settings icon
share icon
கேள்வி

நான் இணையதள ஆபாசத்திற்கு அடிமையாவதை ஜெயிப்பது எப்படி? ஆபாசத்திற்கு அடிமையாவதை ஜெயிக்க முடியுமா?

பதில்


இணையதள தேடுபொறிகளில் ஆபாசத்துடன் தொடர்புடைய சொற்கள் மிகவும் பொதுவாக தேடப்படும் சொற்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஒவ்வொரு நாளும், மில்லியன் கணக்கான மக்கள் ஆபாசத் துறை தொடர்பான தேடல்களை செய்கிறார்கள். இணையதள ஆபாசத்தின் சக்திவாய்ந்த படங்கள் மிகவும் அடிமையாக்குகின்றன. பல ஆண்கள் (மற்றும் பெண்கள்) இணையதள ஆபாச வலைப்பக்கத்தில் சிக்கி, அதன் காட்சித் தூண்டுதலுக்கு தங்களை உதவியற்றவர்களாகக் காண்கிறார்கள். இது கட்டுப்பாடற்ற காமம், திருமணத்தில் உண்மையான பாலியல் நெருக்கத்தை அனுபவிக்க இயலாமை மற்றும் குற்ற உணர்வு மற்றும் விரக்தியின் தீவிர உணர்வுகளை ஏற்படுத்துகிறது. சுயஇன்பம், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் மாறுபாட்டிற்கான #1 காரணம் ஆபாசமாகும். மிக முக்கியமாக, ஆபாசப் படங்கள் தேவனைப் புண்படுத்துவதாகும், எனவே அது ஒரு ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய, மனந்திரும்ப வேண்டிய மற்றும் வெல்லப்படவேண்டிய பாவமாகும்.

இணையதள ஆபாசத்திற்கு அடிமையாவதைக் கடப்பதற்கான யுத்தத்தில் இரண்டு முதன்மை அம்சங்கள் உள்ளன: ஆவிக்குரிய நிலை மற்றும் நடைமுறை. ஆவிக்குரிய ரீதியில், ஆபாசத்திற்கு அடிமையாதல் ஒரு பாவமாகும், அதை நீங்கள் வெல்ல வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், எனவே நீங்கள் அவ்வாறு செய்ய முடியும். உங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மீது நீங்கள் உண்மையிலேயே நம்பிக்கை வைத்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்துவதே முதல் படியாகும். உங்களுக்குத் தெரியவில்லை என்றால், இரட்சிப்பு மற்றும் பாவமன்னிப்பு பற்றிய எங்கள் பக்கத்தைப் பார்வையிடவும். இயேசு கிறிஸ்துவின் மூலம் பெரும் இரட்சிப்பு இல்லாமல், ஆபாசத்தின் மீது உண்மையான மற்றும் நீடித்த வெற்றிக்கான சாத்தியம் என்பது இல்லை: "என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது" (யோவான் 15:5).

நீங்கள் கிறிஸ்தவ விசுவாசி மற்றும் இணையதள ஆபாசத்திற்கு அடிமையாகி போராடிக் கொண்டிருந்தால், உங்களுக்கு ஒரு நம்பிக்கையும் உதவியும் இருக்கிறது! பரிசுத்த ஆவியின் வல்லமை உங்களுக்குக் கிடைக்கிறது (எபேசியர் 3:16). தேவனுடைய மன்னிப்பின் சுத்திகரிப்பு உங்களுக்குக் கிடைக்கிறது (1 யோவான் 1:9). தேவனுடைய வார்த்தையின் புதுப்பிக்கும் திறன் உங்கள் வசம் உள்ளது (ரோமர் 12:1-2). உங்கள் மனதையும் கண்களையும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுங்கள் (1 யோவான் 2:16). உங்களைப் பலப்படுத்தவும், ஆபாசத்தை வெல்லவும் தேவனிடம் கேளுங்கள் (பிலிப்பியர் 4:13). மேலும் ஆபாசத்தை வெளிப்படுத்துவதிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்படி தேவனிடம் கேளுங்கள் (1 கொரிந்தியர் 10:13), அவருக்குப் பிரியமான காரியங்களால் உங்கள் மனதை நிரப்பவும் (பிலிப்பியர் 4:8). இவை அனைத்தும் தேவன் மதிப்பளித்து பதிலளிக்கும் கோரிக்கைகள் ஆகும்.

நடைமுறையில் பேசினால், இணையதள ஆபாசத்திற்கு அடிமையாவதை எதிர்த்துப் போராடுவதற்கு ஏராளமான கருவிகள் உள்ளன. www.PureOnline.com இல் ஒரு சிறந்த திட்டம் உள்ளது. www.BSafeOnline.com போன்ற இணையதளம் மூலம் ஆபாசப் படங்களை அணுகுவதிலிருந்து உங்கள் கணினியை முற்றிலுமாகத் தடுக்கும் பல தரமான இணையதள வடிகட்டுதல் திட்டங்கள் உள்ளன. மற்றொரு அருமையான கருவி www.X3Watch.com இல் கிடைக்கிறது. X3watch என்பது ஒரு பொறுப்புணர்வு மென்பொருள். இது உங்கள் இணையதள உலாவலைக் கண்காணித்து, நீங்கள் பார்வையிட்ட ஏதேனும் ஆட்சேபனைக்குரிய இணையதளங்களின் அறிக்கையை நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொறுப்புக்கூறல் கூட்டாளிக்கு அனுப்புகிறது. உங்கள் வாலிபர் கூட்டத்தின் போதகர், பெற்றோர், நண்பர், போதகர் அல்லது மனைவி இது பற்றிய விரிவான அறிக்கையைப் பெறுவார்கள் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், இணையதள ஆபாசத்தைப் பார்ப்பதற்கான உங்கள் விருப்பம் வெகுவாகக் குறையும்.

நம்பிக்கையை இழக்காதீர்கள்! இணையதள ஆபாசத்திற்கு அடிமையானது "மன்னிக்க முடியாத பாவம்" அல்ல. தேவன் உங்களை மன்னிக்க முடியும் மற்றும் மன்னிப்பார். இணையதள ஆபாசத்திற்கு அடிமையாதல் என்பது "வெல்ல முடியாத பாவம்" அல்ல. அதை ஜெயிக்க தேவனால் முடியும் மற்றும் அவர் உங்களுக்கு உதவுவார். உங்கள் மனதையும் கண்களையும் கர்த்தரிடம் ஒப்படைத்து விடுங்கள். தேவனுடைய வார்த்தையால் உங்கள் மனதை நிரப்ப உங்களை ஒப்புக்கொடுங்கள் (சங்கீதம் 119:11). ஜெபத்தில் தினமும் அவருடைய உதவியை நாடுங்கள்; உங்கள் மனதை அவருடைய சத்தியத்தால் நிரப்பவும், தேவையற்ற தகாத எண்ணங்கள் மற்றும் ஆசைகளைத் தடுக்கும்படிக்கு அவரிடம் கேளுங்கள். உங்களைப் பொறுப்பாக வைத்துக் கொள்ளவும், இணையதள ஆபாசத்திற்கான அணுகலைத் தடுக்கவும் மேலே பட்டியலிடப்பட்டுள்ள நடைமுறை நடவடிக்கைகளை எடுக்கவும். "நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவர்" (எபேசியர் 3:20).

English


முகப்பு பக்கம்
நான் இணையதள ஆபாசத்திற்கு அடிமையாவதை ஜெயிப்பது எப்படி? ஆபாசத்திற்கு அடிமையாவதை ஜெயிக்க முடியுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries