கேள்வி
திருமணம் நிலைத்திருப்பதற்கு – முக்கியமான திறவுகோல் என்ன?
பதில்
மணவாழ்வில் இணைந்த தம்பதிகள் தங்கள் திருமணத்தை நிலைத்திருக்கப்பண்ணுவதற்கு என்ன செய்யலாம்? முதல் மற்றும் மிக முக்கியமான காரியம் தேவன் மற்றும் அவரது வார்த்தைக்கு கீழ்ப்படிதல் ஆகும். திருமணம் துவங்குவதற்கு முன்னரே நடைமுறையில் இருக்கும் ஒரு கொள்கை இதுதான். “இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ?” (ஆமோஸ் 3:3) என்று தேவன் கூறுகிறார். மறுபிறப்படைந்த விசுவாசியைப் பொறுத்தமட்டில், ஒரு விசுவாசியல்லாத எவருடனும் நெருக்கமான உறவைத் தொடங்குவதை இது அர்த்தப்படுத்துவதில்லை. “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?" (2 கொரிந்தியர் 6:14). இந்த ஒரு கொள்கை சரியாகப் பின்பற்றப்பட்டால், அது நிறைய மனச்சோர்வு மற்றும் பபின்னாட்களில் திருமணங்களில் உண்டாகும் துன்பங்களிலிருந்து காக்கும்.
திருமணத்தை நிலைத்திருக்கப்பண்ணுகிற மற்றொரு பிரமாணம் என்னவென்றால், கணவன் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, மனைவிமீது அன்பு மற்றும் மரியாதை செலுத்தி தன் சொந்த சரீரத்தை பாதுகாக்கிறதுபோலப் பாதுகாக்க வேண்டும் என்பதேயாகும் (எபேசியர் 5:25-31). இதற்கு ஒத்திருக்கிற பிரமாணம் என்னவெனில், மனைவியானவள் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, தன் சொந்த கணவனுக்கு "கர்த்தருக்குள் கீழ்ப்படிய" வேண்டும் (எபேசியர் 5:22) என்பதாகும். ஒரு மனிதனுக்கும் பெண்ணிற்கும் இடையிலான திருமணம், கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையிலான ஒரு உறவின் சித்திரமாகும். கிறிஸ்துவே சபைக்காக தன்னைத்தானே கொடுத்து, தமது மணவாட்டியை அவர் நேசிக்கிறார், மரியாதை கொடுக்கிறார், மற்றும் பாதுகாக்கிறார் (வெளிப்படுத்துதல் 19:7-9).
தெய்வீக திருமணங்களின் அஸ்திபாரத்தின் மீது கட்டியெழுப்பி, பல தம்பதியர்கள் தங்களது திருமணங்களை நிலைத்திருக்கச்செய்ய உதவும் நடைமுறையான வழிகளைக் காண்கிறார்கள்: உதாரணமாக, தரமான நேரத்தை ஒன்றாகச் செலவிடுகிறார்கள்; "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று அடிக்கடி கூறுகிறார்கள்; மென்மையாக நடந்துகொள்கிறார்கள்; பாசம் காட்டுகிறார்கள்; பாராட்டுக்களை வழங்குகிறார்கள்; தனிமையில் சந்தித்து மனம்விட்டு பேசுகிறார்கள்; குறிப்புகள் எழுதுகிறார்கள்; பரிசுகளைக் கொடுக்கிறார்கள்; மற்றும் மன்னிக்க தயாராக இருக்கிறார்கள். புருஷர்களுக்கும் மனைவிகளுக்கும் வேதாகமம் அளித்திருக்கிற அறிவுரைகளில் இந்த எல்லா செயல்களும் உட்பட்டிருக்கின்றன.
முதல் திருமணத்தின்போது ஆதாமிடம் ஏவாளை தேவன் கொண்டுவந்தபோது, அவள் ஆதாமின் "மாம்சமும் எலும்புமுமாய்" உருவாக்கப்பட்டு (ஆதியாகமம் 2:21), அவர்கள் இருவரும் "ஒரே மாம்சமாக" இருந்தார்கள் (ஆதியாகமம் 2:23-24). ஒரே மாம்சமாக இருப்பது சரீரத்தில் ஒரே ஐக்கியமாக இருப்பது என்பதை விட மேலானதாகும். ஒரே அலகில் மனதும் ஆத்துமாவும் ஒரே கூட்டாக வரும் காரியமாகும். இந்த உறவு, உணர்ச்சி ரீதியிலான அல்லது உணர்ச்சிபூர்வமான ஈர்ப்புக்கு அப்பாற்பட்டது ஆகும், ஆவிக்குரிய "ஒற்றுமை"யில் சமுதாயத்தில் இருவரும் பங்காளர்களாகவும், ஒருவருக்கொருவர் தேவனுக்கு சரணடைந்தவர்களாகவும் கண்டுகொள்ளலாம். இந்த உறவு "எனக்கு” மற்றும் “என்னுடைய”வைகளை மையமாக கொண்டில்லை, ஆனால் "எங்களுக்கு” மற்றும் “எங்களுடைய"தை மையமாகக்கொண்டதாகும். நிலைத்திருக்கிற நீடித்த திருமணத்திற்குள்ள இரகசியங்களில் இதுவும் ஒன்றாகும்.
வாழ்நாள் முழுவதும் திருமணம் நீடித்திருக்க, இருவரும் அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நீடித்து நிலைத்திருக்கிற திருமண வாழ்வைக் கொண்டவர்கள், ஒருவருக்கொருவர் தங்களுக்குள்ள உறுதிப்பாட்டைக் கொண்டாடுகிறார்கள். கோபத்தில் கூட விவாகரத்துக் குறித்துப் பேசக்கூடாது என்று பல தம்பதிகள் கருதுகின்றனர். கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் கிடைத்த கிடைமட்டமான உறவை உறுதிப்படுத்துவதற்கு தேவனோடு ஒருவரையொருவர் செங்குத்தான உறவுகளை பலப்படுத்துவது ஒரு நீடித்த வழி மற்றும் தேவனை-கனப்படுத்துகிறது செயலாகும்.
தங்கள் திருமணத்தை நீடித்திருக்க விரும்பும் தம்பதியர் பிரச்சினைகளை சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஜெபம், வேதவாசிப்பு, பரஸ்பர உற்சாகமளித்தல் ஆகியவை நல்லதாகும். வெளியே உதவியைத் தேடுவதில் தவறு எதுவும் இல்லை; உண்மையில், திருச்சபையின் நோக்கங்களில் ஒன்று "அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ளவேண்டும்" (எபிரேயர் 10:24). ஒரு கஷ்டப்படுகிற தம்பதி ஒரு பழைய கிறிஸ்தவ தம்பதியை, ஒரு போதகரை, அல்லது ஒரு வேதாகம திருமண ஆலோசகரிடம் ஆலோசனை பெறவேண்டும்.
English
திருமணம் நிலைத்திருப்பதற்கு – முக்கியமான திறவுகோல் என்ன?