settings icon
share icon
கேள்வி

தேவதூதர்களிடம் ஜெபிப்பதை வேதாகமம் ஊக்குவிக்கிறதா அல்லது தடைசெய்கிறதா?

பதில்


"நீங்கள் தேவதூதர்களிடம் ஜெபிக்கக் கூடாது" என்று வெளிப்படையாகக் கூறும் வசனம் எதுவும் இல்லை என்றாலும், நாம் தேவதூதர்களிடம் ஜெபிக்கக் செய்யக்கூடாது என்பது தெளிவாகத் தெரிகிறது. இறுதியில், ஜெபம் ஒரு ஆராதனைச் செயல். மேலும், தேவதூதர்கள் நம் ஆராதனையை நிராகரிப்பது போல் (வெளிப்படுத்துதல் 22:8-9), அவர்கள் நம்முடைய ஜெபங்களையும் நிராகரிப்பார்கள். தேவனைத் தவிர வேறு எவருக்கும் நம் ஆராதனை அல்லது ஜெபத்தை வழங்குவது அல்லது ஏறெடுப்பது விக்கிரகாராதனை.

தேவதூதர்களிடம் ஜெபிப்பது தவறு என்பதற்கு பல நடைமுறை மற்றும் இறையியல் காரணங்களும் உள்ளன. கிறிஸ்துவே பிதாவைத் தவிர வேறு யாரிடமும் ஜெபித்ததில்லை. ஜெபிக்க கற்றுக்கொடுங்கள் என்று அவருடைய சீடர்கள் கேட்டபோது, "நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே...'" என்று அவர் ஜெபிப்பதற்கு அறிவுறுத்தினார் (மத்தேயு 6:9; லூக்கா 11:2). தேவதூதர்களிடம் ஜெபம் செய்வது, அவருடைய சீடர்களாகிய நாமும் செய்ய வேண்டிய ஒன்று என்றால், அவர் நமக்கு அதைச் சொல்லும் இடமாக இது இருந்திருக்கும். தெளிவாக, நாம் தேவனிடம் மட்டுமே ஜெபிக்க வேண்டும். இது மத்தேயு 11:25-26 இல் தெளிவாகத் தெரிகிறது, அங்கு கிறிஸ்துவின் ஜெபம் தொடங்குகிறது, "பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! நான் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்...." இயேசு பிதாவிடம் ஜெபிப்பதன் மூலம் மட்டுமல்லாமல், ஜெபங்கள் பொதுவாக சர்வ வல்லமையுள்ள, சர்வ ஞானியாகிய மற்றும் சர்வ வியாபியாக இருக்கக் கூடிய வல்லமை நிறைந்தவர் மட்டுமே ஜெபங்களுக்குப் பதில் கொடுக்க முடியும் என்கிற அவருடைய உள்ளடக்கத்தையும் குறிப்பிட்டு உதவியை நாடுகிறார். தேவதூதர்களிடம் ஜெபம் செய்வது பயனற்றது, ஏனென்றால் அவர்கள் சிருஷ்டிக்கப்பட்ட உயிரினங்கள் மற்றும் இந்த வல்லமைகளைக் கொண்டிருக்கவில்லை.

யோவான் 17:1-26 இல் இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களின் சார்பாக ஜெபிக்கிறார், பரிசுத்தமாக்குதல், மகிமைப்படுத்தப்படுதல் மற்றும் பாதுகாத்தல் உட்பட பிதாவாகிய தேவனிடமிருந்து பல ஆசீர்வாதங்களைக் கோருகிறார். இந்த மூன்று ஆசீர்வாதங்களும் தற்போது அவற்றைக் கொண்டிருக்கும் ஒரு மூலத்திலிருந்து மட்டுமே வர முடியும். மீண்டும், தேவதூதர்களுக்கு இந்த வல்லமை இல்லை. தேவதூதர்களால் நம்மைப் பரிசுத்தமாக்க முடியாது, அவர்களால் நம்மை மகிமைப்படுத்த முடியாது, மேலும் அவர்கள் கிறிஸ்துவில் நம் சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது (எபேசியர் 1:13-14).

இரண்டாவதாக, யோவான் 14:13 இல் கிறிஸ்து தாமே விசுவாசிகளிடம் அவருடைய நாமத்தில் நாம் என்ன கேட்டாலும், அவர் பிதாவிடம் நேரடியாக மன்றாடுவதால் அவர் கொடுப்பார் என்று சொல்லும் ஒரு சந்தர்ப்பம் உள்ளது. தேவதூதர்களிடத்தில் ஜெபம் செய்வது பயனுள்ள மற்றும் வேதாகம வழிகாட்டுதலுடன் கூடிய ஜெபத்தை இழக்கும் (யோவான் 16:26 ஐயும் பார்க்கவும்). தேவதூதர்கள் அல்லது வேறு எந்த சிருஷ்டிக்கப்பட்ட உயிரினங்களும் பிதாவின் முன்பாக பரிந்துபேசுபபவர்களாக சித்தரிக்கப்படவில்லை. குமாரனும் பரிசுத்த ஆவியும் மட்டுமே (ரோமர் 8:26) பிதாவின் சிங்காசனத்திற்கு முன்பாக்க பரிந்து பேச முடியும்.

கடைசியாக, 1 தெசலோனிக்கேயர் 5:17 விசுவாசியை இடைவிடாமல் ஜெபிக்கச் சொல்கிறது. ஒரு விசுவாசி எப்போதும் இருக்கிற மற்றும் ஒவ்வொரு நபரின் வேண்டுகோளையும் ஒரே நேரத்தில் கேட்கும் வல்லமைக் கொண்ட தேவனை அணுகினால் மட்டுமே இது சாத்தியமாகும். தேவதூதர்களுக்கு இந்த திறமை இல்லை—அவர்கள் எங்கும் இல்லை அல்லது அவர்கள் சர்வ வல்லமையுள்ளவர்கள் அல்ல—நம்முடைய ஜெபங்களைப் பெற தகுதியற்றவர்கள். கிறிஸ்துவின் மூலம் பிதாவிடம் ஜெபம் செய்வதே தேவனுடன் நாம் தொடர்பு கொள்ள தேவையான மற்றும் பயனுள்ள வழிமுறையாகும். ஆகவே, தேவதூதர்களிடம் ஜெபம் செய்வது முற்றிலும் வேதாகமக் கருத்து அல்ல, நாம் அவர்களிடத்தில் ஜெபிக்கக் கூடாது.

English



முகப்பு பக்கம்

தேவதூதர்களிடம் ஜெபிப்பதை வேதாகமம் ஊக்குவிக்கிறதா அல்லது தடைசெய்கிறதா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries