settings icon
share icon
கேள்வி

பிதா, குமாரன் அல்லது பரிசுத்த ஆவியானவர் இவர்களில் யாரிடத்தில் நாம் ஜெபிக்க வேண்டும்?

பதில்


எல்லா ஜெபங்களும் நம்முடைய திரியேக தேவனிடத்தில் ஏறெடுக்கப்பட வேண்டும் – பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர். மூவரும் ஒன்றுதான் என்பதால், ஒன்று அல்லது மூன்று பேரிடமும் ஜெபிக்க முடியும் என்று வேதாகமம் கற்பிக்கிறது. பிதாவிடம் நாம் சங்கீதக்காரனுடன் ஜெபிக்கிறோம், “நான் உம்மிடத்தில் விண்ணப்பம்பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்” (சங்கீதம் 5:2). கர்த்தராகிய இயேசுவிடம், பிதாவிடம் அவர்கள் சமமாக இருப்பதால் ஜெபிக்கிறோம். திரித்துவத்தின் ஒரு உறுப்பினரிடம் ஜெபம் செய்வது அனைவருக்கும் ஏறெடுக்கும் ஜெபம் ஆகும். ஸ்தேவான் இரத்த சாட்சியாக இருந்தபோது, “கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில்” (அப்போஸ்தலர் 7:59) என்று வாசிக்கிறோம். நாம் கிறிஸ்துவின் பெயரால் ஜெபிக்க வேண்டும். பவுல் எப்பொழுதும் எபேசிய விசுவாசிகளுக்கு “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,’ அறிவுறுத்தினார் (எபேசியர் 5:20). தம்முடைய சீஷர்கள் தம்முடைய நாமத்தினாலே அவருடைய சித்தத்தின்படி அர்த்தம் கேட்பது வழங்கப்படும் என்று இயேசு உறுதியளித்தார் (யோவான் 15:16; 16:23). இதேபோல், பரிசுத்த ஆவியானவரிடமும் அவருடைய சக்தியிலும் ஜெபிக்கும்படி சொல்லப்படுகிறோம். எப்படி அல்லது எதை கேட்பது என்று நமக்குத் தெரியாவிட்டாலும், ஜெபிக்க ஆவியானவர் நமக்கு உதவுகிறார் (ரோமர் 8:26; யூதா 20). ஜெபத்தில் திரித்துவத்தின் பங்கைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த வழி என்னவென்றால், பரிசுத்த ஆவியின் வல்லமையால் நாம் பிதாவிடம், (அல்லது குமாரனின் பெயரால்) ஜெபிக்கிறோம். மூவரும் விசுவாசியின் ஜெபத்தில் தீவிரமாக பங்கேற்பாளர்களாக இருக்கிறார்கள்.

நாம் யாரிடம் ஜெபிக்கக்கூடாது என்பதும் முக்கியமானது. சில கிறிஸ்தவமல்லாத மதங்கள் தங்கள் ஆதரவாளர்களாக பிற மத தெய்வங்கள், இறந்த உறவினர்கள், புனிதர்கள் மற்றும் ஆவிகள் ஆகியோரிடம் ஜெபிக்க ஊக்குவிக்கின்றன. ரோமன் கத்தோலிக்கர்கள் மரியாளிடமும் பல்வேறு புனிதர்களிடமும் ஜெபங்களை ஏறெடுக்க/ஜெபிக்க கற்றுக்கொடுக்கப்படுகிறார்கள். இத்தகைய ஜெபங்கள் வேதப்பூர்வமானவை அல்ல, இது உண்மையில், நம்முடைய பரலோகப் பிதாவை அவமதிப்பதாகும். ஏன் என்பதைப் புரிந்து கொள்ள, ஜெபத்தின் தன்மையை மட்டுமே நாம் பார்க்க வேண்டும். ஜெபத்தில் பல கூறுகள் உள்ளன, அவற்றில் இரண்டை நாம் பார்த்தால்-துதிகளும் மற்றும் நன்றிகளும் – ஜெபம் என்பது அதன் முக்கிய அம்சமான வழிபாடு என்பதைக் காணலாம். நாம் தேவனைப் புகழ்ந்து பேசும்போது, அவருடைய பண்புகளுக்காகவும், நம் வாழ்வில் அவர் செய்த நன்மைகளுக்காகவும் அவரை வணங்குகிறோம். நாம் நன்றி செலுத்தும் ஜெபங்களை வழங்கும்போது, அவருடைய நன்மை, இரக்கம் மற்றும் அன்பான தயவை நமக்கு வணங்குகிறோம். வழிபாடு தேவனை மகிமைப்படுத்துகிறது, மகிமைப்படுத்த தகுதியானவர் தேவன் ஒருவர் மட்டும்தான். தேவனைத் தவிர வேறு யாரிடமும் ஜெபிப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அவர் தம்முடைய மகிமையை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார். உண்மையில், தேவனைத் தவிர வேறு யாரிடமோ அல்லது வேறு எதையோ ஜெபிப்பது விக்கிரகாராதனைக்கு சமமாகும். “நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்” (ஏசாயா 42:8).

ஜெபத்தின் பிற கூறுகளான மனந்திரும்புதல், பாவத்தை அறிக்கை செய்தல் மற்றும் விண்ணப்பத்தை ஏறெடுத்தல் ஆகியவை ஆராதனையின் வடிவங்களாகும். தேவன் மன்னிக்கும் அன்பான தேவன் என்பதை அறிந்து நாம் மனந்திரும்புகிறோம், சிலுவையில் தன் குமாரனின் பலியில் அவர் மன்னிப்புக்கான வழியை வழங்கியுள்ளார். நாம் நம்முடைய பாவங்களை ஒப்புக்கொள்கிறோம், ஏனென்றால் “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1:9), அதற்காக அவரை ஆராதிக்கிறோம். நாம் நம்முடைய வேண்டுகோள்களுடனும் பரிந்துரைகளுடனும் அவரிடம் வருகிறோம், ஏனென்றால் அவர் நம்மை நேசிக்கிறார், நம் விண்ணப்பங்களைக் கேட்கிறார் என்று நமக்குத் தெரியும், மேலும் கேட்கவும் பதிலளிக்கவும் தயாராக இருப்பதில் அவருடைய இரக்கம் மற்றும் தயவுக்காக அவரை வணங்குகிறோம். இதையெல்லாம் நாம் கருத்தில் கொள்ளும்போது, நம்முடைய திரியேக தேவனைத் தவிர வேறொருவரிடம் ஜெபிப்பது குறித்து சிந்திக்க முடியாதது, ஏனென்றால் ஜெபம் ஒரு ஆராதனை வடிவமாகும், மேலும் ஆராதனை தேவன் ஒருவருக்கு தேவனுக்கு மட்டுமே உரியதாகும். நாம் யாரிடம் ஜெபிக்க வேண்டும்? பதில் தேவனிடத்தில். திரித்துவத்தின் எந்த நபரிடம் நாம் ஜெபிக்கிறோம் என்பதை விட தேவனிடத்தில், தேவனிடம் மட்டுமே ஜெபிப்பது என்பது மிக முக்கியமானது.

English



முகப்பு பக்கம்

பிதா, குமாரன் அல்லது பரிசுத்த ஆவியானவர் இவர்களில் யாரிடத்தில் நாம் ஜெபிக்க வேண்டும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries