கேள்வி
காயீன்மேல் தேவன் போட்ட அடையாளம் என்ன (ஆதியாகமம் 4:15)?
பதில்
காயீன் தன் சகோதரன் ஆபேலைக் கொலைசெய்த பிறகு, தேவன் காயீனிடம் அறிவித்தார், "இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்" (ஆதியாகமம் 4:11-12). பதிலுக்கு, காயீன் புலம்பினார், "அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது. இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்" (ஆதியாகமம் 4:13-14). தேவன் பதிலளித்தார், "அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி, காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்” (ஆதியாகமம் 4:15-16).
காயீனின் அடையாளத்தின் தன்மை மிகவும் விவாதம் மற்றும் ஊகங்களுக்கு உட்பட்டது. "அடையாளம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரேய வார்த்தை 'ஒவ்த்' என்பது "குறி, அடையாளம் அல்லது டோக்கன்" ஆகியவற்றைக் குறிக்கிறது. எபிரேய வேதாகமத்தில் மற்ற இடங்களில், 'ஒவ்த் 79 முறை பயன்படுத்தப்படுகிறது மற்றும் பெரும்பாலும் "அடையாளம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனவே, எபிரேய வார்த்தை தேவன் காயீன் மீது போட்ட அடையாளத்தின் சரியான தன்மையை அடையாளம் காணவில்லை. அது எதுவாக இருந்தாலும், காயீன் கொல்லப்படக் கூடாது என்பதற்கான அடையாளம்/குறியீடு ஆகும். அந்த அடையாளம் ஒரு தழும்பு அல்லது சில வகையான பச்சை குத்துதல் என்று சிலர் முன்மொழிகின்றனர். எதுவாக இருந்தாலும், அடையாளத்தின் துல்லியமான தன்மை இந்த வேதப்பகுதியின் மையமாக இல்லை. ஜனங்கள் காயீனுக்கு எதிராக பழிவாங்குவதற்கு தேவன் அனுமதிக்க மாட்டார் என்பதே கவனம். காயீனின் அடையாளம் என்னவாக இருந்தாலும், அது இந்தக் குறிக்கோளைச் செய்தது.
கடந்த காலங்களில், காயீனின் அடையாளத்தை கருமையான தோல் என்று பலர் நம்பினர்—தேவன் காயீனை அடையாளம் காண்பதற்காக அவனது தோலின் நிறத்தை கருப்பு நிறமாக மாற்றினார் என்பதாகும். காயீனுக்கும் சாபம் கிடைத்ததால், அந்தக் அடையாளம் கருப்பு தோல் என்ற நம்பிக்கை பலருக்கு கருமையான சருமம் உள்ளவர்கள் சபிக்கப்பட்டதாக நம்ப வைத்தது. பலர் "காயின் அடையாளம்" போதனையை ஆப்பிரிக்க அடிமை வர்த்தகம் மற்றும் கறுப்பு/கருமையான தோல் கொண்ட ஜனங்களுக்கு எதிரான பாகுபாடுகளை நியாயப்படுத்தினர். காயீனின் அடையாளத்தின் இந்த விளக்கம் முற்றிலும் வேதாகமத்துக்கு எதிரானது. எபிரேய வேதாகமத்தில் எங்கும் தோல் நிறத்தைக் குறிக்க 'ஒவ்த்' பயன்படுத்தப்படவில்லை. ஆதியாகமம் 4 ஆம் அதிகாரத்தில் காயீன் மீதான சாபம் காயீன் மீதே இருந்தது. காயீனின் சாபம் அவனுடைய சந்ததியினருக்கு அனுப்பப்பட்டதாக எதுவும் கூறப்படவில்லை. காயீனின் சந்ததியினர் கருமையான தோலைக் கொண்டிருந்தனர் என்று கூறுவதற்கு எந்த வேதாகம அடிப்படையும் இல்லை. மேலும், நோவாவின் குமாரர்களின் மனைவிகளில் ஒருவர் காயீனின் வம்சாவளியாக இருந்தாலொழிய (சாத்தியம் ஆனால் சாத்தியமில்லை), காயினின் வழி தோன்றியவர்கள் வெள்ளத்தால் அழிக்கப்பட்டார்கள்.
காயீனுக்கு தேவன் போட்ட அடையாளம் என்ன? வேதாகமம் சொல்லவில்லை. அடையாளத்தின் பொருள், காயீன் கொல்லப்படக்கூடாது என்பது அடையாளத்தின் தன்மையை விட முக்கியமானது. அடையாளம் எதுவாக இருந்தாலும், அது தோல் நிறத்துடனோ அல்லது காயீன் சந்ததியினருக்கு ஒரு தலைமுறை சாபத்துக்கோ எந்த தொடர்பும் இல்லை. இனவெறி அல்லது பாகுபாட்டிற்கான ஒரு சாக்காக காயீனின் அடையாளத்தைப் பயன்படுத்துவது முற்றிலும் வேதாகமத்துக்கு எதிரானது.
English
காயீன்மேல் தேவன் போட்ட அடையாளம் என்ன (ஆதியாகமம் 4:15)?