட்சகராக, தேவன் விசுவாசிப்பவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறார். கிறிஸ்துவில் ஜீவன் இருக்கிறது, அது மனிதர்களுக்கு ஒளியாக இருக்கிறது (யோவான் 1:4). இயேசு நமக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தார் (யோவான் 10:10). அவர்மீது நம்பிக்கை வைக்கும் அனைவருக்கும் அவருடன் நித்தியத்தை வாக்கு பண்ணியிருக்கிறார் (யோவான் 3:15-16). மனிதன் வாழ – மெய்யாகவே வாழ்வதற்கு - அவன் கிறிஸ்துவை அறிந்து கொள்ள வேண்டும் (யோவான் 17:3).
தேவன் இல்லாமல், மனிதனுக்கு சரீரப்பிரகாரமான வாழ்க்கை மட்டுமே உள்ளது. தேவன், ஆதாமையும் ஏவாளையும் அவர்கள் அவரது கட்டளையை மீறி அவரை நிராகரிக்கிற நாளில் அவர்கள் “மெய்யாகவே சாகவே சாவார்கள்” என்று எச்சரித்தார் (ஆதியாகமம் 2:17). நமக்குத் தெரியும், அவர்கள் கீழ்ப்படியவில்லை, ஆனால் அவர்கள் அன்று உடல் ரீதியாக இறக்கவில்லை; மாறாக, அவர்கள் ஆவிக்குரிய ரீதியில் இறந்தார்கள். அவர்களுக்குள் ஏதோ இறந்தது - அவர்கள் அறிந்த ஆவிக்குரிய வாழ்க்கை, தேவனுடனான ஒற்றுமை, அவரை அனுபவிக்கும் சுதந்திரம், அவர்கள் ஆத்துமாவின் அப்பாவித்தனம் மற்றும் தூய்மை - இவை அனைத்தும் இல்லாமல் போய்விட்டன.
தேவனோடு வாழ்வதற்கும் ஐக்கியம் வைத்துக்கொள்வதற்கும் படைக்கப்பட்ட ஆதாம், முற்றிலும் சரீர இருப்புடன் சபிக்கப்பட்டான். தேவன் இப்போது புழுதியிலிருந்து மகிமைக்குச் செல்ல விரும்பியிருப்பது புழுதியிலிருந்து புழுதிக்கு செல்வதாக மாறியது. ஆதாமைப் போலவே, தேவன் இல்லாத மனிதன் இன்றும் ஒரு பூமிக்குரிய நிலையில் செயல்படுகிறான். அத்தகைய நபர் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றலாம்; எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியும் இருக்கிறது. ஆனால் அந்த இன்பங்களையும் கூட தேவனுடனான உறவு இல்லாமல் முழுமையாகப் பெற முடியாது.
தேவனை நிராகரிக்கும் சிலர் திசைதிருப்பல் மற்றும் குசாலுடன் வாழ்கின்றனர். அவர்களின் மாம்ச முயற்சிகள் ஒரு கவலையற்ற மற்றும் மனநிறைவான இருப்பைக் கொடுப்பதாக தோன்றும். பாவத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு மகிழ்ச்சி இருப்பதாக வேதாகமம் கூறுகிறது (எபிரெயர் 11:25). பிரச்சனை என்னவென்றால், அது ஒரு தற்காலிகமானதாகும்; இந்த உலகில் உள்ள வாழ்க்கை குறுகியதாகும் (சங்கீதம் 90:3-12). விரைவில் அல்லது பின்னர், உவமையில் உள்ள கெட்டகுமாரனைப் போலவே, இன்பத்தில் திளைப்பவர்கள், சீக்கிரமாகவே உலக இன்பம் நீடிக்க முடியாதது என்பதைக் காண்கிறார்கள் (லூக்கா 15:13-15).
இருப்பினும், தேவனை நிராகரிக்கும் அனைவரும் வெற்று இன்பம் தேடுபவர்கள் அல்ல. இரட்சிக்கப்படாத பலர் ஒழுக்கமான, நிதானமான வாழ்க்கையை - மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றனர். விசுவாசம், நேர்மை, சுய கட்டுப்பாடு போன்றவற்றிற்கு பயனளிக்கும் சில தார்மீகக் கொள்கைகளை வேதாகமம் முன்வைக்கிறது. ஆனால், மீண்டும் தேவன் இல்லாமல் மனிதனுக்கு இந்த உலகம் மட்டுமே உள்ளது. இந்த வாழ்க்கையின் மூலம் நல்லொழுக்கத்தோடு சீராக செல்வது, நாம் மறுவாழ்வுக்கு தயாராக இருக்கிறோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. லூக்கா 12:16-21-ல் உள்ள ஐசுவரியவான விவசாயியின் உவமையையும், மத்தேயு 19:16-23-ல் உள்ள ஐசுவரியத்தோடு (ஆனால் மிகவும் தார்மீக) வாலிபனுடன் மாற்றியமைக்கிறார்.
தேவன் இல்லாமல், மனிதன் தனது இப்பூமிக்குரிய வாழ்க்கையில் கூட முழுமையடையாமல் இருக்கிறான். மனிதன் தன்னில்தானே சமாதானமாக இல்லாததால், அவன் தனது சக மனிதனுடனும் சமாதானமாக இல்லை. தேவனுடன் சமாதானம் இல்லாததால் மனிதன் தன்னுடன் அமைதியற்றவனாக இருக்கிறான். இன்பத்திற்காக இன்பத்தைத் தேடுவது உள் கொந்தளிப்பின் அறிகுறியாகும். வாழ்க்கையின் தற்காலிக திசைதிருப்பல்கள் ஆழ்ந்த விரக்திக்கு வழிவகுக்கும் என்பதை வரலாறு முழுவதும் இன்பம் தேடுபவர்கள் மீண்டும் மீண்டும் கண்டறிந்துள்ளனர். "ஏதோ தவறு" என்ற மோசமான உணர்வை அசைப்பது கடினம். சாலமோன் ராஜா இந்த உலகம் வழங்குவதற்கான சகல இன்பங்களை அனுபவிக்கும் முயற்சியில் தன்னைக் கொடுத்தார், மேலும் அவர் தனது கண்டுபிடிப்புகளை பிரசங்கி புத்தகத்தில் பதிவு செய்தார்.
அறிவு, தனக்குள்ளேயே இருக்கிற நிலையில், அது பயனற்றது என்பதை சாலமோன் கண்டுபிடித்தார் (பிரசங்கி 1:12-18). இன்பமும் செல்வமும் வீண் (2:1-11), உலோகாயதமதம் முட்டாள்தனம் (2:12-23), மற்றும் செல்வங்கள் விரைவாக இல்லாமல் போகிறவைகள் (அதிகாரம் 6) என்று அவர் கண்டறிந்தார்.
ஜீவனானது தேவனின் பரிசு என்று சாலமோன் முடிக்கிறார் (பிரசங்கி 3:12-13) மற்றும் வாழ்வதற்கான ஒரே ஞானமான வழி தேவனுக்குப் பயப்படுவதுதான் என்று கூறுகிறார்: “காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்” (பிரசங்கி 12:13-14).
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உடல் பரிமாணத்தை விட வாழ்க்கையில் இன்னும் அதிகம் உள்ளது. “மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” (மத்தேயு 4:4) என்று இயேசு சொல்லும்போது இந்த விஷயத்தை வலியுறுத்துகிறார். அப்பம் அல்ல (சரீரப்பிரகாரமான) ஆனால் தேவனுடைய வார்த்தை (ஆவிக்குரியது) நம்மை உயிரோடு வைத்திருக்கிறது. நம்முடைய எல்லா துயரங்களையும் குணப்படுத்த நமக்குள்ளேயே தேடுவது பயனற்றது. தேவனை ஒப்புக் கொள்ளும்போதுதான் மனிதனால் வாழ்க்கையையும் நிறைவையும் காண முடியும்.
தேவன் இல்லாமல், மனிதன் அடையும் முடிவு நரகமாகும். தேவன் இல்லாத மனிதன் ஆவிக்குரிய ரீதியில் இறந்துவிட்டான்; அவனது சரீரப்பிரகாரமான வாழ்க்கை முடிந்ததும், அவன தேவனிடமிருந்து நித்திய பிரிவினை எதிர்கொள்கிறார். ஐசுவரியவான் மற்றும் லாசரு பற்றிய இயேசு சொன்ன கதையில் (லூக்கா 16:19-31), ஐசுவரியவான் தேவனைப் பற்றி சிந்திக்காமல் ஒரு இன்பமான வாழ்க்கையை வாழ்கிறார், அதே நேரத்தில் லாசரு தனது வாழ்க்கையில் துன்பப்படுகிறார், ஆனால் தேவனை அறிந்திருந்தார். அவர்கள் இருவரும் இறந்த பிறகுதான் இருவருமே வாழ்க்கையில் அவரவர்கள் செய்த தேர்வுகளின் ஈர்ப்பை உண்மையாக புரிந்துகொள்கிறார்கள். செல்வத்தைத் தேடுவதை விட வாழ்க்கையில் வேறே அதிகம் இருக்கிறது என்பதை ஐசுவரியவான் மிகவும் தாமதமாக உணர்ந்தான். இதற்கிடையில், லாசரு பரலோகத்தில் ஆறுதலடைகிறார். இரு மனிதர்களுக்கும், அவர்களின் ஆத்துமாக்களின் நிரந்தர நிலைக்கு ஒப்பிடுகையில் அவர்களின் பூமிக்குரிய இருப்பு குறுகிய காலம் ஆகும்.
மனிதன் ஒரு தனித்துவமான தேவனின் படைப்பு ஆகும். தேவன் நம் இருதயங்களில் நித்திய உணர்வை ஏற்படுத்தியுள்ளார் (பிரசங்கி 3:11), காலமற்ற விதியின் அந்த உணர்வு தேவனிலேயே நிறைவேறும்.
English
தேவன் இல்லாமல் மனிதன் வாழ முடியுமா?