கேள்வி
தேவனுடைய ஜனங்கள் என்பவர்கள் யார்?
பதில்
"தேவனுடைய ஜனங்கள்" என்ற சொற்றொடர் எப்போதும் தெளிவான உறவைக் குறிக்கிறது. தேவன் ஆபிராமை (பின்னர் ஆபிரகாம்) ஆதியாகமம் 12 இல் தேவன் அவனுக்குக் காண்பிக்கும் புதிய தேசத்திற்காக தனது தேசத்தை விட்டு வெளியேற அழைத்தார். ஆபிராம் அங்கு இருந்தபோது, ஆதியாகமம் 12:2 இல் தேவன் கூறுகிறார், “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.” இந்த தேசம் இஸ்ரவேல் தேசமாக மாறும், தேவனுடைய ஜனங்களாக நியமிக்கப்பட்ட முதல் குழு.
தேவன் இஸ்ரேவேலிடம் தீர்க்கதரிசியாகிய ஏசாயா மூலம் கூறுகிறார், "நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்” (ஏசாயா 51:16). எசேக்கியேல் 38:14ல் இஸ்ரவேலின் அண்டை தேசமான கோகுக்கு ஒரு தீர்க்கதரிசனத்தில் தேவன் இஸ்ரவேலை தம்முடைய ஜனங்களாக உறுதிப்படுத்துகிறார்.
யூத மேசியாவில் (இயேசு கிறிஸ்து) யூதரல்லாத விசுவாசிகள் தேவனுடைய ஜனங்களாகக் கருதப்படுகிறார்களா? ஆம். இயேசு இஸ்ரவேலரை இரட்சிப்பதற்காக மட்டுமல்ல, எல்லா மனிதகுலத்திற்காகவும் வந்தார் (ரோமர் 1:16, 10:12; கலாத்தியர் 3:28). தேவனுடைய ஜனங்களுடனான உறவு அவருடைய அழைப்பைக் காட்டிலும் மேலானது; அவர்கள் அவரை தங்கள் தேவன் என்றும் அழைக்கிறார்கள். தாவீது, “என் தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடே மனப்பூர்வமாய்க் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய ஜனமும் உமக்கு மனப்பூர்வமாய்க் கொடுக்கிறதைக் கண்டு சந்தோஷித்தேன்” (1 நாளாகமம் 29:17). இங்கே, தேவனுடைய ஜனங்கள் தங்கள் தேசத்தைக் காட்டிலும், தேவனுக்குத் தங்களைக் கொடுக்கத் தயாராக இருப்பதன் மூலம் அடையாளம் காணப்படுகிறார்கள்.
இயேசு கிறிஸ்துவை இரட்சகராகவும் கர்த்தராகவும் ஏற்றுக்கொள்பவர்கள் தேவனுடைய ஜனங்களில் ஒரு பகுதியாக மாறுகிறார்கள். சபைக்குச் செல்வதன் மூலமோ அல்லது நற்கிரியைகள் செய்வதன் மூலமாகவோ உறவு வருவதில்லை. தேவனை மட்டும் பின்பற்றுவது திட்டமிட்ட தெரிந்துகொள்ளுதல். அதனால்தான் 2 கொரிந்தியர் 6:16 மற்றும் மாற்கு 8:38 ஆகிய இரண்டும் ஒரு தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. தேவனைத் தழுவுவதற்கு நாம் அந்தத் தேர்வைச் செய்யும்போது, அவர் நம்மையும் தழுவுகிறார். அப்படியானால் நாம் உண்மையிலேயே அவருடைய ஜனங்கள்.
English
தேவனுடைய ஜனங்கள் என்பவர்கள் யார்?