settings icon
share icon
கேள்வி

புதிய வானங்கள் மற்றும் புதிய பூமி என்றால் என்ன?

பதில்


பரலோகம் மெய்யாகவே எப்படியிருக்கும் என்பதைக் குறித்து அநேகருக்கு தவறான அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறார்கள். புதிய வானங்கள் மற்றும் புதிய பூமியைப் பற்றி வெளி. 21-22 வரையுள்ள அதிகாரங்கள் ஒரு விரிவான சித்திரத்தைத் தருகின்றன. கடைசிக்கால நிகழ்வுகளுக்குப் பிறகு, இப்பொழுதிருக்கிற இந்த வானங்களும் பூமியும் அழிந்துபோகும், மற்றும் அதின் ஸ்தானத்தில் புதிய வானங்கள் மற்றும் புதிய பூமியும் உண்டாகும். விசுவாசிகள் நித்திய காலமாக இந்த புதிய பூமியில் தான் வாசம் பண்ணுவார்கள். இந்த புதிய பூமி தான் நாம் நித்தியத்தை செலவிடும் “பரலோகம்” ஆகும். இந்த புதிய பூமியில் தான் புதிய எருசலேம் என்ற தேவனுடைய நகரம் இருக்கும். இந்த புதிய பூமியில் தான் முத்துக்களின் வாசல்களும் பொன் வீதிகளும் இருக்கும்.

பரலோகம் – புதிய பூமி – நாம் மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தில் இதில் வாழப்போகிறோம் (1 கொரிந்தியர் 15:35-58). பரலோகம் "மேகங்களில்" இருக்கின்றது என்கிற கருத்தை நாம் வேதாகமத்தில் காண்பதில்லை, அது வேதாகமத்தின்படியானது இல்லை. நாம் "பரலோகத்தில் சுற்றி மிதக்கிற ஆவிகளாக" இருப்போம் என்கிற கருத்தும்கூட வேதாகமத்தின்படியானது இல்லை. விசுவாசிகளாகிய பரலோகம் அனுபவிக்கவிருக்கும் பரலோகமானது புதிய மற்றும் பரிபூரணமான ஒரு கிரகம் ஆகும். புதிய பூமியில் பாவம், தீமை, வியாதி, துன்பம், மற்றும் மரணத்திலிருந்து விடுதலையுள்ள ஒரு இடமாக இருக்கும். இது நம்முடைய தற்போதைய பூமி அல்லது நம்முடைய தற்போதைய பூமியிலுள்ள சிருஷ்டிகளைப்போன்று மீண்டும் உருவாக்கப்படலாம், ஆனால் பாவத்தின் சாபம் இருக்காது.

புதிய வானங்களைப் பற்றி என்ன? பண்டைய காலத்தில் வாழ்ந்தவர்கள் மனதில், "வானங்கள்" என்பது பூமிக்கு மேலேயுள்ள வானங்களையும் விண்வெளியையும் குறிக்கிறதாக இருந்தது, அதேபோல் அது தேவன் வசிக்கும் பகுதியாகவும் கருதப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியமாகும். ஆகையால், வெளிப்படுத்துதல் 21:1 புதிய வானங்களை குறிபிடும்போது, முழு பிரபஞ்சமும் படைக்கப்பட்டிருப்பதைக் குறிக்கலாம் - புதியபூமி, புதியவானம், ஒரு புதிய வெளிவெளி. சரீரப்பிரகாரமான நிலையிலோ அல்லது ஆவிக்குரியதாகவோ இருக்கின்ற வகையில், தேவன் இருக்கிறதான பரலோகமும்கூட மறுபடியும் சிருஷ்டிக்கப்பட்டு புதுப்பிக்கப்படுவதுபோல், இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றிற்கும் ஒரு புதிய "துவக்கம்" கொடுக்கப்படப்போகிறதாக தோன்றுகிறது. நித்தியத்தில் புதிய வானங்களில் நாம் பிரவேசிக்க முடியுமா? ஒருவேளை இருக்கலாம், ஆனால் நாம் அதைக்கண்டறிய காத்திருக்கவேண்டும். தேவனுடைய வார்த்தையானது பரலோகத்தைப் பற்றிய நம்முடைய புரிந்துகொள்ளுதலை வடிவமைக்கும்படி நாம் அனைவரும் அனுமதிக்கலாமா?

English



முகப்பு பக்கம்

புதிய வானங்கள் மற்றும் புதிய பூமி என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries