கேள்வி
மரித்தவர்களிடம் ஜெபம் செய்வது / பேசுவது குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்
மரித்தவர்களிடம் ஜெபம் செய்வது வேதாகமத்தில் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. உபாகமம் 18:11, “செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவன்,” “இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்” என்று கூறுகிறது. இறந்துபோன சாமுவேலின் ஆவியை எழுப்பிக் கொண்டுவருவதற்காக சவுல் ஒரு அஞ்சனம்பார்க்கிற ஸ்திரீயை ஆலோசித்த கதையில், "சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்” (1 சாமுவேல் 28:1-25; 1 நாளாகமம் 10:13-14). ஆகவே அப்படிப்பட்ட காரியங்களைச் செய்யக்கூடாது என்று தேவன் அறிவித்திருக்கிறார்.
தேவனுடைய குணாதிசயங்களைக் கவனியுங்கள். தேவன் எங்கும் நிறைந்திருக்கிறார்—எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில்—உலகில் உள்ள ஒவ்வொரு ஜெபத்தையும் கேட்கக்கூடியவர் (சங்கீதம் 139:7-12). மறுபுறம், ஒரு மனிதனுக்கு இந்த பண்பு இல்லை. மேலும், ஜெபத்திற்கு பதிலளிக்கும் ஆற்றல் உடையவர் தேவன் ஒருவரே. தேவன் சர்வ வல்லமையுள்ளவர்—எல்லா வல்லமையும் உள்ளவர் (வெளிப்படுத்துதல் 19:6). நிச்சயமாக இது ஒரு மனிதனுக்கு — இறந்துபோன அல்லது உயிருடன் இருக்கிற மனிதனுக்கு இல்லாத பண்பு ஆகும். இறுதியாக, தேவன் எல்லாம் அறிந்தவர்—அவர் அனைத்தையும் அறிந்தவர் (சங்கீதம் 147:4-5). நாம் ஜெபிப்பதற்கு முன்பே, தேவன் நம்முடைய உண்மையான தேவைகளை அறிந்திருக்கிறார், நம்மை விட அவற்றை நன்றாக அறிந்திருக்கிறார். அவர் நம்முடைய தேவைகளை அறிந்திருப்பது மட்டுமல்லாமல், அவருடைய பரிபூரண சித்தத்தின்படி நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார்.
எனவே, இறந்த ஒருவர் ஜெபங்களைப் பெறுவதற்கு, இறந்த நபர் பிரார்த்தனையைக் கேட்க வேண்டும், அதற்கு பதிலளிக்கும் ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும், மேலும் தனிப்பட்ட ஜெபங்களுக்கு சிறந்த முறையில் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். தேவன் மட்டுமே ஜெபத்தைக் கேட்கிறார் மற்றும் பதிலளிப்பார், ஏனெனில் அவருடைய பரிபூரணமுள்ள சாராம்சம் மற்றும் சில இறையியலாளர்கள் அவருடைய "உள்ளார்ந்து" என்று அழைக்கிறார்கள். உள்ளார்ந்து என்பது தேவனுடைய குணமாகும், இது அவரை மனிதகுலத்தின் விவகாரங்களில் நேரடியாக ஈடுபட வைக்கிறது (1 தீமோத்தேயு 6:14-15); பிரார்த்தனைக்கு பதிலளிப்பதும் இதில் அடங்கும்.
ஒரு நபர் இறந்த பிறகும், தேவன் அந்த நபருடனும் அவர் சேருமிடத்துடனும் தொடர்பு கொள்கிறார். எபிரேயர் 9:27 இவ்வாறு கூறுகிறது: "...ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது." ஒரு நபர் கிறிஸ்துவில் இறந்தால், அவர் கர்த்தருடன் இருப்பதற்காக பரலோகத்திற்குச் செல்லுகிறார் (2 கொரிந்தியர் 5:1-9, குறிப்பாக வசனம் 8); ஒரு நபர் தனது பாவத்தில் இறந்தால், அவர் நரகத்திற்குச் செல்கிறார், இறுதியில் நரகத்தில் உள்ள அனைவரும் அக்கினிக் கடலில் தள்ளப்படுவார்கள் (வெளிப்படுத்துதல் 20:14-15).
தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை மனிதனுக்கும் தேவனுக்கும் இடையில் மத்தியஸ்தராக வழங்கியுள்ளார் (1 தீமோத்தேயு 2:5). இயேசு கிறிஸ்துவை மத்தியஸ்தராகக் கொண்டு, நாம் இயேசு வழியாக தேவனிடம் செல்ல முடியும். நாம் ஏன் ஒரு பாவமுள்ள இறந்த நபரின் வழியாக செல்ல விரும்புகிறோம், குறிப்பாக நாம் அவ்வாறு செய்வது தேவனுடைய கோபத்திற்கு ஆளாகுவோம்?
English
மரித்தவர்களிடம் ஜெபம் செய்வது / பேசுவது குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?