கேள்வி
மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?
பதில்
இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய இரவில், அவர் தம்முடைய சீஷர்களை விட்டுப் பிரிந்துபோவதாகவும் அவர்களால் அவருடன் செல்ல முடியாது என்றும் கூறினார் (யோவான் 13:33). அவர் எங்கே செல்கிறார், ஏன் அவர்களால் அவருடன் செல்ல முடியாது என்று பேதுரு கேட்டார், இறுதியில் அவர்கள் அவரைப் பின்பற்றுவார்கள் என்று இயேசு அவர்களுக்கு உறுதியளித்தார் (யோவான் 13:36-37). இயேசு சொன்னார், "என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்" (யோவான் 14:2-3).
கிங் ஜேம்ஸ் வெர்ஷன் (King James Version) "வீடு" மற்றும் "வாசஸ்தலங்கள்" என்கிற வார்த்தைகளை மொழிபெயர்த்துள்ளதால் இயேசுவின் இந்த வார்த்தை பலரைக் குழப்பியுள்ளது. "வீடு" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையின் அர்த்தம் "ஒரு தங்குமிடம்," அல்லது உருவகமான அர்த்தத்தில், மற்றும், உட்குறிப்பாக, "ஒரு குடும்பம்". "வாசஸ்தலங்கள்" அல்லது "அறைகள்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தையின் அர்த்தம் "தங்குதல் அல்லது வசித்தல்" என்பதாகும். எனவே, கிரேக்க மொழியை வைத்து, தேவனுடைய வீட்டில் (பரலோகத்தில்) தேவனுடைய குடும்பத்தில் பலர் ஒன்றாக இருப்பார்கள் என்று இயேசு கூறுகிறார். தேவனுடைய பரலோக வீட்டிற்குள், கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் வாழ்வார்கள். பொன்னாலானத் தெருக்களில் வரிசையாக வாசஸ்தலங்கள் என்ற யோசனையிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது, இது இயேசு என்ன சொல்கிறார் என்பதைக் குறித்து பலர் கொண்டிருக்கும் சித்திரம் ஆகும்.
இயேசு கிறிஸ்து பரலோகத்தில் அவருக்கு சொந்தமானவர்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்துகிறார், விசுவாசத்தில் தன்னிடம் வந்தவர்களுக்காக, பரிசுத்த ஆவியானவர் பூமியில் மீட்கப்பட்டவர்களை பரலோகத்தில் தங்கள் இடத்திற்கு வர ஆயத்தப்படுத்துகிறார். வெளிப்படுத்தல் 7:9, "பரலோகத்தில் ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்” என்று நமக்குச் சொல்கிறது. இங்கே, மீண்டும், பல்வேறு வாசஸ்தலங்களில் தனித்தனியாக வாழாமல், பல கூட்டங்கள் ஒன்றாக இருக்கிறது.
English
மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?