settings icon
share icon
கேள்வி

உலகளாவிய தொற்றுநோய்களை குறித்து வேதம் என்ன சொல்லுகிறது?

பதில்


எபோலா அல்லது கொரோனா வைரஸ் போன்ற உலகளாவிய தொற்றுநோய்கள் வெடித்துபெருகும்போது, அநேகர் கேட்கும் ஒரு கேள்வி, தேவன் ஏன் இப்படிப்பட்ட தொற்றுநோய்களை அனுமதிக்கிறார் - அல்லது ஏற்படுத்துகிறார் - மற்றும் இப்படிப்பட்ட வியாதிபெலவீனங்கள் கடைசிகாலத்தின் அடையாளங்களா? என்பதே/ வேதாகமத்தில், குறிப்பாக பழைய ஏற்பாட்டில், பல்வேறு சந்தர்ப்பங்களில், தேவன் கொள்ளைநோய்களையும் வியாதிகளையும் தம்முடைய ஜனத்தின் மீதும் சத்துருக்களின் மீதும் "என்னுடைய வல்லமையை காண்பிக்கும்படியாகவும் (யாத்திராகமம் 9:14,16) அனுமதித்தார் என்று பார்க்கிறோம். பார்வோன் இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும்படிக்கு எகிப்தின் மேல் வாதைகளை வரப்பண்ணினாலும், தம்முடைய ஜனங்கள் அதனால் பாதிக்கப்படாதடிக்கு காத்தார்(யாத்திராகமம 12:13, 15:26) வியாதிகள் மற்றும் ஏனைய பாடுகளின்மேல் அவருக்கு இருந்த சர்வ்வல்ல கட்டுப்பாட்டை அது சுட்டிக்காட்டுகிறது.

கீழ்ப்படியாமையினால் உண்டாகும் விளைவுகள், வாதைகளை (லேவியாரகமம் 26:21,25) குறித்தும் தேவன் தம்முடைய ஜனத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். இரண்டு குறிப்பிட்ட சம்பவங்களில், கீழ்ப்படியாமையின் பல்வேறு செயல்களின் (எண்ணாகமம் 16:49 மற்றும் 25:9) விளைவால் தேவன் 14,700 பேர் மற்றும் 24,000 பேர் அழித்துப்போட்டார். மோசேயின் பிரமாணம் வழங்கப்பட்டபின், ஜனங்கள் அதற்கு கீழ்ப்படியவேண்டும் என்று கட்டளையிட்டார். இல்லாவிடில், பல்வேறு தீமைகள், குறிப்பாக எபோலா போன்ற," கர்த்தர் உன்னை ஈளையினாலும், காய்ச்சலினாலும் உஷ்ணத்தினாலும், ….வாதிப்பார்; நீ அழியுமட்டும் இவைகள் உன்னைப் பின்தொடரும். (உபாகமம் 28:22). இவைகள் தேவன் வருவித்த அநேக வாதைகள் மற்றும் வியாதிகளின் ஒரு சில உதாரணங்கள்.

சில சமயங்களில், ஒரு அன்புள்ள, இரக்கமுள்ள தேவனால் எப்படி தம்முடைய ஜனத்தின்மேல் இப்பேர்ப்பட்ட கோபாக்கினையை, உக்கிரத்தை வெளிப்படுத்தமுடிகிறது என்பதை நம்மால் கற்பனையும் செய்யமுடியவில்லை. ஆனால் தேவனுடைய தண்டனைகளுக்கு எப்போதும் மனந்திரும்புதல் மற்றும் மறுசீரமைப்பை குறித்த ஒரு இலக்கு உண்டு. 2 நாளாகமம் 7:13-14 வசனங்களில், தேவன் சாலமோனிடத்தில்," நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள்ளே கொள்ளைநோயை அனுப்பும்போது, என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்". இங்கே,

தேவன் மக்களை தம்மிடம் திருப்பவும், அவர்களுக்குள் மனந்திரும்புதல் உண்டாகவும், அவர்கள் பரலோக தேவனுடைய பிள்ளைகளாய் மாறவேண்டும் என்ற வாஞ்சை பிறப்பிக்கவும் தேவன் பேரழிவையை பயன்ப்டுத்துவதை பார்க்கிறோம்.

புதிய ஏற்பாட்டில் இயேசுவானவர் "சகல வியாதிகளையும், சகல் நோய்களையும்" (மத்தேயு 9:35, 10:1, மாற்கு 3:10) தான் சென்ற இடங்களில் காணப்பட்ட எல்லாவித வாதைகளையும் குணப்படுத்தினார் என்று பார்க்கிறோம். எப்படி தேவன் வாதைகள் மற்றும் வியாதிகளின் மூலம் இஸ்ரவேலர்களுக்கு தம்முடைய வல்லமையை அனுப்பினாரோ, இயேசுவானவர் அதே வல்லமையை வெளிப்படுத்தி தான் தேவனுடைய குமாரன் என்பதை நிரூபித்தார். அவருடைய சீடர்களும் தங்கள் ஊழியத்தை நிரூபித்திட அவர்களுக்கும் இந்த வல்ல்லமையை தந்தருளினார் (லூக்கா 9:1). இன்றும் தேவன் தம்முடைய தீர்மானத்திற்காக வியாதிகளை அனுமதிக்கிறார் என்றாலும், சில சமயங்களில், வியாதிகள், ஏன் உலகளாவிய தொற்றுநோய்களும் கூட விழுந்துபோன உலகத்தின் பின்விளைவேயாகும். ஒரு உலகளாவிய் தொற்றுநோய் உண்டானதற்கு ஒரு குறிப்பிட்ட ஆவிக்குரிய காரணமுண்டோ என்று நிதானிக்க நமக்கு ஒரு வழியுமில்லை. ஆனால் தேவன் சகலத்தையும், சர்வத்தையும் ஆளுகிறார் (ரோமர் 11:36) என்பதையும் அவரை அறிந்து அவரில் அன்புகூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே நடக்கும் (ரோமர் 8:28) என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

எபோலா மற்றும் கொரோனா வைரஸின் பரவுதல் கடைசிகாலத்தில் வரப்போகும் உலகளாவிய தொற்றுநோய்களின் ஓர் முன்ருசியே. கடைசி நாட்களில் (லூக்கா 21:11)வரப்போகும் வாதைகளை பற்றி இயேசு குறிப்பிட்டுள்ளார். வெளிப்படுத்தின விசேஷத்தில் காணப்படும் இரண்டு சாட்சிகளுக்கு "தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச்சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு (வெளி 11:6)" என்று வாசிக்கிறோம். அதேபோல் ஏழு தூதர்களுக்கும், வெளிப்படுத்தின் விசேஷம் 16-ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ளதுபோல் கடைசியும் தொடர்ந்தேச்சையுமான தீவிரமான நியாயத்தீர்ப்புகளை கட்டவிழ்த்துவிடுவார்கள்.

உலகளாவிய கொள்ளைநோய்களின் தோற்றம் பாவத்தின் மேல் தேவன் வெளிப்படுத்தும் குறிப்பிட்ட நியாயத்தீர்ப்பாக இருக்கலாம, இல்லாமலும் இருக்கலாம். விழுந்துபோன் உலகத்தில் வாழ்வதினால் விளையும் ஒரு சம்பவமாகவும் இருக்கலாம். இயேசுவின் இரண்டாம வருகையின் நேரத்தை ஒருவரும் அறியாதத்தால், இந்த உலகளாவிய தொற்றுநோய்கள் நாம் கடைசிகாலத்தில் வாழ்கிறோம் என்பதன் நிரூபணம் என்பதை நாம கவனத்துடன் சொல்லவேண்டும். இயேசு கிறிஸ்துவை இரட்சகராக அறியாதவர்களுக்கு, இந்த வியாதிகள் எல்லாம் பூமியில் மனிதனின் வாழ்க்கை நிலையற்றது என்பதையும், எந்த சமயத்திலும் அது முடிவுக்கு வரலாம் என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது. உலகளாவிய தொற்றுநோய்கள் எவ்வளவு மோசமானதோ, அதைவிட பலமடங்கு கொடுமையானது நரகம். ஆனால் ஒரு கிறிஸ்தவனுக்கோ, சிலுவையில் சிந்தப்பட்ட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் இரட்சிப்பின் நிச்சயமும் நித்தியத்தை குறித்த நம்பிக்கையும் உண்டாகியுள்ளது (ஏசாயா 53:5, 2 கொரிந்தியர் 5:21, எபிரேயர் 9:28)

இத்தகையை உலகளாவிய தொற்றுநோய்களுக்கு கிறிஸ்தவர்களின் பிரதிபலிப்பு எப்படி இருக்கவேண்டும்? முதலாவது, பதட்டப்படவேண்டாம். "பயப்ப்டாதே" அல்லது அதற்கு இணையான பதங்களை வேதாகமம் 300 தடவை சொல்லுகிறது. இரண்டாவது, ஞானமாய செயல்படுங்கள். வியாதிப்பரவக்கூடிய நிலையிலிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தின்ரையும் தற்காத்துக்கொள்ள போதைய நடவடிக்கைகள் எடுக்கவும். மூன்று, ஊழிய வாய்ப்புகளை நாடுங்கள். பலசமயங்களில் மக்களுக்கு தங்கள் வாழ்க்கையை குறித்த பயம் உண்டாகும் சமயத்திலேதான், அவர்கள் நித்தியத்தை குறித்த உரையாடலுக்குள் ஈடுஅப்ட விரும்புவார்கள். சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளும் உங்கள் முயற்சியில் தைரியத்தோடும் மனதுருக்கத்தோடும் "அன்புடன் சத்தியத்தை கைகொண்டு பேசுங்கள் (எபேசியர் 4:15)

English



முகப்பு பக்கம்

உலகளாவிய தொற்றுநோய்களை குறித்து வேதம் என்ன சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries