settings icon
share icon
கேள்வி

ஆயிர வருட அரசாட்சி என்றால் என்ன? அதை நாம் அப்படியே எழுத்தியல்பான நிலையில் புரிந்துக்கொள்ள வேண்டுமா?

பதில்


ஆயிரம் வருட அரசாட்சி என்பது இயேசு கிறிஸ்து இப்பூமியில் 1000 –வருடம் அரசாளப்போவதற்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். சிலர் 1000 வருடங்களை ஆவிக்குரிய நிலையில் எடுத்துக்கொண்டு வியாக்கியானம் செய்கிறார்கள். சிலர் 1000 வருடங்களை “ஒரு நெடுங்காலம்” என உருவகமாக எடுத்துக்கொண்டு, இயேசுகிறிஸ்து எழுத்தியல்பான நிலையில் பூமியில் 1000 வருடங்கள் ஆளுவார் என்பதை நிராகரிக்கிறார்கள். எனினும், வெளிப்படுத்தின விசேஷம் 20:2-7 வரையிலுள்ள வசனங்களில் 6 முறை ஆயிரவருட அரசாட்சியைக் குறிப்பாக 1000 வருடங்கள் உள்ள காலத்தை குறிப்பிடுகிறது. தேவன் “ஒரு நெடுங்காலம்” அல்லது “நீண்ட காலத்தை” குறிப்பிட விரும்பியிருந்தால் அதைத் தெளிவாக, மீண்டும் மீண்டும் 1000 வருடங்கள் என்று குறிப்பிடாமலேயே இருந்திருக்கலாம்.

கிறிஸ்து பூமிக்கு திரும்ப வரும்போது அவர் எருசலேமில் ராஜ்யபாரத்தை ஸ்தாபித்து தாவீதின் சிங்காசனத்தில் ராஜாவாக வீற்றிருப்பார் என்று வேதாகமம் கூறுகின்றது (லூக்கா 1:32-33). நிபந்தனையற்ற உடன்படிக்கைகள் எழுத்தியல்பான மெய்யான நிலையில் கிறிஸ்து ராஜ்யத்தை ஸ்தாபிக்க மீண்டும் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஆபிரகாமுடனான உடன்படிக்கை இஸ்ரேலுக்கு தேசம், சந்ததி, ஆட்சியாளர், மற்றும் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தையும் வாக்களித்தது (ஆதியாகமம் 12:1-3). பாலஸ்தீனத்தின் உடன் படிக்கையானது இஸ்ரவேலை தங்களுடைய தேசத்தை மீண்டும் மீட்டு அதில் அவர்களை குடியேற பண்ண வைக்கவும் வாக்களித்தது (உபாகமம் 30:1-10). தாவீதின் உடன்படிக்கை இஸ்ரவேலுக்கு மன்னிப்பையும் அதன் மூலம் தேசம் ஆசீர்வதிக்கப்படுவதையும் வாக்களிக்கிறது (எரேமியா 31:31-34).

இயேசுவின் இரண்டாம் வருகையின்போது, இந்த உடன்படிக்கைகளெல்லாம் நிறைவேறும், அதாவது தேசங்களிலிருந்து இஸ்ரவேலைக் மீண்டும் கூட்டிச் சேர்க்கும்போது (மத்தேயு 24:31), மாற்றப்படும் போது (சகரியா 12:10-14), மற்றும் மேசியாவான இயேசு கிறிஸ்துவின் ஆட்சிக்கு கீழ் தேசத்தில் யாவரும் மீண்டுமாக மீட்கப்படுவார்கள். வேதாகமம் ஆயிரவருட ஆரசாட்சியில் சரீரப்பிரகாரமாகவும் ஆவிக்குரியப் பிகாரமாகவும் பூரணமான சூழ்நிலையாக இருக்கும் என்று கூறுகின்றது.

அந்த காலத்தில் சமாதானம் (மீகா4:2-4, ஏசாயா 32:17-18) சந்தோஷம் (ஏசாயா 61:7, 10) ஆறுதல் (ஏசாயா 40:12), மற்றும் தரித்திரம் அல்லது வியாதி இல்லாத காலமாய் இருக்கும் (ஆமோஸ் 9:13-15; யோவேல் 2:28-29). விசுவாசிகள் மட்டுமே ஆயிர வருட அரசாட்சிக்குள் செல்லுவார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. இதனிமித்தம் அந்தகாலம் முழுமையான நீதி (மத்தேயு 25:37; சங்கீதம் 24:3-4), கீழ்படிதல் (ஏரேமியா 31:33), பரிசுத்தம் (ஏசாயா 35:8), சத்தியம் (ஏசாயா 65:16), மற்றும் பரிசுத்த ஆவியின் நிறைவு உள்ளதாக இருக்கும். (யோவேல் 2:28-29). கிறிஸ்து ராஜாவாக அரசாளுவார் (ஏசாயா 9:3-7; 11:1-10), தாவீதுடன் பிரதிநிதியாக (எரேமியா 33:15-21; ஆமோஸ் 9:11) இருப்பார். பிரபுக்களும் நியாயாதிபதிகளும் கூட அவரோடு ஆளுவார்கள் (ஏசாயா 32:1; மத்தேயு 19:28), எருசலேம் உலகத்தின் அரசியல் தலைநகரமாக இருக்கும் (சகரியா 8:3).

வெளிப்படுத்தின விசேஷம் 20:2-7 வரையிலுள்ள வசனங்கள் ஆயிர வருட அரசாட்சியின் தெளிவான காலத்தைக் கூறுகின்றது. இந்த வசனங்கள் மட்டுமல்லாமல் பூமியில் மேசியாவின் எழுத்தியல்பான ஆயிர வருட அரசாட்சியைக் குறித்து கூறுகிற எண்ணிலடங்கா மற்ற வசனங்களும் உள்ளன. தேவனுடைய உடன்படிக்கைகள் மற்றும் வாக்குத்தத்தங்கள் ஆகியவைகளின் நிறைவேறுதல் மெய்யான வரப்போகிற ராஜ்யத்தைச் சார்ந்தே இருக்கின்றது. ஆயிரவருட அரசாட்சி மற்றும் ஆயிரவருட அரசாட்சியினுடைய காலம் 1000 வருடங்கள் என்பதை மறுதலிப்பதற்கு ஒரு உறுதியான ஆதாரமும் இல்லை.

English



முகப்பு பக்கம்

ஆயிர வருட அரசாட்சி என்றால் என்ன? அதை நாம் அப்படியே எழுத்தியல்பான நிலையில் புரிந்துக்கொள்ள வேண்டுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries