settings icon
share icon
கேள்வி

தேவனுடைய பல்வேறு பெயர்கள் என்ன, அவற்றின் பொருள் என்ன?

பதில்


தேவனுடைய பல பெயர்கள் ஒவ்வொன்றும் அவருடைய பல குணாதிசயங்களின் வெவ்வேறு அம்சங்களை விவரிக்கிறது. வேதாகமத்தில் பெருமளவில் அறிந்த சிறப்பு வாய்ந்த பெயர்கள் இங்கே:

ஏல், ஏலோ: தேவன் "வல்லமையுள்ளவர், வலிமையானவர், முக்கியதத்துவம் வாய்ந்தவர்" (ஆதியாகமம் 7:1; ஏசாயா 9:6) - சொற்பிறப்பியல் ரீதியாக, ஏல் என்பது "வல்லமை" என்று தோன்றுகிறது, "உங்களுக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு வல்லமை உண்டு" (ஆதியாகமம் 31:29) ஏல் மற்ற குணங்களோடு தொடர்புடையது, அதாவது நேர்மை (எண்கள் 23:19), வைராக்கியம் (உபாகமம் 5:9) மற்றும் இரக்கம் (நெகேமியா 9:31), ஆனால் வலிமை என்கிற அடிப்படை யோசனையே தொடர்ச்சியாய் இருக்கிறது.

ஏலோஹிம்: தேவன் "சிருஷ்டிகர், வல்லமையுள்ளவர் மற்றும் வலிமைமிக்கவர்" (ஆதியாகமம் 17:7; எரேமியா 31:33) - திரித்துவத்தின் கோட்பாட்டிற்கு இடமளிக்கும் ஏலோவாவின் பன்மை வடிவம். வேதாகமத்தின் முதல் வாக்கியத்தில் இருந்து, தேவன் (ஏலோஹிம்) உலகத்தை இருத்தலுக்குள் தாம் பேசி கட்டளையிட்டதால் வந்தது, இதிலிருந்து தேவனுடைய வல்லமையின் மிகச்சிறந்த தன்மை தெளிவாகிறது (ஆதியாகமம் 1:1).

ஏல் ஷடாய்: "சர்வவல்லமையுள்ள தேவன்," "யாக்கோபுடைய வல்லவர்" (ஆதியாகமம் 49:24; சங்கீதம் 132:2, 5)–எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கிற தேவனுடைய முடிவான வல்லமையைப் பற்றிப் பேசுகிறது.

அடோனாய்: "கர்த்தர்" (Lord) (ஆதியாகமம் 15:2; நியாயாதிபதிகள் 6:15)–இந்த பெயர் யாவே (YHWH) என்னும் பெயருக்கு பதிலாகப் பயன்படுத்தப்பட்டது, இந்த நாமம் பாவப்பட்ட மனிதர்களால் உச்சரிக்க கூடாத அளவுக்கு பரிசுத்தமானது என்று யூதர்களால் கருதப்பட்டது. பழைய ஏற்பாட்டில், யாவே பெரும்பாலும் தேவன் தாம் தெரிந்துகொண்ட தனது மக்களுடன் கையாளும் போது பயன்படுத்தப்படுகிறது, அதே சமயம் அடோனாய் புறஜாதியினருடன் தொடர்பு கொள்ளும்போது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

யாவே / யாஹ்வே / யேகோவா: "கர்த்தர்" (LORD) (உபாகமம் 6:4; தானியேல் 9:14) - கண்டிப்பாகச் சொன்னால், தேவனுக்கு ஒரே சரியான பெயர். ஆங்கில வேதாகம மொழிப்பெயர்ப்புகளில் "கர்த்தர்" (அனைத்தும் பெரிய எழுத்துக்கள்) அடோனாய், "கர்த்தர்" என்பதிலிருந்து வேறுபடுத்தி காட்டப்படுகிறது. பெயரின் வெளிப்பாடு முதலில் மோசேக்கு வழங்கப்பட்டது "நான் இருக்கிறவராக இருக்கிறேன்" (யாத்திராகமம் 3:14). இந்த பெயர் உடனடி, பிரசன்னத்தைக் குறிப்பிடுகிறது. யேகோவா இருக்கிறார், அணுகலாம், அவரை தங்களை விடுவிப்பதற்காக (சங்கீதம் 107:13), மன்னிப்புக்காக (சங்கீதம் 25:11) மற்றும் வழிகாட்டுதளுக்காக (சங்கீதம் 31:3) அழைப்பவர்களுக்கு அவர் அருகில் இருக்கிறார்.

யேகோவா-யீரே: "கர்த்தர் பார்த்துகொள்வார்" (ஆதியாகமம் 22:14)–தேவன் ஈசாக்கிற்குப் பதிலாக பலியிடப்படும் ஆட்டுக்கடாவை வழங்கியபோது ஆபிரகாமால் நினைவுகூரப்பட்ட பெயர்.

யேகோவா-ராஃபா: "பரிகாரியாகிய கர்த்தர்" (யாத்திராகமம் 15:26)–"நான் உன்னை குணமாக்கும் யேகோவா" உடலிலும் உள்ளத்திலும். உடலில், நோய்களிலிருந்து பாதுகாப்பதன் மூலம் மற்றும் குணப்படுத்துவதன் மூலம், மற்றும் ஆத்துமாவில், அக்கிரமங்களை மன்னிப்பதன் மூலம்.

யேகோவா-நிசி: "எங்களுக்காய் யுத்தம் பண்ணுகிற கர்த்தர்" (யாத்திராகமம் 17:15), அங்கு சேனை ஒன்று திரளும் இடமாக விளங்குகிறது. இந்த பெயர் யாத்திராகமம் 17 இல் அமலேக்கியர்களுக்கு எதிரான வனாந்திர வெற்றியை நினைவூட்டுகிறது.

யேகோவா-மக்காடேஷ்: "பரிசுத்தமாக்குகிற கர்த்தர்" (லேவியராகமம் 20:8; எசேக்கியேல் 37:28)–தேவன் மட்டுமே அவரால், நியாயப்பிரமாணத்தினால் அல்ல, மக்களை பரிசுத்தப்படுத்தி அவர்களை பரிசுத்தமாக்க முடியும் என்பதை தெளிவுபடுத்துகிறார்.

யேகோவா-ஷாலோம்: "கர்த்தர் நம் சமாதானம்" (நியாயாதிபதிகள் 6:24)–தேவனுடைய தூதனைப் பார்த்த பிறகு அவன் நினைத்தபடி அவன் மரிக்கமாட்டான் என்று உறுதியளித்த பிறகு அவன் கட்டிய பலிபீடத்திற்கு கிதியோன் கொடுத்த பெயர்.

யேகோவா-ஏலோஹிம்: "கர்த்தராகிய தேவன்" (ஆதியாகமம் 2:4; சங்கீதம் 59:5)–கடவுளின் தனித்துவமான பெயர் யாவே மற்றும் பொதுவான "கர்த்தர்" ஆகியவற்றின் கலவையாகும், அவர் கர்த்தராகிய தேவன் என்பதைக் குறிக்கிறது.

யேகோவா-திஷ்கெனு: "நம்முடைய நீதியாயிருக்கிற கர்த்தர்" (எரேமியா 33:16)-யேகோவா-மக்காடேஷ் போலவே, தேவன் மட்டுமே மனிதனுக்கு நீதியை வழங்குகிறார், இறுதியில் அவருடைய குமாரன், இயேசு கிறிஸ்துவின் என்னும் நபராலே, "நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு" பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார் (2 கொரிந்தியர் 5:21).

யேகோவா-ரோஹி: "கர்த்தர் எங்கள் மேய்ப்பர்" (சங்கீதம் 23:1)-தாவீது தனது ஆடுகளுக்கு மேய்ப்பனாக தனது உறவைப் பற்றி யோசித்த பிறகு, தேவன் அவருடன் சரியாக உறவு வைத்திருப்பதை உணர்ந்தார், அதனால் அவர் கூறினார், " யேகோவா-ரோஹி என் மேய்ப்பராக இருக்கிறார். நான் தாழ்ச்சியடையேன்" (சங்கீதம் 23:1).

யேகோவா-ஷம்மா: "கர்த்தர் இருக்கிறார்" (எசேக்கியேல் 48:35)-எருசலேம் மற்றும் அங்குள்ள தேவாலயத்திற்கு பெயரிடப்பட்டது, இது தேவனுடைய ஒருமுறை சென்ற மகிமை (எசேக்கியேல் 8-11) திரும்பி வந்ததைக் குறிக்கிறது (எசேக்கியல் 44:1 -4).

யேகோவா-சாபோத்: "சேனைகளின் கர்த்தர்" (ஏசாயா 1:24; சங்கீதம் 46:7)-தேவதூதர்கள் மற்றும் மனிதர்கள் இருவருக்கும் "இனங்கள்" என்று பொருள். அவர் பரலோகத்தின் சேனை மற்றும் பூமியின் குடிமக்கள், யூதர்கள் மற்றும் புறஜாதியினர், ஐசுவரியவான்கள் மற்றும் ஏழைகள், எஜமான்கள் மற்றும் அடிமைகள் ஆகியோரின் தேவன். இந்த பெயர் தேவனுடைய மகத்துவம், வல்லமை மற்றும் அதிகாரத்தை வெளிப்படுத்துகிறது மற்றும் அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதை அவரால் நிறைவேற்ற முடியும் என்பதை காட்டுகிறது.

ஏல் ஏலியோன்: "உன்னதமானவர்" (உபாகமம் 26:19) - "மேலே செல்" அல்லது "ஏறு" என்னும் எபிரேய சொற்களின் மூலத்திலிருந்து பெறப்பட்டது, எனவே இதன் உட்பொருள் மிகவும் உயர்ந்தது என்பதாகும். ஏல் எலியோன் உயர்த்தப்பட்ட நிலையைக் குறிக்கிறது மற்றும் முழுமையான கர்த்தத்துவத்தைப் பற்றி பேசுகிறது.

ஏல் ரோய்: "காண்கின்ற தேவன்" (ஆதியாகமம் 16:13)-சாராவால் விரட்டப்பட்ட பிறகு வனாந்திரத்தில் தனியாகவும் பரிதவிக்கப்பட்ட நிலையிலும் இருந்த ஆகாரால் தேவனுக்கு வழங்கப்பட்ட பெயர் (ஆதியாகமம் 16:1-14). கர்த்தருடைய தூதனை ஆகார் சந்தித்தபோது, அவள் தேவனே தனக்குத் தூதன் வடிவில் தோன்றினதைப் பார்த்ததாக உணர்ந்தாள். ஏல் ரோய் அவளது துயரத்தில் இருப்பதைக் கண்டார், மேலும் அவர் ஜீவிக்கிற மற்றும் காண்கின்ற தேவன் என்று சாட்சியம் அளித்தாள்.

ஏல்-ஓலாம்: "நித்தியமான தேவன்" (சங்கீதம் 90:1-3)-கடவுளின் தன்மை ஆதியும் அல்லது அந்தமும் இல்லாதவர், வரைமுறைக்குட்பட்ட காலத்தின் அனைத்து தடைகளிலிருந்தும் விடுபட்டு அதற்கும் அப்புறமாய் உள்ளவர், மேலும் அவர் காலத்தின் காரணத்தை தன்னுள் கொண்டிருக்கிறார். "நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்."

ஏல்-கிபோர்: "வல்லமையுள்ள தேவன்" (ஏசாயா 9:6)-ஏசாயாவின் இந்த தீர்க்கதரிசனப் பகுதியில் மேசியா, கிறிஸ்து இயேசு என்று விவரிக்கும் பெயர். ஒரு வல்லமையுள்ள மற்றும் வலிமைமிக்க போர்வீரராக, மேசியா, வல்லமையுள்ள தேவன், தேவனுடைய எதிரிகளை அழித்து, இரும்புக் கோலால் ஆட்சி செய்வார் (வெளிப்படுத்துதல் 19:15).

English



முகப்பு பக்கம்

தேவனுடைய பல்வேறு பெயர்கள் என்ன, அவற்றின் பொருள் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries