கேள்வி
வேதாகமத்தின் வெவ்வேறு பெயர்கள் மற்றும் தலைப்புகள் யாவை?
பதில்
பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் வேதாகமத்தின் ஒரு டஜன் பெயர்கள் மற்றும் தலைப்புகள் உள்ளன. பின்வருபவை மிகவும் பிரபலமானவைகளின் பட்டியல்:
நியாயப்பிரமாண புத்தகம் (உபாகமம் 31:26)—“நீங்கள் இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தை எடுத்து, அதை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்திலே வையுங்கள்; அங்கே அது உனக்கு விரோதமான சாட்சியாயிருக்கும்.” வேதாகமம் நியாயப்பிரமாண புத்தகம் என்று விவரிக்கப்படுகிறது, நியாயப்பிரமாணங்கள் நம்மை அடிமைப்படுத்தவோ அல்லது தேவனுடனான நமது உறவை நசுக்கவோ அல்ல, ஆனால் தேவனுடைய நீதியைப் பற்றிய நமது அறிவை அதிகரிக்கவும் கிறிஸ்துவை நமக்குச் சுட்டிக்காட்டவும் நியாயப்பிரமாணம் உதவுகிறது.
சுவிசேஷம் (ரோமர் 1:16)—"கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; ...விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது." கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சுவிசேஷத்தை, நற்செய்தியை வேதாகமம் நமக்கு வெளிப்படுத்துகிறது. தேவனுடைய குமாரன் மூலம் நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நமக்கு இரட்சிப்பு வழங்கப்படுகிறது.
பரிசுத்த வேதாகமங்கள் (ரோமர் 1:2)—"இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி." வேதாகமம் பரிசுத்தமான மற்றும் புனிதமான எழுத்துக்களின் தொகுப்பாகும், ஏனெனில் அவை தேவனால் ஏவப்பட்டவை.
கர்த்தருடைய வேதம் (சங்கீதம் 19:7)—“கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.” வேதாகமத்தின் பிரமாணங்கள் மற்றவற்றுடன் குழப்பப்படக்கூடாது; அவை கர்த்தருடைய கட்டளைகள் மற்றும் கர்த்தருடையது மட்டுமே, மனிதனின் சலசலப்புகள் அல்ல.
ஜீவனுள்ள வார்த்தைகள் (அப்போஸ்தலர் 7:38)—“சீனாய்மலையில் தன்னுடனே பேசின தூதனோடும் நம்முடைய பிதாக்களோடுங்கூட வனாந்தரத்திலே சபைக்குள்ளிருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவாக்கியங்களைப் பெற்றவனும் இவனே.” வேதாகமம் ஒரு ஜீவனுள்ள புஸ்தகம்; ஒவ்வொரு புத்தகம், அதிகாரம் மற்றும் வசனம் தேவனுடைய அறிவு மற்றும் ஞானத்துடன் ஜீவனோடு உள்ளது.
கிறிஸ்துவின் வசனம் (கொலோசெயர் 3:16)—“கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி.” கிறிஸ்துவின் வசனமானது அதை நிறைவேற்றக்கூடிய ஒரே ஒருவரால் நமக்கு பாவத்திலிருந்து கிடைக்கும் இரட்சிப்பின் செய்தியாக இருக்கிறது.
வேதவாக்கியங்கள் (2 தீமோத்தேயு 3:16)—"வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி." தேவனால் அருளப்பட்டது, வேதாகமம் மற்றவற்றைப் போலல்லாமல் தேவனுடைய எழுத்துக்களின் தொகுப்பாகும். தேவனுடைய ஆவியானவரால் ஏவப்பட்ட அல்லது "நடத்திச் செல்லப்பட்ட" மனிதர்களால் எழுதப்பட்ட ஒரே புத்தகம் இது (2 பேதுரு 1:21).
புஸ்தகச்சுருள் (சங்கீதம் 40:7)—"இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது." இயேசுவின் தீர்க்கதரிசனத்தில், வேதாகமம் தன்னை ஒரு புஸ்தகச்சுருள் என்று குறிப்பிடுகிறது, தலைமுறை தலைமுறையாக பகிரப்படும் விலைமதிப்பற்ற அறிவை ஆவணப்படுத்தும் காகிதத்தோல்தான் புஸ்தகச்சுருள்.
ஆவியின் பட்டயம் (எபேசியர் 6:17)—"தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்." ஒரு பட்டயத்தைப் போல, வேதாகமம் எந்தத் தாக்குதலையும் தேவனுடைய சத்தியத்துடன் உருவக் குத்த முடியும். எபிரேயர் புத்தகத்தின் எழுத்தாளர் “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது" என்று கூறுகிறார் (எபிரேயர் 4:12).
சத்தியம் (யோவான் 17:17)—“உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்." வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்பதால், அது சத்தியம். ஒவ்வொரு வார்த்தையும் தேவனுடைய மனதில் இருந்து வருகிறது. அவர் சத்தியமாக இருப்பதால், அவருடைய வார்த்தை சத்தியமாக இருக்க வேண்டும்.
தேவனுடைய வார்த்தை (லூக்கா 11:28)—"தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள்." வேதாகமம் தேவனுடைய ஊதுகுழல் போன்றது, ஒவ்வொரு புத்தகத்தின் மூலமும் அவர் நம்முடன் நேரடியாக பேசுகிறார்.
ஜீவவசனம் (பிலிப்பியர் 2:16)—"...ஜீவவசனத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள்." ஜீவனுக்கும் மரணத்துக்கும் உள்ள வித்தியாசத்தை வேதாகமம் நமக்கு வெளிப்படுத்துகிறது—இயேசு கிறிஸ்துவை தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்வோருக்கு முன்பாக இருக்கும் நித்திய ஜீவன் மற்றும் அவ்வாறு செய்யாதவர்களுக்கு இருக்கும் நித்திய மரணம்.
கர்த்தருடைய சொற்கள் (சங்கீதம் 12: 6)—"கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது." வேதாகமத்தின் வார்த்தைகள் பரிபூரணமானவை மற்றும் குறைபாடற்றவை, ஏனென்றால் அவை தேவனுடைய வார்த்தைகள், தேவனுடைய அன்பையும் மகிமையையும் வெளிப்படுத்த தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்கள் மூலம் பேசப்படுகின்றன.
English
வேதாகமத்தின் வெவ்வேறு பெயர்கள் மற்றும் தலைப்புகள் யாவை?