settings icon
share icon
கேள்வி

அனைத்து இறைக் கொள்கை என்றால் என்ன?

பதில்


தேவன் எல்லாம் மற்றும் அனைவருமே, அதாவது எல்லோரும் எல்லாமே தேவன் தான் என்பதுதான் அனைத்து இறைக் கொள்கையாகும். அனைத்து இறைக் கொள்கை பலதெய்வம் கொள்கையைப் (பல தேவர்களின் நம்பிக்கை) போன்றது, ஆனால் பலதெய்வத்திற்கு அப்பாற்பட்டு எல்லாம் தேவன் என்று கற்பிக்கிறது. மரம் ஒரு தேவன், பாறை ஒரு தேவன், விலங்கு ஒரு தேவன், வானம் ஒரு தேவன், சூரியன் தேவன், நீங்கள் தேவன், முதலியன இப்படி எல்லாமே தேவன் என்கிறது இந்த கொள்கை. அனைத்து இறைக் கொள்கை என்பது பல வழிபாட்டு முறைகள் மற்றும் தவறான மதங்களுக்குப் பின்னால் உள்ள கருத்தாகும் (உதாரணமாக, இந்து மதம் மற்றும் புத்தமதம் ஒரு அளவிற்கு, பல்வேறு ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு மரபு வழிபாட்டு முறைகள் மற்றும் “தாய் இயல்பு” வழிபாட்டாளர்கள் ஆகும்).

வேதாகமம் அனைத்து இறைக் கொள்கையைக் கற்பிக்கிறதா? இல்லை, அது கற்பிக்கவில்லை. தேவனுடைய சர்வவியாபியின் கோட்பாடுதான் அனைத்து இறைக் கொள்கை என்று பலர் குழப்புகிறார்கள். சங்கீதம் 139:7-8 அறிவிக்கிறது, “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.” தேவன் சர்வவியாபி என்றால் அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பதாகும். தேவன் இல்லாத ஒரு இடம் இந்த பிரபஞ்சத்தில் இல்லை. இது அனைத்து இறைக் கொள்கையைப் போன்றதல்ல. தேவன் எல்லா இடங்களிலும் இருக்கிறார், ஆனால் அவர் எல்லாம் இல்லை. ஆம், தேவன் ஒரு மரத்தினுள் மற்றும் ஒரு நபருக்குள் “இருக்கிறார்”, ஆனால் அது அந்த மரத்தையோ அல்லது நபரையோ தேவனாக ஆக்குவதில்லை. அனைத்து இறைக் கொள்கை என்பது வேதாகம நம்பிக்கை அல்ல.

அனைத்து இறைக் கொள்கைக்கு எதிரான தெளிவான வேதாகம வாதங்கள் யாதெனில், உருவ வழிபாட்டிற்கு எதிரான எண்ணற்ற கட்டளைகளாகும். சிலைகள், தேவதூதர்கள், வான்வெளிப் பொருட்கள், இயற்கையில் உள்ள பொருட்கள் போன்றவற்றை வணங்குவதை வேதாகமம் தடைசெய்கிறது. அனைத்து இறைக் கொள்கை உண்மையாக இருந்தால், ஒரு பாறையையோ அல்லது மிருகத்தையோ வணங்குவது தேவனை ஒரு கண்ணுக்கு தெரியாத மற்றும் ஆவிக்குரிய ஜீவனாக வணங்குவதைப் போலவே செல்லுபடியாகும். உருவ வழிபாட்டை வேதாகமத்தின் தெளிவான மற்றும் நிலையான கண்டனம் என்பது அனைத்து இறைக் கொள்கைக்கு எதிரான ஒரு உறுதியான வாதமாகும்.

English



முகப்பு பக்கம்

அனைத்து இறைக் கொள்கை என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries