settings icon
share icon
கேள்வி

ஒரு கிறிஸ்தவருக்கு பிளாஸ்டிக் / அழகுபடுத்த அறுவை சிகிச்சை செய்வது பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்


ஒரு கிறிஸ்தவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை அல்லது அழகுபடுத்த அறுவை சிகிச்சை செய்யப்படுவதை குறித்து வேதாகமம் குறிப்பிட்டு எதுவும் குறிப்பிடவில்லை. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை என்பது தவறானது என்பதைக் குறிக்க வேதாகமத்தில் குறிப்புகள் எதுவும் இல்லை. இருப்பினும், இந்த நடைமுறைகளுக்கு உட்படுத்தலாமா வேண்டாமா என்பதை தீர்மானிப்பதற்கு முன் ஒருவர் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. ஒருவரின் உடலை மாற்றுவது இயற்கைக்கு மாறானது, மேலும் உடல் மற்றும் உளவியல் ரீதியான பக்கவிளைவுகளின் அபாயங்கள் எப்போதும் உள்ளன. அறுவை சிகிச்சையில் சம்பந்தப்பட்ட அனைத்து மாற்று, அபாயங்கள் மற்றும் பக்கவிளைவுகளையும் முதலில் முழுமையாக ஆராயாமல் யாரும் தன்னை "கத்தியின் கீழ்" வைக்க அனுமதிக்கக்கூடாது. ஒரு நபர் அறுவை சிகிச்சையை விரும்புவதற்கான தனது உந்துதலையும் முழுமையாக அடையாளம் காண வேண்டும். உடல் ரீதியான குறைபாடுகள் உள்ள பலருக்கு-மரபணு ரீதியாக-சமூகத்தில் பொருந்துவது மற்றும் “இயல்பானது” என்று உணர விரும்புவது இயற்கையானதுதான். சிறிய அசாதாரண நிகழ்வுகளும் உள்ளன, அவை யாரோ ஒருவர் தன்னைப் பற்றி மிகவும் சங்கடமாக உணரக்கூடும், அதாவது மிகப் பெரிய அல்லது சரியான வடிவமற்ற மூக்கு. ஆனால் பல, அதிகமாக இல்லாவிட்டால், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் உடல் ரீதியான வழிகளில் உணர்ச்சிவசப்பட்ட சந்திப்புகளைச் சந்திப்பதற்கான முயற்சிகள், கவனத்தை ஈர்ப்பது அல்லது மற்றவர்களிடமிருந்து ஒப்புதல் பெறுவது போன்றவைகளுக்காக செய்யப்படுகின்றன.

மார்பகத்தை பெரிதாக்குதல்/தூக்கலாக அமைத்தல், லிபோசக்ஷன் (உடல் கொழுப்பை நீக்குதல்), ஃபேஸ்லிஃப்ட்ஸ், கண் இமை தூக்குதல், பிட்டம் மற்றும் பிற உடல் பாகங்களை மாற்றியமைத்தல், கால் நரம்பு சிகிச்சைகள், போடோக்ஸ் / கொழுப்பு ஊசி மற்றும் மூக்கு மற்றும் முகத்தை மாற்றியமைத்தல் ஆகியவை பொதுவாக செய்யப்படும் அழகுபடுத்தும் நடைமுறைகளில் அடங்கும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் தங்களை இந்த வகையான நடைமுறைகளுக்கு உட்படுத்திக்கொண்டு, பணத்தை வாரியிறைத்து, நேரத்தையும் வசதியையும் தியாகம் செய்கிறார்கள். மாயையான நோக்கம் ஒரு நபரை அறுவை சிகிச்சைக்கு தூண்டும்போது, அவன் / அவள் அவனுடைய / அவளுடைய சொந்த விக்கிரகமாக மாறிவிடுகிறார்கள். வீணாகவோ, கர்வமாகவோ இருக்கக்கூடாது என்று பைபிள் எச்சரிக்கிறது (பிலிப்பியர் 2:3-4), நாம் பார்க்கும் விதத்தில்/கோணத்தில் நம்மீது கவனத்தை ஈர்க்க வேண்டாம் (1 தீமோத்தேயு 2:9). மற்றொரு கவலை செலவு. இது ஒரு முக்கிய கருத்தாகும், ஏனென்றால் பெரும்பாலான மக்களுக்கு குடும்பங்கள் உள்ளன, மேலும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கான செலவு ஒருபோதும் குடும்பத்தின் தேவைகளுக்கு முன் வரக்கூடாது. தேவன் நமக்கு ஒப்படைத்த பணத்தை நாம் புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் வேதாகமம் சொல்லுகிறது (நீதிமொழிகள் 11:24-25; லூக்கா 16:10-12).

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கு முடிவெடுப்பதற்கு முன்பாக செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம், இந்த விவகாரம் குறித்து தேவனிடத்தில் ஆலோசனைக் கேட்கவேண்டும். நம்மிடம் இருக்கும் ஒவ்வொரு கவலையையும் அக்கறையையும் தேவன் நன்கு கவனித்துக்கொண்டிருக்கிறார் என்று வேதாகமம் சொல்லுகிறது, எனவே நம்முடைய பிரச்சினைகளை அவரிடம் எடுத்துச் செல்ல வேண்டும் (1 பேதுரு 5:7). பரிசுத்த ஆவியின் ஞானம் மற்றும் வழிகாட்டுதலின் மூலமாகவும், தேவனுடைய வார்த்தையின் மூலமாகவும், அவரைப் பிரியப்படுத்தும் மற்றும் கனப்படுத்தும் முடிவுகளை எடுக்கும் திறன் நமக்கு இருக்கிறது. “சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்” (நீதிமொழிகள் 31:30). மிகவும் திறமையான அறுவைசிகிச்சை நிபுணரால் கூட காலத்தின் கைகளைத் தடுத்து நிறுத்த முடியாது, மேலும் அனைத்து அழகுக்கான அறுவை சிகிச்சைகளும் இறுதியில் ஒரே மாதிரியான முடிவைக் கொண்டிருக்கும்-அது பின்பு வயதானவையாக மாறும். உயர்த்தப்பட்ட உடல் பாகங்கள் மீண்டும் தொய்வுறும், மேலும் அழகு ரீதியாக மாற்றப்பட்ட முக அம்சங்கள் இறுதியில் சுருக்கப்படும். அடியில் இருக்கும் உங்கள் உள்ளான நபரை அழகுபடுத்துவதில் பணியாற்றுவது மிகவும் சிறந்தது, "அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது" (1 பேதுரு 3:4).

English



முகப்பு பக்கம்

ஒரு கிறிஸ்தவருக்கு பிளாஸ்டிக் / அழகுபடுத்த அறுவை சிகிச்சை செய்வது பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries