கேள்வி
இரக்கம் மற்றும் கிருபைக்கு இடையே என்ன வித்தியாசம்?
பதில்
இரக்கம் மற்றும் கிருபை பெரும்பாலும் அநேகர் குழப்பமடைகின்றனர். சொற்களுக்கு ஒத்த அர்த்தங்கள் இருந்தாலும், இரக்கமும் கிருபையும் ஒன்றல்ல. வித்தியாசத்தை சுருக்கமாகச் சொல்வதானால்: இரக்கம் என்பது தேவன் நம்முடைய பாவங்களுக்கு தகுந்தாற்போல் நம்மைத் தண்டிப்பதில்லை, மேலும் கிருபை என்பது நாம் அதற்கு தகுதியற்றவர்கள் என்ற போதிலும் தேவன் நம்மை ஆசீர்வதிப்பதாகும். இரக்கம் என்பது நியாயத்தீர்ப்பிலிருந்து பெரும் விடுதலையாகும். கிருபை என்பது தகுதியற்றவர்களிடம் கருணை காட்டுவதாகும்.
வேதாகமத்தின்படி, நாம் அனைவரும் பாவம் செய்தோம் (பிரசங்கி 7:20; ரோமர் 3:23; 1 யோவான் 1:8). அந்த பாவத்தின் விளைவாக, நாம் அனைவரும் மரணத்திற்கு தகுதியானவர்கள் (ரோமர் 6:23) மற்றும் எரிகிற அக்கினிக்கடலில் நித்திய தண்டனை (வெளிப்படுத்துதல் 20:12-15). அதை மனதில் கொண்டு, நாம் வாழும் ஒவ்வொரு நாளும் தேவனுடைய இரக்கத்தின் செயலாகும். தேவன் நமக்கு தகுதியான அனைத்தையும் கொடுத்தால், நாம் அனைவரும் இப்போதே, நித்தியமாக கண்டனம் செய்யப்படுவோம். சங்கீதம் 51:1-2-ல் தாவீது, " தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்." இரக்கத்திற்காக தேவனிடம் ஒரு வேண்டுகோள், நமக்குத் தகுதியான தீர்ப்பைத் தடுத்து நிறுத்தவும், அதற்கு பதிலாக நாம் எந்த விதத்திலும் சம்பாதிக்காத மன்னிப்பை நமக்குக் கொடுக்கவுமே ஆகும்.
நாம் தேவனிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள தகுதியற்றவர்கள். தேவன் நமக்கு எந்த காரியத்திற்கும் கடன்பட்டிருக்கவில்லை. நாம் அனுபவிக்கும் நல்லது யாவும் தேவனுடைய கிருபையின் விளைவாகும் (எபேசியர் 2:5). கிருபை வெறுமனே தகுதியில்லா நிலையில் பெரும் உதவி. நாம் தகுதியற்ற மற்றும் ஒருபோதும் சம்பாதிக்க முடியாத நல்ல காரியங்களை தேவன் நமக்குத் தருகிறார். தேவனுடைய இரக்கத்தால் நியாயத்தீர்ப்பிலிருந்து இரட்சிக்கப்பட்டது, அந்த இரக்கத்திற்கு அப்பால் நாம் பெறும் அனைத்தும் கிருபைதான் (ரோமர் 3:24). பொதுவான கிருபை என்பது தேவன் தமக்கு முன்பாக இருக்கும் ஆவிக்குரிய நிலைப்பாட்டைப் பொருட்படுத்தாமல் மனிதகுலம் அனைவருக்கும் அளிக்கும் ராஜ்யபார கிருபையைக் குறிக்கிறது, அதே நேரத்தில் இரட்சிக்கும் கிருபை மூலம் தேவன் தனது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் மறுபிறப்பு மற்றும் பரிசுத்தமாக்கப்படுதலுக்காக தகுதியில்லாதவர்களுக்கு தாராளமான தெய்வீக உதவியை வழங்குகிறார்.
இரக்கமும் கிருபையும் இயேசு கிறிஸ்துவின் மூலம் கிடைக்கும் இரட்சிப்பில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. நாம் நியாயத்தீர்ப்புக்குத் தகுதியானவர்கள், ஆனால் நாம் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டால், நாம் தேவனிடமிருந்து இரக்கம் பெறுகிறோம், மேலும் நாம் நியாயத்தீர்ப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறோம். நியாயத்தீர்ப்புக்குப் பதிலாக, கிருபை இரட்சிப்பு, பாவ மன்னிப்பு, பரிபூரண வாழ்க்கை (யோவான் 10:10) மற்றும் பரலோகத்தில் நித்தியம், அது கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவுக்கு மிக அற்புதமான இடம் ஆகியவற்றைப் பெறுகிறோம் (வெளிப்படுத்துதல் 21-22). தேவனுடைய இரக்கம் மற்றும் கிருபையின் காரணமாக, அதற்குப் பதிலாக ஆராதனையிலும் நன்றியுணர்விலும் நாம் முழங்காலில் விழ வேண்டும். எபிரேயர் 4:16 கூறுகிறது, "நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்."
English
இரக்கம் மற்றும் கிருபைக்கு இடையே என்ன வித்தியாசம்?