கேள்வி
ஜெப வீரன் என்றால் என்ன?
பதில்
"ஜெப வீரன்" என்ற சொற்றொடர் வேதத்தில் காணப்படவில்லை என்றாலும், ஒரு ஜெப வீரன் பொதுவாக ஒரு கிறிஸ்தவனாகக் கருதப்படுகிறார், அவர் வேதத்தில் கற்பிக்கப்பட்ட ஜெபிக்கும் விதத்தில் மற்றவர்களுக்காக தொடர்ந்து மற்றும் திறம்பட ஜெபிப்பார். எனவே, ஜெப வீரர்கள் பிதாவாகிய தேவனிடம் (மத்தேயு 6:9) பரிசுத்த ஆவியானவரின் வல்லமையிலும் (எபேசியர் 3:16; யூதா 1:20) மற்றும் இயேசுவின் நாமத்திலும் (யோவான் 14:13) ஜெபிக்கிறார்கள். ஜெபத்தில் ஒரு போர்வீரனாக இருப்பதென்றால், ஆவிக்குரிய போரில் ஈடுபடுவதும், தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தை அணிந்துகொண்டு விசுவாசத்தின் நல்ல போராட்டத்தில் ஈடுபடுவதும், " சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணுவதாகும்" (எபேசியர் 6: 10-18).
எல்லா கிறிஸ்தவர்களும் ஜெப வீரர்களாக இருக்க வேண்டும் என்றாலும், ஜெபிக்க ஒரு விசேஷமான மற்றும் தனித்துவமான திறனைக் கொண்டிருப்பதாக உணரும் சிலர் இருக்கிறார்கள், மேலும் தங்கள் சிறப்பு ஊழியமாக ஜெபிக்க வேண்டும் என்பதற்காக தேவனால் அழைக்கப்பட்டுள்ளனர். மற்ற கிறிஸ்தவர்களை விட அடிக்கடி, அதிக விடாமுயற்சியுடன் அல்லது அதிக திறம்பட ஜெபிக்க வேண்டிய சிலரை வேதாகமம் ஒருபோதும் குறிப்பிட்டு கூறவில்லை, ஆனால் ஜெபத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக அறியப்பட்ட விடாமுயற்சியுடன் ஜெபிப்பவர்கள் உள்ளனர். "எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்" (1 தீமோத்தேயு 2:1) என்று பவுல் கட்டளையிடுகிறார், மேலும் சிலர் அவ்வாறு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதைக் குறிக்கும் எதையும் அவர் கூறவில்லை. கிறிஸ்துவில் உள்ள அனைத்து விசுவாசிகளுக்கும் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார், அவர் நமது ஜெப விண்ணப்பங்களைத் தொடர்பு கொள்ள உதவுகிறது (ரோமர் 8:26-27). எல்லா விசுவாசிகளும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்க வேண்டும், அதாவது இயேசு கிறிஸ்து நம்முடைய கர்த்தரும் இரட்சகருமானவர், எல்லாவற்றிலும் அவர் நமக்காக பிதாவிடம் பரிந்து பேசுவது உட்பட எல்லாவற்றிலும் நாம் அவரை நம்புகிறோம், மேலும் நாம் வாழ்ந்து ஜெபிக்க வேண்டும். தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப. இயேசுவின் நாமத்தில் ஜெபிப்பது என்பது ஒரு ஜெபத்தில் "இயேசுவின் நாமத்தில்" என்னும் சொற்களை சேர்ப்பதை மட்டும் அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, அவருடைய சித்தத்திற்கு அடிபணிந்து ஜெபிப்பது என்று அர்த்தமாகும்.
ஜெப வீரர்களாக, நாம் எல்லாவற்றிலும் மகிழ்ச்சியடைகிறோம், தேவன் நம் வாழ்விலும் மற்றவர்களின் வாழ்க்கையிலும் என்ன செய்கிறார் என்பதற்காக நன்றி செலுத்தும் ஆவியைக் கொண்டிருக்கிறோம், மேலும் நம்முடைய ஆசீர்வாதங்களின் அளவை நாம் உணரும்போது நம் சொந்த ஆவிகள் நாளுக்கு நாள் வளர்கின்றன. நாம் உள்ளிழுக்கிற சுவாசத்தைக் தேவன் கொடுத்தார் என்பதை நாம் உறுதியாக அறிவோம் (ஏசாயா 42:5); அவர் நமது கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால பாவங்களை மன்னித்துள்ளார் (1 யோவான் 2:12); அவர் நம்மை நித்திய அன்பினாலே நேசிக்கிறார் (எபேசியர் 2:4-7); நம்முடைய கர்த்தருடன் பரலோகத்தில் நமக்கு ஒரு இடம் இருக்கிறது (1 பேதுரு 1:3-5). அப்படியானால், நம் இருதயங்கள் மகிழ்ச்சியினாலும் சமாதானத்தினாலும் நிரம்பியுள்ளன, மேலும் தேவன்மீது அன்பினால் நிரம்பி வழிகின்றன, மற்றவர்களும் இதே அன்பு, சந்தோஷம் மற்றும் சமாதானத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆகையால், அவர்களுக்காக ஜெபிக்கிறதினால் கிரியைச் செய்கிறோம்.
ஊக்கமான ஜெபம் உண்மையில் கிரியைச் செய்கிறது. நாம் தேவனோடு நடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும், எனவே நாம் மேலும் மேலும் தாழ்மையுடன் இருக்க அவரையும் அவருடைய வழிகளையும் தினமும் தியானிக்கிறோம், இது பயனுள்ள ஜெபத்திற்கு அவசியம் (2 நாளாகமம் 7:13-15). தேவனுக்குப் பிரியமானதைக் கற்றுக்கொள்வதற்கும், அதனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஜெபம் எது என்பதைக் கற்றுக்கொள்வதற்கும் நாம் ஒவ்வொரு நாளும் வேதத்தை சிந்தனையுடன் படிக்கிறோம். ஜெபத்திற்கானத் தடைகளை நீக்கவும் (மாற்கு 11:25; 1 பேதுரு 3:7; 1 யோவான் 3:21-22) தேவனுடைய ஆவியைத் துக்கப்படுத்தாமல் இருக்கவும் (எபேசியர் 4:30-32) கற்றுக்கொள்கிறோம். நாம் சாத்தானுடன் ஒரு ஆவிக்குரிய போராட்டத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்துகொள்கிறோம், எனவே நமது பலத்தை நிலைநிறுத்தவும், மற்றவர்களுக்காக ஜெபிப்பதில் கவனம் செலுத்தவும் நம்முடைய சொந்த ஆவிக்குரிய நல்வாழ்வுக்காக நாம் ஜெபிக்க வேண்டும் (எபேசியர் 6:12-18).
ஜெப வீரர்களுக்கு தேவனுக்கான இருதயமும், ஜெபத்திற்கான இருதயமும், ஜனங்களுக்கான இருதயமும் மற்றும் கிறிஸ்துவினுடைய திருச்ச்சபைக்கான இருதயமும் உள்ளது. எனவே, நாம் தொடர்ந்து ஜெபிக்கிறோம், ஒவ்வொரு ஜெபத்திற்கும் தேவன் அவருடைய சரியான சித்தத்தின்படி மற்றும் அவருடைய சரியான நேரத்தில் பதிலளிக்கிறார் என்று நம்புகிறோம்.
English
ஜெப வீரன் என்றால் என்ன?