கேள்வி
விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்த ஒரு மனிதன் சபையின் தலைமைத்துவத்தில் பணியாற்ற முடியுமா?
பதில்
ஒரு பின்னணியாக, 1 தீமோத்தேயு 3:2, 12 மற்றும் தீத்து 1:6 இல் உள்ள "ஒரே மனைவியை உடைய புருஷன்" சொற்றொடரைப் பற்றிய எங்களது கட்டுரையைப் படிக்கவும். "ஒரே மனைவியை உடைய புருஷன்" என்ற தகுதி, சில சமயங்களில், விவாகரத்து செய்யப்பட்ட மற்றும் மறுமணம் செய்த ஒருவரை சபையின் தலைமைப் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யலாம், இன்னும் கடினமான கேள்வி என்னவென்றால் முன்னமே விவாகரத்து ஆன ஒரு பெண்ணை திருமணம் செய்து ஆனால் அவளை விவாகரத்து செய்யாமல் இருக்கிறவரை குறித்ததாகும். இந்த பிரச்சினையை வெளிப்படையாக குறிப்பிட்டு கையாளும் எந்த வேதப்பகுதியும் இல்லை, ஆனால் பயன்படுத்தக்கூடிய வேதாகமக் கொள்கைகள் உள்ளன.
1 தீமோத்தேயு 3:11 இந்த பிரச்சினைக்கு ஒரு சுவாரஸ்யமான வசனம். இந்த வசனம் உதவிக்காரர்களின் மனைவிகளைக் குறிப்பிடுகிறதா அல்லது பெண் உதவிக்காரர்களை (டீக்கனஸ்) குறிப்பிடுகிறதா என்பது தெளிவாக இல்லை. 8-10 மற்றும் 12-13 வசனங்களில் உதவிக்காரர்களுக்கான தகுதிகளை பவுல் வழங்குவதால், அதனிடைய "உதவிக்காரர்களின் மனைவிகள்" குறித்த விளக்கம் சங்கடமாக இருக்கும் எனத் தெரிகிறது. இதை மனதில் வைத்துக்கொண்டு, டீக்கனின் மனைவிகளுக்கு "ஒரே புருஷனைவுடைய ஒரு மனைவி" தகுதி இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். "குற்றஞ்சாட்டப்படாதவர்" அல்லது "குற்றமற்றவராக" இருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, தகுதிகள் "அந்தப்படியே ஸ்திரீகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும் எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கவேண்டும்" (1 தீமோத்தேயு 3:11).
இந்த கேள்விக்கு தொடர்புடைய பல சிக்கல்கள் உள்ளன. விபச்சாரம் அல்லது துஷ்பிரயோகம் செய்யும் கணவனின் மனைவி அப்பாவியா? விவாகரத்து நடந்தபோது மனைவி ஒரு விசுவாசியாக இருந்தாரா? மனைவியின் முன்னாள் கணவர் இன்னும் பிரச்சனைகளை அல்லது மோதலை ஏற்படுத்துகிறாரா? இந்த கேள்விகள் ஒவ்வொன்றும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இறுதியில், இந்த பிரச்சினை மூப்பர்கள் மற்றும் டீக்கன்களுக்குத் தேவைப்படும் "மேலே உள்ள குற்றஞ்சாட்டப்படாத / குற்றமற்ற" தகுதி மீது உள்ளதா எனப் பார்க்கவேண்டும். மனைவி விவாகரத்து பெற்றிருப்பது சமூகத்தில் மோசமான சாட்சியத்தை விளைவிக்கிறதா? சாத்தியமான சபைத் தலைவரை உண்மையிலேயே ஒரு தெய்வீக மனிதனாக மதிக்கத் தகுதியானவராகவும், ஒரு முன்மாதிரியாகப் பின்பற்றக்கூடியவராகவும் பார்க்க முடியுமா?
இந்த கேள்விக்கு உலகளவில் பதிலளிக்க முடியும் என்று தோன்றவில்லை. வெறுமனே பல காரணிகள் உள்ளன. இந்த பிரச்சினையை எதிர்கொள்ளும் ஒரு சபை நிலைமையை ஜெபத்தோடு ஆராய்ந்து, முடிந்தவரை, சாத்தியமான தலைவரை "குற்றஞ்சாட்டப்படாதவராக" கருத முடியுமானால், பகுத்தறிய முயற்சி செய்ய வேண்டும். சபையின் சாட்சியத்திற்கு எந்த சேதமும் இல்லை எனில், விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்த ஒரு மனுஷன் தேவாலய தலைமைக்கு கருதப்படலாம்.
English
விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்த ஒரு மனிதன் சபையின் தலைமைத்துவத்தில் பணியாற்ற முடியுமா?