கேள்வி
நெஃபிலிம் என்பவர்கள் யார் / என்ன?
பதில்
நெஃபிலிம் ("விழுந்துபோனவர்கள், இராட்சதர்கள்") ஆதியாகமம் 6:1-4-லுள்ள தேவகுமாரர் மற்றும் மனுஷகுமாரத்திகள் இடையே உள்ள பாலியல் உறவுகளின் சந்ததியினர். “தேவகுமாரர்” யார் என்பதை அடையாளம் கண்டுகொள்வதைக் குறித்து நிறைய விவாதங்கள் உள்ளன. "தேவகுமாரர்" மனுஷகுமாரத்திகளோடு உறவுகொண்ட விழுந்துபோன தேவதூதர்கள் (பிசாசுகள்) அல்லது மனுஷகுமாரத்திகளோடு உறவுகொண்ட புருஷர்களை ஆட்கொண்டார்கள் என்பதுதான் எங்கள் கருத்தாக இருக்கிறது. இந்த உறவுகள் “பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானவர்களாகிய" (ஆதியாகமம் 6:4) நெஃபிலிமை உருவாகும்படி விளைவித்தனர்.
ஏன் பிசாசுகள அத்தகைய ஒரு காரியத்தை செய்ய வேண்டும்? அதற்கு வேதாகமம் நமக்கு குறிப்பிட்ட பதில் ஒன்றும் கொடுக்கவில்லை. பிசாசுகள் தீயவை, பிணைக்கப்பட்ட ஜீவிகள், நம்மை ஆச்சரியப்படுத்தக் கூடிய ஒன்றையும் அவர்கள் செய்யவில்லை. மேசியாவின் வருகையைத் தடுக்க, பிசாசுகள் மனிதகுலத்தை மாசுபடுத்தும் முயற்சியில், ஒரு தனித்துவமான உந்துதல் இருப்பதாக சில ஊகங்கள் கூறுகின்றன. மேசியா ஒரு நாள் சாத்தானாகிய சர்ப்பத்தின் தலையை நசுக்குவார் என்று தேவன் வாக்குறுதி அளித்திருக்கிறார் (ஆதியாகமம் 3:15). ஆதியாகமம் ஆறாம் அதிகாரத்தில் உள்ள பிசாசுகள் சர்ப்பத்தின் தலை நசுக்கப்படுவதை தடுக்கவும், பாவமில்லாத "ஸ்திரீயின் வித்து” பிறக்க முடியாதபடி செய்ய முற்பட்டன. இது வேதாகமத்தில் விசேஷமான பதில் அல்ல, ஆனால் அது வேதாகமத்தால் நம்பத்தகுந்ததாகும்.
நெஃபிலிம் என்றால் என்ன? இஸ்ரவேலர்கள் சார்ந்த மற்ற புராணங்களின் (ஏனோக்கின் புத்தகமும் மற்ற வேதாகம புத்தகங்கள் அல்லாதவைகள்) படி, அவர்கள் பெரிய தீய செயல்களைச் செய்த இராட்சதர்கள் மற்றும் மிக மேன்மையான கதாநாயகர்களின் ஒரு இனம் என்று வரையறுக்கப்படுகிறது. மனித மரபணுக்களுடன் பிசாசுகளின் “ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம் (டி.என்.ஏ; DNA)" யின் கலவையிலிருந்து அவர்களது பெரிய அளவிலான அளவையும் சக்தியையும் பெற்றிருக்கலாம். ரஸ்ஸல் க்ரோவ் நடித்த நோவா என்னும் திரைப்படத்தின்படி, நெஃபிலிம் என்பவர்கள் விழுந்துபோன தேவதூதர்கள் பாறைகளில் உள்ளனர் என்பதாகும். அவர்களைக் குறித்து வேதாகமம் நேரடியாகக் கூறுவது என்னவென்றால் அவர்கள், “பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்கள்” (ஆதியாகமம் 6:4) என்பதாகும். நெஃபிலிம்கள் வெளிநாட்டினரோ, தூதர்களோ அல்ல, அவர்கள் "பார்வையாளர்கள்," அல்லது பாறை அரக்கர்கள்; அவர்கள் தேவகுமாரர் மற்றும் மனுஷகுமாரத்திகள் சேர்க்கையால் உருவாக்கப்பட்டிருந்தனர் (ஆதியாகமம் 6:1-4).
நெஃபிலிமிற்கு பிறகு என்ன ஆயிற்று? நோவாவின் காலத்தில் உண்டான ஜலப்பிரளயத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நெஃபிலிம் ஆகும். நெஃபிலிமைப் பற்றிக் கூறிவிட்டு உடனடியாக வேதாகமம் இப்படியாக சொல்லுகிறது: “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார்” (ஆதியாகமம் 6:5-7). தேவன் நோவாவையும், அவருடைய குடும்பத்தாரையும், பேழைகளிலிருந்த விலங்குகளையும் தவிர்த்து பூமி முழுவதையும் ஜலப்பிரளயத்தினால் அழித்து போட்டார், நெபிலிம் உட்பட எல்லாரும் அழிந்து போனார்கள் (ஆதியாகமம் 6:11-22).
நெஃபிலிம் ஜலப்பிரளயத்திற்கு பிறகு இருந்ததா? ஆதியாகமம் 6:4 நமக்கு சொல்லுகிறது என்னவெனில், “அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.” ஜலப்பிரளயத்திற்குப் பிறகும் பிசாசுகள் தங்கள் பாவத்தை மீண்டும் மீண்டும் செய்ததாக தெரிகிறது. எனினும், அது ஜலப்பிரளயத்திற்கு முன்னதாக இருந்ததைவிட மிகக் குறைவான அளவிற்கு அது நடந்தது. இஸ்ரவேலர்கள் கானான் தேசத்தை வேவு பார்த்தபோது, மோசேயிடம், “அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம்” (எண்ணாகமம் 13:33). இந்த பத்தியில் நெஃபிலிம் உண்மையாகவே இருந்தார்கள் என்று சொல்லவில்லை, மாறாக வேவுகாரர்கள் தாங்கள் நெஃபிலிமைக் கண்டதாக நினைத்தார்கள். வேவுகாரர்கள் கானானில் மிக பெரிய இராட்சதர்கள் போன்ற மக்களைக் கண்டனர் மற்றும் அவர்கள் பயம் அவர்களை நெஃபிலிமாக நம்பவைத்தது. அல்லது வெள்ளத்திற்கு பிறகு பிசாசுகள் மனித இனத்துடன் மீண்டும் இணைந்து, நெஃபிலிமை அதிகமாக்கியிருக்கலாம். நோவாவின் மருமகள்களில் ஒருவர் நெஃபிலிமின் சில குணங்களைப் பெற்றிருக்கலாம் என்பது கூட சாத்தியம். கானானின் படையெடுப்பில் இவர்கள் யாவரையும் அழித்திருக்கலாம் (யோசுவா 11: 21-22), பின்னர் அவர்கள் வரலாற்றில் (உபாகமம் 3:11, 1 சாமுவேல் 17).
இன்றைய நாட்களில் நெஃபிலிமை உற்பத்தி செய்வதிலிருந்து பிசாசுகளை தடுக்கிறது எது? இப்படிப்பட்ட செயல்களை செய்துவந்த எல்லா பிசாசுகளையும் தனிமைப்படுத்தி வைப்பதன் மூலம் மனிதர்களுடன் பழகும் பிசாசுகளுக்கு தேவன் கடவுள் முற்றுப்புள்ளி வைத்தார். “தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்” என்று யூதா 6-வது வசனம் சொல்லுகிறது. வெளிப்படையாக, எல்லா பிசாசுகளும் "சிறையில்" இன்று இல்லை, எனவே உண்மையான வீழ்ச்சிக்கு அப்பால் இன்னும் கடுமையான பாவம் செய்த பிசாசுகள் மட்டும் இங்கே இருந்திருக்க வேண்டும். மறைமுகமாக, மனிதப் பெண்களுடன் பொருத்தப்பட்ட பேய்கள் "நித்திய சங்கிலிகளால் கட்டப்பட்டவை". இத்தகைய பாவம் இனிமேலும் செய்யாதபடிக்கு எந்த பிசாசுகளுக்கும் துணிவு வராதபடி இது தடுக்கும்.
English
நெஃபிலிம் என்பவர்கள் யார் / என்ன?