கேள்வி
பிறிமிலேனியலிசம் என்றாள் என்ன?
பதில்
பிறிமிலேனியலிசம் கருத்தின்படி கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன் அவரின் ஆயிரம் வருட ராஜியம், மற்றும் அந்த ஆயிர வருட ராஜியம் என்றால் பூமியின் மேல் கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியாய் இருக்கிறது. கடைசிகால சம்பவங்களை குறித்து வேதத்தில் தெளிவாக பல பகுதிகளில் சொல்லப்பட்டு இருக்கிறது. இதை வியாக்கியானப்படுத்தி மற்றும் புரிந்துகொள்ளவேண்டும் என்றால், இவ்விரண்டு காரியங்களை தெளிவாக புரிந்துகொள்வது அவசியம்: வேதத்தை வியாக்கியானபடுத்த செரியான முறை, மற்றும் இஸ்ரவேல் (யூதர்கள்) மற்றும் சபையின் (கிறிஸ்துவின் சபை) நடுவில் உள்ள வித்தியாசங்களை அறிந்துகொள்ளும் முறை.
முதலாவதாக, வேதத்தை செரியாக வியாக்கியானபடுத்தும் முறை என்னவென்றால், வேத வசனங்களின் பின்னனியின் அடிபடையில் வியாக்கியானம் செய்வதாகும். இதன் அர்த்தம், அந்த வேத பகுதி யாரிடம் சொல்லப்பட்டது, யாரை பற்றி எழுதபட்டது, யார் எழுதினார் இவைகளை கவனத்தில் கொண்டு வியாக்கியானம் செய்வதாகும். இதற்கு அதின் எழுத்தாளர், அதின் கவனிப்பாளர், மற்றும் அதின் சரித்திர பின்னணியை அறிந்து கொள்வது அவசியம். சரித்திர மற்றும் கலாசார பின்னணி அந்த பகுதியின் அர்த்தத்தை தெளிவாக வெளிப்படுத்தும். வேதம் வேதத்தை விளக்கம் செய்கிறது என்பதை நாம் அறிந்து கொள்வது முக்கியம். அதாவது, பெரும்பாலும் ஒரு வேத பகுதி வேதத்தில் வேறே இடத்தில் கூறப்பட்ட தலைப்பு அல்லது பொருளை பற்றி கூறுகிறது. ஆகையால் இந்த பகுதிகளை ஒன்றொடு ஒன்று இணைத்து அதின்படி வியாக்கியான படுத்துவது முக்கியமாகும்.
இறுதியாக மற்றும் மிக முக்கியமானது என்னவென்றால், வேதத்தின் பகுதிகளை சாதாரணமான, வழக்கமான, எளிய, மற்றும் எழுத்தியல் அர்தத்தில் எடுத்து கொள்ளவேண்டும். அந்த பகுதி உள் அர்த்தம் உள்ளதாக குறிப்பிட்டு இருந்தால், அதன் பின்னணியின் அடிப்படையில் புரிந்து கொள்ளவேண்டும். ஆழமான மிக ஆவிக்குரிய அர்த்தத்தை அந்த பகுதியினின்று எடுக்க நாம் முயற்சி செய்ய கூடாது. ஒரு வேத பகுதியை ஆவிக்குரியதாக்குவது மிகவும் ஆபத்தானது, ஏனெனில் அது வசனத்தை வேதத்தின்படி வியாக்கியானம் செய்யவிடாமல் தடுத்து அதின் வாசகரின் மனதில் தோன்றுவதின்படி புரிந்துகொள்ளவைக்கும். பின்பு வியாக்கியானத்திற்கு பொதுவான நியமம் இல்லாமல் போகும். பதிலாக வேத வசனத்தின் அர்த்தம் ஒவ்வொரு நபரின் சொந்த கருத்தின்படி எடுத்துகொள்ளப்படுகிறது. “வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்” (2 பேதுரு-1:20, 21).
இந்த வேதாகம விளக்க நியமங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, இஸ்ரவேல் (ஆபிரகாமின் சந்ததியார்) மற்றும் சபை (அனைத்து புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் ) இரண்டு வேறு குழுக்களாம். இஸ்ரவேல் மற்றும் சபை இவ்விரண்டும் வெவ்வேறு என்று புரிந்து கொள்ளவது அவசியம். ஏனென்றால் இதை நாம் தவறாக புரிந்து கொண்டால், வேதத்தை தவராக வியாக்கியானம் செய்ய நேரிடும். வேதத்தில் இஸ்ரவேலருக்கு தேவன் தந்த (நிறைவேறின மற்றும் நிறைவேறாத) வாக்குதத்தங்களை குறிப்பிடும் பகுதிகளை தவராக விளக்க வாய்ப்புகள் உண்டு. இந்த வாக்குதத்தங்கள் சபைக்கு உபயோகிக்க கூடாது. அதின் பின்னணிஅதை யாருக்கு குறிப்பிடுகிறது என்று தீர்மாணிக்கும் மற்றும் நம்மை சரியான அர்தத்திற்கு நேராய் வழி நடத்தும்.
இந்த கருத்துக்களை நாம் மனதில் கொண்டவர்களாக, வேதத்தில் உள்ள “பிறிமிலேனியல்” கருத்தை விவரிக்கும் பகுதிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆதியாகமம் 12: 1-3: “கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.”
தேவன் இங்கே ஆபிரகாமுக்கு மூன்று காரியங்களை வாக்கு பண்ணினார்: ஆபிரகாமுக்கு பல சந்ததிகள் வருவார்கள் என்று, இந்த தேசம் ஒரு இடத்தை சுதந்தரிக்கும் என்று, ஆபிரகாமின் சந்ததி (யூதர்கள்) மூலமாக எல்லா மனுக்குலத்திற்க்கும் ஆசீர்வாதாம் வரும் என்று சொன்னார்.தேவன் ஆபிராகமுக்கு பண்ணின உடன்படிக்கயை உறுதி பண்ணினார். இப்படி செய்ததினால், தேவன் அந்த உடன்படிக்கை உடைய பொறுப்பை தம்மேல் ஏற்று கொண்டார். அதாவது, ஆபிராகம் சில காரியங்களை செய்வதாலோ அல்லது செய்ய தவறுவதாலோ இந்த உடன்படிக்கையை மாற்ற முடியாது. இந்த பகுதியில், யூதர்கள் குடியேற இருக்கிற இடத்திற்கு எல்லைகள் குறிப்பிட பட்டுள்ளது. உபாகமம் 34, இந்த எல்லைகளின் பட்டியல் கொடுக்க பட்டுள்ளது. இந்த இடத்தை குறித்த வாக்குத்த்ங்களை நாம் உபாகமம் 30:3-5 மற்றும் ஏசேக்கியேல் 20:42-44 பார்க்கலாம்.
2 சாமுவேல் 7:10-1, தேவன் தாவீது ராஜாவுக்கு செய்த வாக்குதத்தை பார்க்கிறோம். இங்கே, தாவீதுக்கு சந்ததிகள் பிறக்கும் என்றும் மற்றும் அந்த சந்ததிகள் மூலம் தேவன் நித்திய ராஜியத்தை ஸ்தாபிப்பார் என்றும் வாக்கு பண்ணுகிறார். இது கிறிஸ்துவின் ஆயிர வருட மற்றும் நிரந்தர அரசாட்சியை குறிப்பிடுகிறது. இந்த வாக்குத்ததம் இன்னும் நிறை வேறவில்லை. சிலர் இந்த வாக்குதத்தம் சாலமோன் வாழ்க்கையில் நிறைவேறினதென்று நம்புகின்றனர், ஆனால் இந்த கருத்தில் ஒரு பிரச்சனை உண்டு. சாலமோன் ஆண்ட காலத்தில் இருந்த பிரதேசம் இப்பொதிருக்கிற இஸ்ரவேலரின் இடம் அல்ல மற்றும் சாலமோன் இன்று இஸ்ரவேலரின் ராஜாவாக இல்லை. ஆபிரகாமின் சந்ததியார் நிரந்தரமான ஒரு இடத்தை அடைவார்கள் என்று தேவன் வாக்குத்ததம் பண்ணினதை ஞாபகபடுத்தி பாருங்கள். 2 சாமுவேல் 7, நித்தியமாய் அரசாலும் ஒரு ராஜாவை ஏற்படுத்துவதாக தேவன் கூறியுள்ளார். சாலமோனின் மூலம் இந்த வாக்குதத்தம் நிறைவேறவில்லை. இது நிறைவேற போகிறதான வாக்குதத்தம்.
இப்போது இவையெல்லாம் மனதில் கொண்டவர்களாக வெளிபடுத்தல் 20:1-7 என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம். இந்த வசனங்களில் குறிப்பிடப்பட்ட ஆயிர வருடங்கள் என்பது கிறிஸ்து பூமியின் மேல் ஆயிர வருடங்கள் அரசாட்சி செய்வதை சுட்டி காட்டுகின்றது. தாவிதுக்கு தேவன் தந்த வாக்குத்ததம் இன்னும் நிறைவேறவில்லை. பிறிமிலேனியலிசத்தின் கருத்து என்னவென்றால், இந்த வேத பகுதி கிறிஸ்து மூலமாக நிறைவேற இருக்கிற வாக்குதத்தத்தை குறிப்பிடுகிறது என்று கருதுகிறது. எந்த நிபந்தனையும் இல்லாமல் ஆபிரகாம் மற்றும் தாவீதுடன் உடன்படிக்கை பண்ணினார். இந்த இரண்டு உடன்படிக்கைகளும் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை. கிறிஸ்துவின் உண்மையான, வெளிப்படையான ஆளுகை பூமியின் மேல் வருவதின் மூலமாய் இந்த வாக்குதத்தங்கள் நிறைவேறும்.
இதை எழுத்தின்படி வியாக்கியானம் செய்வதின் மூலம் இந்த வசனங்களை புரிந்துகொள்ள முடியம். பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட இயேசுவின் முதலாம் வருகையின் தீர்கதரிசனங்கள் எழுத்தின்படி நிறைவேறின. ஆகையால், இரண்டாம் வருகையின் தீர்கதரிசனங்களும் அப்படியே நிறைவேறும் என்று நாம் எதிர் நோக்க வேண்டும். பிறிமிலேனியலிசம் மாத்திரமே தேவனின் உடன்படிக்கைகள் மற்றும் இருதி கால தீர்கதரிசனங்களை எழுத்தின்படி வியாக்கியானம் செய்கிறது.
English
பிறிமிலேனியலிசம் என்றாள் என்ன?