கேள்வி
தேவனிடத்திலிருந்து எனது ஜெபங்களுக்கு நான் எப்படிப் பதில்களைப் பெற்றுக்கொள்வது?
பதில்
நாம் ஜெபத்தில் கேட்டுக்கொள்வதை தேவன் தருவது தான் தேவன் நம் ஜெபத்தை கேட்டார் என்பதாகுமென்று அநேகர் நம்புகின்றனர். ஒரு ஜெப விண்ணப்பம் கேட்கப்படவில்லையென்றால், அது “பதில் அளிக்கப்படாத” ஜெபம் என்றும் நம்புகின்றனர். ஆனால், இது ஜெபத்தை குறித்த ஒரு தவறான புரிந்துகொள்ளுதல் ஆகும். தேவனிடம் நாம் ஏறெடுக்கும் எல்லா விண்ணபத்திற்கும் அவர் பதில் அளிக்கிறார். சில நேரம் அவர் “இல்லை” அல்லது “காத்திரு” என்று பதில் தருகின்றார். அவர் சித்தத்தின்படி கேட்கும்போது நமக்கு பதில் அளிப்பார் என்று தேவன் வாக்குபண்ணியிருக்கிறார். “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்” (1 யோவான் 5:14, 15).
தேவ சித்தத்தின்படி ஜெபிப்பது என்றால் என்ன? தேவ சித்தத்தின் படி ஜெபிப்பது என்பது அவரை மகிமைபடுத்தும் மற்றும் கனப்படுத்தும் காரியங்களுக்காக ஜெபிப்பது / அல்லது தேவ சித்தம் இன்னதென்று வேதாகமம் குறிப்பிடுகின்ற அந்த காரியங்களுக்காக ஜெபிப்பதாகும். நாம் தேவனுக்கு மகிமையைக் கொண்டுவராத காரியங்களுக்காக அல்லது நமது வாழ்க்கையில் தேவனின் சித்தமில்லாத காரியங்களுக்காக ஜெபித்தால், தேவன் அந்த ஜெபத்திற்கு பதில் தரமாட்டார். தேவனுடைய சித்தம் என்ன என்பதை நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும்? நாம் எதை கேட்கவேண்டும் என்கிற ஞானத்தை அவர் தருவார் என்று தேவன் வாக்குப்பண்ணியிருக்கிறார். யாக்கோபு 1:5 சொல்லுகிறது, “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்”. நமக்கு தேவனின் சித்தம் என்ன என்பதை தெரிவிக்கிற 1 தெசலோனிக்கெயர் 5:12-24லிருந்து தொடங்குவது சிறந்த இடமாக இருக்கும். நம்முடைய வாழ்வில் தேவனுடைய சித்தமாக இருக்கிற அநேக காரியங்களை இது தெரிவிக்கிறது. நாம் எந்த அளவிற்கு வேதாகமத்தைப் புரிந்து கொள்கிறோமோ, அந்த அளவிற்க்கு நாம் தேவனிடம் எதை கேட்க வேண்டும் என்றும் புரிந்துகொள்கிறோம் (யோவான் 15:7). நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று அறிந்து ஜெபிக்கும்போது, நமது ஜெபங்களுக்கு பெரும்பாலும் தேவன் “ஆம்” என்றே பதிலையே அளிப்பார்.
English
தேவனிடத்திலிருந்து எனது ஜெபங்களுக்கு நான் எப்படிப் பதில்களைப் பெற்றுக்கொள்வது?