settings icon
share icon
கேள்வி

திருமணம் செய்துகொள்வது தேவனுடனான உங்கள் உறவைத் தடுக்கிறதா?

பதில்


திருமணம் ஒருவருடைய தேவனுக்கான சேவையை தடுக்கலாம் என்ற பிரச்சினை 1 கொரிந்தியர் 7-ல் பவுலுக்குக் கவலையாக இருந்தது. இதன் காரணமாக, திருமணமாகாத ஒருவர் அவர் எப்படி இருந்தாரோ அப்படியே இருப்பது நல்லது என்று அவர் கூறினார். ஆனால் உணர்ச்சியுடன் "வேகிறது" இல்லாமல் திருமணம் பண்ணாத வாழ்க்கையைக் கையாளும் திறன் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட பரிசு அல்ல என்பதை அவர் புரிந்துகொண்டார் (வசனங்கள் 7-9). அவர் வசனங்கள் 32-35 இல் திருமணமாகாதவர்கள் "தடையின்றி" தேவனுக்கு சேவை செய்ய முடியும் என்று கூறுகிறார், ஏனெனில் அவர்கள் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியை தங்கள் வாழ்க்கைத் துணையை மகிழ்விப்பதில் கவனம் செலுத்தத் தேவையில்லை. ஆனால் திருமணமானாலும் இல்லாவிட்டாலும், கிறிஸ்துவுக்கு சேவை செய்வதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார் (வசனம் 28-31).

ஆனால் இயேசு திருமணமாகாத ஆண்களை மட்டும் அழைக்கவில்லை—மாறாக மூன்று நெருங்கிய சீடர்களில் ஒருவராக திருமணமான பேதுருவை (மத்தேயு 8:14) தேர்ந்தெடுத்தார்—திருமணம் கிறிஸ்துவுடனான ஒருவரின் நெருக்கத்தைத் தடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதைக் குறிக்கிறது. அதேபோல், பழைய ஏற்பாட்டில் தேவனுடன் நெருக்கமாக இருந்த இரண்டு நபர்கள் (மற்ற நபர்களில்) உள்ளனர். ஒருவர் தானியேல்; மற்றொருவர் மோசே. ஒருவர் திருமணமாகாதவராக இருந்தார்; ஒருவர் திருமணமானவர். ஆகவே, தேவனுடனான நெருக்கத்தைத் தீர்மானிப்பதில் திருமணம் ஒரு காரணியாக இருக்கவில்லை.

கிறிஸ்துவுடனான ஒருவரின் நெருக்கத்தைத் தடுக்காத திருமணத்திற்கான திறவுகோல், "கர்த்தருக்குள்" திருமணம் செய்துகொள்வது உறுதி (1 கொரிந்தியர் 7:39) அல்லது வேறுவிதமாகக் கூறினால், திருமணம் செய்துகொள்வதன் மூலம் அந்நிய நுகத்தடிக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் (2 கொரிந்தியர் 6:14). ஒரு அவிசுவாசியை அல்லது ஒரே கோட்பாட்டு அடித்தளம் இல்லாதவர் மணப்பது கிறிஸ்துவுக்கு முழு இருதயத்தோடு சேவை செய்ய அதே விருப்பம் இல்லாத நிலையை உருவாக்கும். ஒருவர் "கர்த்தருக்குள்" திருமணம் செய்துகொண்டால், ஒரு நல்ல வாழ்க்கைத்துணையின் நன்மைகளை வேதம் உறுதியளிக்கிறது (நீதிமொழிகள் 27:17; பிரசங்கி 4:9-12), மற்றும் கிறிஸ்துவுடனான ஒருவரின் பயணத்தில் துணையிருக்கும் மற்றும் ஊக்கமளிக்கும்.

English



முகப்பு பக்கம்

திருமணம் செய்துகொள்வது தேவனுடனான உங்கள் உறவைத் தடுக்கிறதா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries