கேள்வி
நேர்மறை சிந்தனைக்கு ஏதேனும் வல்லமை உள்ளதா?
பதில்
நேர்மறை சிந்தனைக்கான ஒரு வரையறை, "முன்னேற்றம் தேவைப்படும் பகுதிகளை அடையாளம் காண்பதற்காக சிந்தனை செயல்முறைகளை மறுபரிசீலனை செய்யும் செயல், பின்னர் அந்த எண்ணங்களை நேர்மறையான, இலக்கு சார்ந்த வழியில் மாற்றுவதற்கு பொருத்தமான கருவிகளைப் பயன்படுத்துதல் ஆகும்." நிச்சயமாக, நேர்மறையாக நினைப்பது தவறல்ல. நேர்மறை சிந்தனையில் ஒருவித இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி இருப்பதாக நம்புவதில் "நேர்மறை சிந்தனை" தொடர்புடைய பிரச்சனையாக இருக்கிறது. பரவலான தவறான கோட்பாடுகள் மற்றும் இறையியலின் இந்த யுகத்தில், நேர்மறையான சிந்தனையின் சக்தி மிகவும் பிரபலமான பிழைகளில் ஒன்றாக உள்ளது. பொய்யான கோட்பாடுகள் உண்மையின் முகமூடித்தனமான மனிதக் கருத்துக்கள் என்பதில் ஒத்தவை. அத்தகைய மனித எண்ணங்களில் ஒன்று நேர்மறை சிந்தனையின் சக்தி.
நேர்மறை சிந்தனையின் சக்தி பற்றிய கருத்தை டாக்டர் நார்மன் வின்சென்ட் பீலே தனது தி பவர் ஆஃப் பாசிட்டிவ் திங்கிங் (The Power of Positive Thinking; 1952) என்ற புத்தகத்தில் பிரபலப்படுத்தினார். பீலேவின் கூற்றுப்படி, ஜனங்கள் எதிர்கால விளைவுகளையும் நிகழ்வுகளையும் "சிந்திப்பதன் மூலம்" மாற்ற முடியும் என்பதாகும். நேர்மறை சிந்தனையின் சக்தி தன்னம்பிக்கையையும் விசுவாசத்தையும் ஊக்குவிக்கிறது; இது இயற்கையாகவே "ஈர்ப்பு விதியின்" தவறான நம்பிக்கைக்கு வழிவகுக்கிறது, பீலே எழுதியது போல், "நீங்கள் சிறந்ததை எதிர்பார்க்கும் போது, உங்கள் மனதில் ஒரு காந்த சக்தியை வெளியிடுகிறீர்கள், இது ஈர்ப்பு விதியால் உங்களுக்கு சிறந்ததைக் கொண்டுவருகிறது." நிச்சயமாக, ஒருவரின் மனதில் நல்ல விஷயங்களை ஒருவரின் சுற்றுப்பாதையில் இழுக்கும் ஒரு "காந்த சக்தி" வெளிப்படுவதைப் பற்றி வேதாகமத்தில் எதுவும் இல்லை. உண்மையில், அத்தகைய கருத்தைப் பற்றி வேதாகமத்திற்குப் புறம்பான பல கருத்துக்கள் உள்ளன.
தி பவர் ஆஃப் பாசிடிவ் திங்கிங் புத்தகத்தில், நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் தவறான பதிப்பை முன்வைக்க, பீலே தவறான மதக் கருத்துகள் மற்றும் அகநிலை உளவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தினார். அவரது கோட்பாடு "சுய உதவி" இயக்கத்தின் ஒரு பகுதியாகும், இதன் மூலம் ஒரு நபர் தனது சொந்த யதார்த்தத்தை மனித முயற்சி, சரியான மன உருவங்கள் மற்றும் மன உறுதியுடன் உருவாக்க முயற்சிக்கிறார். ஆனால் யதார்த்தம் சத்தியம், சத்தியம் வேதாகமத்தில் காணப்படுகிறது. ஜனங்கள் தங்கள் சொந்த யதார்த்தத்தை கற்பனை செய்து அல்லது இருப்பதை நினைத்து உருவாக்க முடியாது. பீலேயின் கோட்பாடு பிழையானது, ஏனெனில் அவர் அதை சத்தியத்தை அடிப்படையாகக் கொள்ளவில்லை.
நேர்மறை சிந்தனையின் சக்தியை ஆதரிப்பவர்கள் தங்கள் ஆராய்ச்சி கோட்பாட்டின் செல்லுபடியை ஆதரிக்கிறது என்று கூறுகின்றனர். இருப்பினும், தரவுகளின் தொகுப்பு பரவலாக விவாதிக்கப்படுகிறது. சில கண்டுபிடிப்புகள் நேர்மறையான கண்ணோட்டத்திற்கும் செயல்திறனுக்கும் இடையே ஒரு நேர்மறையான தொடர்பு இருப்பதாகக் கூறுகின்றன, ஆனால் இது ஒரு முடிவை உருவாக்கும் நேர்மறையான எண்ணங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. அவநம்பிக்கையான கண்ணோட்டங்களைக் கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது நேர்மறையான அணுகுமுறைகளைக் கொண்டவர்கள் அதிக சுயமரியாதை மற்றும் சிறந்த அனுபவங்களைப் பெறுவார்கள் என்று ஆராய்ச்சி கூறுகிறது. மறுபுறம், எண்ணங்கள் விளைவுகளை கட்டுப்படுத்த முடியும் என்ற கருத்தை ஆதரிக்க எந்த அதிகாரப்பூர்வமான ஆதாரமும் இல்லை. நேர்மறை சிந்தனைக்கு எதிர்காலத்தை மாற்றும் ஆற்றல் இல்லை.
நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது (யாக்கோபு 1:17), நேர்மறை சிந்தனையின் சக்தியினால் அல்ல. எல்லாவற்றிலும் சிறந்த வரம் நமக்கு உள்ளில் வசிக்கும் பரிசுத்த ஆவியானவர் (லூக்கா 11:13). மனிதன் சுயமாக "நல்லவனாக" இருக்க முடியாது என்று வேதாகமம் கூறுகிறது (ஏசாயா 64:6). நம்மில் உள்ள ஒரே நன்மை இயேசு கிறிஸ்துவின் நீதியை நம் கணக்கில் பயன்படுத்துவதிலிருந்து வருகிறது (எபேசியர் 2:1-5; பிலிப்பியர் 3:9). பரிசுத்த ஆவியானவர் நம்மில் வசித்தவுடன், அவர் பரிசுத்தமாக்குதல் செயல்முறையைத் தொடங்குகிறார், இதில் பரிசுத்த ஆவியின் மாற்றும் வல்லமை நம்மை இயேசுவைப் போல ஆக்குகிறது.
நம்மை நாமே மேம்படுத்தி, நேர்மறையான மாற்றங்களைச் செய்ய வேண்டுமானால், நேர்மறை சிந்தனையின் சக்தியை விட நம்மிடம் அதிக சக்தி இருக்க வேண்டும். உண்மையான ஆவிக்குரியத் தன்மை எப்போதுமே கிறிஸ்துவுடனான நமது உறவில் தொடங்கி முடிவடையும். ஒருவரின் வாழ்க்கையை மாற்றியமைக்க பரிசுத்த ஆவியானவர் திறவுகோலாக இருக்கிறார், நமது எண்ணங்கள் அல்ல, நமது முயற்சி மட்டுமல்ல. நாம் சுறுசுறுப்பாக ஆவியானவருக்கு அடிபணியும்போது, அவர் நம்மை மாற்றுவார். மனப்-பிதற்றல், போலி-மத புத்தகங்கள் அல்லது நேர்மறையான சிந்தனையின் சுயமாய்-உருவாக்கப்பட்ட சக்தி ஆகியவற்றிலிருந்து உதவியை நாடுவதற்குப் பதிலாக, தேவன் தனது ஆவியின் மூலம் ஏற்கனவே நமக்குக் கொடுத்ததைச் சார்ந்து இருக்க வேண்டும்: “நம்மிடம் கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது” (1 கொரிந்தியர் 2:16).
English
நேர்மறை சிந்தனைக்கு ஏதேனும் வல்லமை உள்ளதா?