கேள்வி
தார்மீக இறையியல் என்றால் என்ன?
பதில்
தார்மீக இறையியல் என்பது ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் தேவனுடைய பிரசன்னம் அல்லது தயவை அடைவதற்கு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் தேவனைப் பற்றிய ஆய்வை விவரிக்க பயன்படுத்திய சொல் ஆகும். அதிகாரபூர்வமான இறையியல் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் போதனை அல்லது ஆக்கபூர்வ கோட்பாட்டைக் கையாளும் அதே வேளையில், தார்மீக இறையியல் வாழ்க்கையின் குறிக்கோள் மற்றும் அது எவ்வாறு அடையப்படுகிறது என்பதைக் கையாள்கிறது. எனவே, தார்மீக இறையியலின் குறிக்கோள் அல்லது நோக்கம், மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதாகும்.
தார்மீக இறையியல் சுதந்திரம், மனசாட்சி, அன்பு, பொறுப்பு மற்றும் பிரமாணம் போன்றவற்றை ஆராய்கிறது. தார்மீக இறையியல் தனிநபர்கள் சரியான முடிவுகளை எடுப்பதற்கும், திருச்சபையின் அதிகாரப்பூர்வமான இறையியலுக்கு இணங்க அன்றாட வாழ்க்கையின் விவரங்களைக் கையாள்வதற்கும் பொதுவான கொள்கைகளை அமைக்க முயல்கிறது. தார்மீக இறையியல் என்பது புராட்டஸ்டன்ட்டுகள் பொதுவாக கிறிஸ்தவ நெறிமுறைகள் என்று குறிப்பிடுவதற்கு ரோமன் கத்தோலிக்கம் கூறுவதற்கு சமமானதாகும். தார்மீக இறையியல் வாழ்க்கையில் பரந்த கேள்விகளைக் கையாள்கிறது மற்றும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவராக வாழ்வதன் அர்த்தம் என்ன என்பதை வரையறுக்க முயற்சிக்கிறது. தார்மீக இறையியல் தார்மீக பகுத்தறிவின் வெவ்வேறு முறைகள், சரி மற்றும் தவறு, நன்மை மற்றும் தீமை, பாவம் மற்றும் அறம் போன்றவற்றின் வரையறைகளை விவரிக்கிறது.
English
தார்மீக இறையியல் என்றால் என்ன?