கேள்வி
பெடோஃபிலியா (குழந்தைகள் மீதான பாலியல் இச்சை) பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்
வேதாகமத்தில் பெடோஃபிலியா பற்றி நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இந்தப் பாவத்திற்கு நிச்சயமாகப் பொருந்தும் ஏராளமான வேதாகமக் கோட்பாடுகள் உள்ளன. விபச்சாரத்தின் பாவத்தைப் பற்றிய வேதாகமத்தின் கருத்து அத்தகைய ஒரு கோட்பாடு ஆகும். "வேசித்தனம்" என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தை எபிரேயம் மற்றும் கிரேக்கம் இரண்டிலும் ஒரே கருத்தை கொண்டுள்ளது. கிரேக்க வார்த்தை போர்னியா ஆகும், இதிலிருந்து நாம் ஆங்கில வார்த்தைகளான போர்னோ மற்றும் போர்னோகிராஃபி ஆகிய வார்த்தைகளைப் பெறுகிறோம். வேதாகமத்தில் உள்ள வார்த்தை எந்தவொரு கள்ளத்தனமான தகாத பாலியல் செயல்பாட்டையும் குறிக்கிறது, மேலும் இது சிறு குழந்தைகளின் ஆபாசமான அல்லது அநாகரீகமான படங்களை சேகரித்தல் மற்றும் வர்த்தகம் செய்தல் உட்பட ஒரு பெடோஃபைலின் என்னும் அருவருப்பான செயல்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இந்த வகையான ஆபாசத்தைப் பயன்படுத்துபவர்கள் பொதுவாக குழந்தைகளுக்குப் பெரும் தீங்கு விளைவிப்பதன் மூலம் உண்மையில் அதைச் செய்வதில் இருந்து முன்னேறுகிறார்கள். வேசித்தனம் என்பது "மாம்சத்தின் இச்சைகளில்" (கலாத்தியர் 5:16-21) மற்றும் தேவனைத் தவிர ஒரு மனிதனின் இருதயத்திலிருந்து வெளிவரும் தீய காரியங்களில் ஒன்றாகும் (மாற்கு 7:21-23).
பெடோஃபைல்ஸ் "சுபாவ அன்பில்லாதவர்கள்" (ரோமர் 1:31; 2 தீமோத்தேயு 3:2) என்ற பண்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். "சுபாவ அன்பில்லாதவர்கள்" என்ற சொற்றொடர் ஒரு கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, அதாவது "மனிதாபிமானமற்ற, அன்பற்ற மற்றும் சமூகநலனற்ற" என்னும் அர்த்தத்தில் வருகிறது. சுபாவ அன்பில்லாத ஒருவர் சமூக நெறிமுறைக்கு எதிரான வழிகளில் செயல்படுகிறார். இது நிச்சயமாக ஒரு பெடோஃபைலை விவரிக்கும்.
கூடுதலாக, குழந்தைகளைப் பற்றிய இயேசுவின் வார்த்தைகளில் ஒரு கோட்பாடு காணப்படுகிறது. பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கு குழந்தை போன்ற விசுவாசம் அவசியம் என்று தம் சீடர்களுக்குக் கற்பிக்க இயேசு ஒரு குழந்தையைப் பயன்படுத்தினார். அதே நேரத்தில், பிதா தனது "சிறியர்" அனைவரின் மீதும் அக்கறை கொண்டிருப்பதாக அவர் கூறினார் (மத்தேயு 18:1-14). அந்த வாசகத்தில், “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்” என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு. 18:6, KJV). கிரேக்க மொழியில் இடறலுண்டாக்குதல் என்ற வார்த்தையின் அர்த்தம் “ஒருவரைத் தடுமாறச் செய்தல், தடுமாறுதல் அல்லது முட்டுக்கட்டை போடுதல், அதில் இன்னொருவர் தடுமாறி விழலாம், பாவம் செய்யத் தூண்டுதல் அல்லது ஒருவரை அவர் யாரை நம்பி கீழ்ப்படிய வேண்டும் என்பதை நம்பாமல் விட்டுவிடத் தொடங்குதல்.”
இடறலுண்டாக்குதல் என்ற வார்த்தையின் இந்த வரையறைகள் ஒரு பெடோஃபைலின் செயல்களுக்கு எளிதாகப் பயன்படுத்தப்படலாம். நிச்சயமாக, ஒரு குழந்தைக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற கொள்கையானது, பலவிதமான குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் செயல்களுக்குப் பயன்படுத்தப்படலாம், மேலும் மத்தேயு 18:10 ஒரு குழந்தைக்கு எந்த வகையான தீங்கும் விளைவிக்கும் எவருக்கும் எதிராக உள்ள நிகழ்வை எடுத்துரைக்கிறது.
English
பெடோஃபிலியா (குழந்தைகள் மீதான பாலியல் இச்சை) பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?