கேள்வி
பெற்றோரின் பாவங்களுக்காக அவர்களுடைய குழந்தைகள் தண்டிக்கப்படுகிறார்களா?
பதில்
பெற்றோர்கள் செய்த பாவங்களுக்காக குழந்தைகள் தண்டிக்கப்படுவதில்லை; அதுபோலவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாவங்களுக்காக தண்டிக்கப்படுவதில்லை. நம்முடைய ஒவ்வொரு பாவத்திற்கும் நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளாகிறோம். எசேக்கியேல் 18:20 நமக்கு சொல்கிறது, “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை.” ஒருவரின் பாவங்களுக்கான தண்டனை அந்த நபரால் மட்டுமே ஏற்கப்படுகிறது என்பதை இந்த வசனம் தெளிவாகக் காட்டுகிறது.
பாவத்திற்கான ஒரு தலைமுறையின் தண்டனையை மற்றொரு தலைமுறை ஏற்பதுபோல வேதாகமம் கற்பிக்கிறது என்று சிலர் நம்புவதற்கு ஒரு வசனம் உள்ளது, ஆனால் அந்த விளக்கம் தவறானது ஆகும். கேள்விக்குரிய அந்த வசனம் யாத்திராகமம் 20:5, இது விக்கிரகங்களைக் குறித்துக் குறிப்பிடுகிறது, “நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.” இந்த வசனம் எவ்வளவு தண்டனை என்பதயல்ல, மாறாக எவ்வளவு பின்விளைவுகள் என்பதைப்பற்றி பேசுகிறது. ஒரு மனிதனுடைய பாவங்களின் விளைவுகளை தலைமுறைகளுக்குப் பிறகு உணர முடியும் என்று அது கூறுகிறது. தேவன் இஸ்ரவேலர்களிடம் தங்கள் பிள்ளைகள் பெற்றோரின் தலைமுறையின் தாக்கத்தை அவர்கள் கீழ்ப்படியாமை மற்றும் தேவனுடைய வெறுப்பின் இயல்பான விளைவாக உணருவார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அத்தகைய சூழலில் வளர்க்கப்பட்ட குழந்தைகள் இதேபோன்ற விக்கிரகாராதனையை கடைப்பிடிப்பார்கள், இதனால் நிறுவப்பட்ட கீழ்ப்படியாமையின் வடிவத்தில் அவர்கள் விழுவார்கள். கீழ்ப்படியாத தலைமுறையின் விளைவு துன்மார்க்கத்தை மிகவும் ஆழமாக வளர்ப்பது, அது பல தலைமுறைகளை தலைகீழாக மாற எடுத்தது. நம்முடைய பெற்றோரின் பாவங்களுக்கு தேவன் நம்மைப் பொறுப்பேற்க விடமாட்டார், ஆனால் யாத்திராகமம் 20:5 எடுத்துக்காட்டுவது போல, சில சமயங்களில் நம் பெற்றோர் செய்த பாவங்களின் விளைவாக நாம் அவதிப்படுகிறோம்.
எசேக்கியேல் 18:20 காட்டுவது போல், நாம் ஒவ்வொருவரும் அவரவர் பாவங்களுக்கு பொறுப்பாளிகள், அவரவர்களுக்கான தண்டனையை அவரவர் ஏற்க வேண்டும். நம் குற்றத்தை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்ள முடியாது, அதற்கு மற்றொருவர் பொறுப்பேற்கவும் முடியாது. எவ்வாறாயினும், இந்த விதிக்கு ஒரு விதிவிலக்கு உள்ளது, இது எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். ஒரு மனிதன் மற்றவர்களின் பாவங்களைத் தாங்கி அவர்களுக்கான தண்டனையைச் செலுத்தினார், அதனால் பாவிகள் தேவனின் பார்வையில் முற்றிலும் நீதியுள்ளவர்களாகவும் பரிசுத்தமுள்ளவர்களாகவும் மாற முடிந்தது. அந்த மனிதன் தான் இயேசு கிறிஸ்து. நம்முடைய பாவத்திற்காக அவருடைய பரிபூரணத்தை பரிமாறிக் கொள்ள தேவன் இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” (2 கொரிந்தியர் 5:21). விசுவாசத்தினால் தன்னிடம் வருபவர்களின் பாவத்திற்கான தண்டனையை இயேசு கிறிஸ்து எடுத்துப்போடுகிறார்.
English
பெற்றோரின் பாவங்களுக்காக அவர்களுடைய குழந்தைகள் தண்டிக்கப்படுகிறார்களா?