settings icon
share icon
கேள்வி

ஆட்டுக்குட்டியானவருடைய கலியாண விருந்து என்றால் என்ன?

பதில்


வெளிப்படுத்துதல் 19:7-10 இல் வருகிற தரிசனத்தில் யோவான் கண்டதும் கேட்டதும் என்னவெனில், ஆட்டுக்குட்டியானவருடைய கலியாண விருந்து—அதாவது, "கலியாண விருந்து"—அது உடனே தொடங்கவிருந்ததால், பரலோகத்தின் திரள் கூட்டம் தேவனைப் புகழ்வதைக் கண்டார். கிறிஸ்துவின் காலத்தில் கலியாண சடங்குகளின் வெளிச்சத்தில் கலியாண விருந்து பற்றிய கருத்து நன்கு புரிந்து கொள்ளப்படுகிறது.

இந்த கலியாண சடங்குகள் மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டிருந்தன. முதலில், மணப்பெண் மற்றும் மணமகனின் பெற்றோர் ஒரு திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர், மேலும் மணமகனின் பெற்றோர் அல்லது மணமகன் மணமகளுக்கோ அல்லது அவளது பெற்றோருக்கோ வரதட்சணை கொடுப்பார்கள். இது நிச்சயதார்த்த (விவாக நிச்சயம்) காலம் என்று அழைக்கப்பட்டது—இன்று நாம் நம் வழக்கத்தில் இதை நிச்சயதார்த்தம் என்று அழைக்கிறோம். இந்த காலகட்டத்தில் தான் யோசேப்பு மற்றும் மரியாள் இருந்தபோது மரியாள் குழந்தையுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது (மத்தேயு 1:18; லூக் 2:5).

இந்த செயல்முறையின் இரண்டாவது படி வழக்கமாக ஒரு வருடம் கழித்து, மணமகன் தனது ஆண் நண்பர்களுடன் நள்ளிரவில் தெருக்களில் தீவட்டிகளுடன் அணிவகுப்பை நடத்தி மணமகளின் வீட்டிற்குச் செல்லுவார். இது நடக்கும் என்று மணமகளுக்கு முன்கூட்டியே தெரியும், அதனால் அவள் தன் பணிப்பெண்களுடன் ஆயத்தமாக இருப்பாள், அவர்கள் அனைவரும் அணிவகுப்பில் சேர்ந்து மணமகனோடு மணமகனின் வீட்டிற்குச் செல்லுவார்கள். இந்த பழக்கம் தான் மத்தேயு 25:1-13 இல் உள்ள பத்து கன்னிகைகள் குறித்த உவமையின் அடிப்படையாகும். யோவான் 2:1-2 இல் கானா ஊரிலே நடந்த திருமணத்தால் விளக்கப்பட்டுள்ளபடி, பல கட்டங்களாக திருமண இரவு விருந்து இருந்தது.

வெளிப்படுத்தின விசேஷத்தில் யோவானின் தரிசனத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது என்னவென்றால், அதன் மூன்றாவது கட்டத்தில் ஆட்டுக்குட்டியானவர் (இயேசு கிறிஸ்து) மற்றும் அவரது மணவாட்டி (சபை) ஆகியோரின் திருமண விருந்து ஆகும். முதல் இரண்டு கட்டங்கள் ஏற்கனவே நடந்தேறிவிட்டன என்பது இதன் பொருள். ஒவ்வொரு தனிப்பட்ட விசுவாசியும் கிறிஸ்துவில் இரட்சகராக தனது நம்பிக்கையை வைத்தபோது பூமியில் முதல் கட்டம் நிறைவடைந்தது. மணமகனின் பெற்றோருக்கு (பிதாவாகிய தேவன்) கொடுக்கப்படும் வரதட்சணை, மணமகள் சார்பாக சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தமாக இருக்கிறது. இன்று பூமியில் உள்ள சபை கிறிஸ்துவுக்கு "நிச்சயிக்கப்பட்டுள்ளது", மேலும், உவமையில் உள்ள புத்தியுள்ள கன்னிகைகளைப் போலவே, அனைத்து விசுவாசிகளும் மணவாளனின் தோற்றத்திற்காக காத்திருக்க வேண்டும் (கிறிஸ்துவின் இரண்டாவது வருகை). இரண்டாம் கட்டம் சபையின் எடுத்துக்கொள்ளப்படுதலைக் குறிக்கிறது, கிறிஸ்து தனது மணவாட்டியை உரிமை கோரி தந்தையின் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது. திருமண விருந்து மூன்றாவது மற்றும் இறுதி கட்டமாக பின்பற்றப்படுகிறது. ஆட்டுக்குட்டியானவரின் திருமண விருந்து பரலோகத்திற்கு சபையானது எடுத்துக்கொள்ளப்படுதல் மற்றும் இரண்டாவது வருகைக்கு (பூமியில் உபத்திரவ காலம்) இடையில் நடைபெறுகிறது என்பது எங்கள் கருத்து.

திருமண விருந்தில் கலந்து கொள்வது கிறிஸ்துவின் மணவாட்டியாகிய சபை மட்டுமல்ல, மற்றவர்களும் கூட இருப்பார்கள். "மற்றவர்கள்" என்பது பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களை உள்ளடக்கியுள்ளது—அவர்கள் இன்னும் உயிர்த்தெழுப்பப்படவில்லை, ஆனால் அவர்களின் ஆத்துமாக்கள்/ஆவிகள் நம்முடன் பரலோகத்தில் இருக்கும். தேவதூதன் யோவானை எழுதச் சொன்னது போல், "ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்" (வெளிப்படுத்தல் 19:9). ஆட்டுக்குட்டியானவரின் திருமண விருந்து கிறிஸ்துவில் இருக்கும் அனைவரின் மகிமையான கொண்டாட்டமாகும்!

English



முகப்பு பக்கம்

ஆட்டுக்குட்டியானவருடைய கலியாண விருந்து என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries