கேள்வி
ஒரு கிறிஸ்தவரல்லாதவரோடு தனிமையில் சந்தித்து பேசி உறவை வளர்த்துக்கொள்வது அல்லது அவரை விவாகம் செய்வது சரியானதா?
பதில்
ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்தவரல்லாத ஒரு அவிசுவாசியோடு தனிமையில் சந்தித்து பேசி உறவை வளர்த்துக்கொள்வது அல்லது காதலிப்பது விவேகமற்ற செயலாகும், அவர்களை விவாகம் செய்துகொள்ளவும் கூடாது. “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக” என்று 2 கொரிந்தியர் 6:14-ல் கூறப்பட்டுள்ளது. இரண்டு வித்தியாசமான காளை மாடுகள் ஒரு நுகத்தை சுமக்கும் சித்திரத்தைத்தான் இந்த வசனம் காட்டுகிறது. இவ்விரெண்டும் இணைந்து சுமையை இழுத்துச் செல்ல ஒத்துழைக்காமல், ஒன்றோடொன்று விரோதமாக செயல்படும். இந்த வேதப்பகுதி விவாகத்தைக் குறித்து குறிப்பிடவில்லை என்கிறபோதிலும், இது விவாகத்தைப் பற்றியத் தாக்கங்களைக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் (சாத்தானுக்கும்) எந்த தொடர்பும் இல்லை என்று இந்த வேதப்பகுதி கூறுகிறது. அதே போல, கிறிஸ்தவர் மற்றும் புறஜாதியார் இருவரும் விவாகம் செய்யும்போது அவர்களுக்குள் எந்த விதமான ஆவிக்குரிய சம்மந்தமும் இருக்காது. அவர்கள் இரட்சிக்கபடும்போது பெற்ற பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் தங்கும் வாசஸ்தலம் என்று பவுல் விசுவாசிகளுக்கு நினைப்பூட்டுகிறார் (2 கொரிந்தியர் 6:15-17). ஆகையால், அவர்கள் இந்த உலகத்தில் பிரிக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும் — அவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள், ஆனால் உலகத்திற்குரியவர்கள் அல்ல — இது வாழ்கையில் மற்ற காரியங்களுக்கும் பொருந்தும், ஆனால் அதை விட மிகவும் நெருக்கமான உறவாகிய விவாகத்திற்கு முக்கியமானது ஆகும்.
பின்னும் வேதம் சொல்லுகிறது, “மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்” (1 கொரிந்தியர் 15:33). விசுவாசி அவிசுவாசியுடனே ஏற்படுத்தும் எந்த நெருக்கமான உறவும் தேவனோடு இருக்கும் அவன்/அவள் உறவுக்கு தடையாக அது மாறும். நாம், இழந்து போனவர்களை ஆதாயப்படுத்த வேண்டும், ஆனால் அவர்களோடு நெருக்கமான தொடர்பு வைக்க கூடாது. அவிசுவாசிகளோடு நல்ல நட்புகளை வைப்பது தவறு அல்ல, ஆனால் அதை விட்டு அடுத்த நிலைக்கு போக கூடாது. நீ ஒரு அவிசுவாசியை காதலிக்கும்போது, எது முக்கியமாக இருக்கும், காதலா அல்லது ஆத்தும ஆதாயமா? நீங்கள் ஒரு அவிசுவாசியை திருமணம் செய்தால், எப்படி உங்கள் விவாகத்தில் ஆவிக்குரிய நெருக்கத்தை கட்டி எழுப்ப முடியும்? இந்த உலகத்தில் முக்கியமான ஒன்றில் — அதாவது இயேசு கிறிஸ்துவில் — உங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தால், எப்படி ஒரு சிறந்த திருமண வாழ்க்கையை நீங்கள் கட்டியெழுப்பி பராமரிக்க முடியும்?
English
ஒரு கிறிஸ்தவரல்லாதவரோடு தனிமையில் சந்தித்து பேசி உறவை வளர்த்துக்கொள்வது அல்லது அவரை விவாகம் செய்வது சரியானதா?