கேள்வி
சுயஇன்பம் – வேதாகமத்தின்படி பாவமா?
பதில்
வேதாகமம் சுயஇன்பத்தைக் குறித்து குறிப்பிடவுமில்லை மேலும் சுயஇன்பத்தை பாவம் என்றும் கூறவுமில்லை. சுயஇன்பத்தைக் குறித்த விஷயத்தில் அதிகமாக மேற்கொள்காட்டப்படும் வேதாகமப் பகுதி ஆதியாகமம் 38:9-10ல் கூறப்பட்டுள்ள ஓனானின் கதையாகும். “தன் வித்தைத் தரையிலே விழவிட்டது” பாவம் என்று சிலர் இந்தப் பகுதியின் வியாக்யானமாக கூறுகிறார்கள். ஆயினும் இந்தப் பகுதி குறிட்டு கூறுவது அதுவல்ல. “வித்தை தரையில் விழவிட்டதற்காக” கர்த்தர் ஓனானைத் கண்டிக்கவில்லை, மாறாக, தன் சகோதரனுக்கு சந்ததியை உண்டாக்க வேண்டிய கடமையிலிருந்து தவறியதற்கே கர்த்தர் அவனை கண்டித்தார். இந்த பகுதி சுயஇன்பத்தைப் பற்றியதல்ல மாறாக ஒரு குடும்ப கடமையை நிறைவேற்றுவதைப் பற்றியதேயாகும்.
சுயஇன்பம் பாவம் என்பதற்கு ஆதாரமாகக் காட்டப்படும் இரண்டாவது பகுதி மத்தேயு 5:27-30. இச்சையான சிந்தனைகளை கொண்டிருப்பதற்கு எதிராக இயேசு கூறிவிட்டு பின்பு “உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால் அதை தறித்து எறிந்துபோடு” என்கிறார். இந்தப் பகுதிக்கும் சுயஇன்பத்திற்கும் இடையில் இணை இருப்பதுபோல தோன்றினாலும், இயேசு சுயஇன்பத்தைத்தான் சுட்டிக்காட்டுகிறார் என்று கூறுவதற்கில்லை.
சுயஇன்பத்தை பாவம் என்று வேதாகமம் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனாலும், சுயஇன்பத்தை தூண்டுகிற மற்றும் ஈடுபட வைக்கின்ற மற்ற காரணிகள் பாவமா எனக்கேட்கவேண்டிய அவசியமேயில்லை, காரணம் அது பாவம்தான். இச்சையான சிந்தனை, பாலுணர்வுத் தூண்டல்கள் மற்றும் நிர்வாண உடலுறவுக் படங்கள் போன்றவைகள்தான் அதிகமாக சுயஇன்பத்தை அடையும்படி கொண்டு செல்கின்றன. இந்த பிரச்சினைகள் முதலாவது சரி செய்யப்பட வேண்டியிருக்கிறது. இச்சையினால் வரும் பாவங்களையும், ஒழுக்கந்தவறிய சிந்தனைகளையும், ஆடையில்லாத நிர்வாண உடலுறவுக் காட்சிகள் ஆகியவற்றை கைவிடமுடியுமானால் சுயஇன்பம் ஓர் பிரச்சினையே இல்லை அல்லது சுயஇன்பத்தை அனுபவிக்க துடிக்கும் வாய்ப்புகள் இல்லாமற்போகும். அநேக மனிதர்கள் சுயஇன்பம் சம்பந்தப்பட்ட குற்ற உணர்வுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் உண்மையில், சுயஇன்பத்தை அடைய இட்டுச்செல்லும் விஷயங்களே அதிகமாக மனந்திரும்ப வேண்டியவைகளாக இருக்கின்றன.
இதுவரையில் கண்ட காரியங்களின் அடிப்படையில், சுயஇன்பத்தை அனுபவிப்பது பாவமா? வேதாகமம் இந்த கேள்விக்கு நேரடியாக பதிலை தரவில்லை என்றாலும், சுயஇன்பத்தைக் குறித்து சில வேதாகமக் கோட்பாடுகள் உண்டு.
(1) “ஆகையால் புசித்தாலும், குடித்தாலும், என்னத்தைச் செய்தாலும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” (1 கொரிந்தியர்10:31). நாம் செய்கிற எந்த காரியத்திலாவது கர்த்தருக்கு மகிமையை கொடுக்கமுடியாது என்றால் அந்த காரியத்தைச் செய்யக்கூடாது.
(2) “விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே” (ரோமர் 14:23). நாம் செய்கிற காரியங்கள் தேவனுக்கு கனத்தை கொண்டுவரும் என்கிற விஷயத்தில் நமக்கு சந்தேகம் இருக்குமானால், அது பாவம்தான்.
(3) “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்” (1 கொரிந்தியர் 6:19-20). நமது சரீரங்கள் தேவனாலே மீட்கப்பட்டு தேவனுடையவைகளாயிருக்கிறது.
இந்த பெரும் சத்தியங்கள் நாம் நமது சரீரங்களோடு என்ன செய்கிறோம் என்கிற விஷயத்தில் ஒரு வல்லமையான தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும். மேற்கண்ட இந்த பிரமாணங்களின் வெளிச்சத்தில், அநேகர் சுயஇன்பம் எப்பொழுதுமே பாவம்தான் என்கிற முடிவுக்கு வருகிறார்கள். சுயஇன்பம் ஒரு தரத்தில் கேள்விக்குரிய காரியமாக இருந்தாலும், அது தேவனை மகிமைப்படுத்துமா, முழு நம்பிக்கையோடு சரியானது என்று தான் செய்கிறேனா, எனது சரீரத்தினாலே தேவனை கனப்படுத்துகிறேனா, போன்றவைகளை கேட்போமானால் சிறந்த தீர்வை எடுக்கமுடியும்.
மெய்யாகவே எந்தவிதமான இச்சை, லௌகீக சிந்தனை மற்றும் ஆபாசம் இல்லாமல், முழு நம்பிக்கையுடன் அது நல்லதும் சரியானதாக இருக்கிறதாய் கண்டு, இது கொண்டு வருகிற இன்பத்திற்காக தேவனுக்கு நன்றியும் செலுத்தப்பட்டு இருக்கும்போது, சுயஇன்பம் காணுதல் பாவமா? பெரும்பாலும் நாம் இல்லை இன்றே சொல்லுவோம். எப்படியாயினும், இப்படி ஒரு நிலையில் இது வருமா அல்லது கருதப்படுமா என்பதில் நமக்கு மெய்யாகவே இதில் சந்தேகம் இருக்கிறது.
English
சுயஇன்பம் – வேதாகமத்தின்படி பாவமா?